அனாக்சிமாண்டர்

அனாக்சிமாண்டர் (Anaximander, கிரேக்கம்: Ἀναξίμανδροςஅனாக்சிமாண்ட்ரோசு, Anaximandros; அண். கிமு 610 – அண். கிமு 546) என்பவர் மிலெத்தெசு நகரில் (இன்றைய துருக்கியில்) வாழ்ந்த சாக்கிரட்டீசுக்கு முற்பட்ட காலக் கிரேக்க மெய்யியலாளர் ஆவார்.[3]

அனாக்சிமாண்டர்
Anaximander
பிறப்புஅண். கிமு 611
இறப்புஅண். கிமு 546
காலம்சாக்கிரட்டீசுக்கு முற்பட்ட மெய்யியல்
பகுதிமேற்கத்தைய மெய்யியல்
பள்ளியவன மெய்யியல், மிலேசிய மெய்யியல், இயற்கையியல்
முக்கிய ஆர்வங்கள்
மீவியற்பியல், வானியல், வடிவவியல், புவியியல்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
உயிரினங்களின் படிமலர்ச்சிக்
கண்ணோட்டம்[1][2]
புவிப்பரப்பு வளைவு
வானின் தன்மை,
ஆவியாதல் மூலம் மழைநீர்
செல்வாக்குச் செலுத்தியோர்
செல்வாக்குக்கு உட்பட்டோர்

அனாக்சிமாண்டர் தேலேசுவின் மாணவர் என்பதைத் தவிர இவர் வாழ்க்கையைப் பற்றி ஏதும் தெரியவில்லை. தனது ஆய்வுகளை எழுத்தில் எழுதி வைத்த முதலாவது மெய்யியலாளர் இவரெனக் கூறப்படுகிறது.[4] இவரோடு பல கண்டுபிடிப்புகள் தொடர்பு படுத்தப்படுகின்றன. இவர் சூரியக் கடிகைகைக்கான "குனோமோன்" (gnomon) என்ற கருவியை கிரேக்கத்திற்கு அறிமுகம் செய்தார். அதைக் கொண்டு துல்லியமாக இரு சிறும, பெரும கதிர்மீள்வு நாட்களைக் கண்டுபிடித்ததோடு இரு சமபகலிரவு நாட்களையும் கணித்துள்ளார்.[5] இவை ஆண்டின் பருவக் காலங்களோடு தொடர்புடையவை. நீரியல் சுழற்சி பற்றி முதலில் கூறியவர் இவரே.

இவர் தொல்பாழ் (Archie)/ (apeiron) என்பதில் இருந்தே அனைத்துப் பொருள்களும் உருவாகின என்ற ஒருமைத் தோற்றக் கருத்தினைக் கூறியவர். 'இயற்கை பற்றி' என இவர் எழுதிய முதல் மெய்யியல்-சார்ந்த கிரேக்க நூல் கிடைக்கவில்லை. விண்ணுலகின் தோற்றம், புவியின் தோற்றம், மாந்தத் தோற்றம் பற்றி விளக்கும் படிவளர்ச்சி/மலர்ச்சிக் கண்ணோட்டத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்தி, புவிப்பரப்பு வளைந்துள்ளதையும் கிழக்கு மேற்காக புவி உருளைவடிவில் புடவியின் மையத்தில் அமைந்துள்ளதாகவும் கூறி, முதல் உலக நிலவரையையும் வரைந்துள்ளார். மேலும் புவியைச் சுற்றி மூன்று வலயங்களில் சூரியனும் நிலாவும் விண்மீன்களும் அமைந்துள்ளதாகக் கூறினார்.[6]

அடிக்குறிப்புகள்

தொகு
  1. டீல்சு-கிரான்சு எண்கள் ஏ11, ஏ30
  2. "Anaximander". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்.
  3. "Anaximander" in Chambers's Encyclopædia. London: George Newnes, 1961, Vol. 1, p. 403.
  4. Themistius, Oratio 36, §317
  5. These accomplishments are often attributed to him, notably by Diogenes Laertius (II, 1) and by the Roman historian Eusebius of Caesarea, Preparation for the Gospel (X, 14, 11).
  6. I. Frolov, Editor, Dictionery of Philosophy, Progressive Publishers, Moscow,1984, p. 18.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனாக்சிமாண்டர்&oldid=3603334" இலிருந்து மீள்விக்கப்பட்டது