அனாதி சரண் தாசு
இந்திய அரசியல்வாதி
அனாதி சரண் தாசு (Anadi Charan Das) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1935 ஆம் ஆண்டு சனவரி மாதம் 04 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இவர் 1971, 1980 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் ஒடிசாவின் சாச்ப்பூர் தொகுதியில் போட்டியிட்டு இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989 மற்றும் 1991 ஆம் ஆண்டுகளில் சனதா தளத்தின் உறுப்பினராக இவர் இருந்தார். ஆனால் சர்ச்சைக்குரிய சூழ்நிலையில் இந்திய தேசிய காங்கிரசில் மீண்டும் இணைந்தார். இவ்விணைப்பு 1993 ஆம் ஆண்டு சூலை மாதம் 28 அன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் இராம் லக்கன் சிங் யாதவ் தலைமையிலான குழுவுடன் நரசிம்மராவ் அரசாங்கத்தை காப்பாற்ற உதவியது.[1][2][3]
அனாதி சரண் தாசு Anadi Charan Das | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1971–1977 1980–1996 | |
தொகுதி | தாச்பூர் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பிச்சிப்பூர், கட்டக், பீகார் மற்றும் ஒரிசா மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் | 4 சனவரி 1935
இறப்பு | 16 சூன் 2023 புவனேசுவரம், ஒடிசா, இந்தியா | (அகவை 88)
அரசியல் கட்சி | ஜனதா தளம் |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | நேத்ராமணி தாசு |
பிள்ளைகள் | 4 மகன்கள், 1 மகள் |
மூலம்: [1] |
அனாதி சரண் தாசு 2023 ஆம் ஆண்டு சூன் மாதம் 16 ஆம் தேதியன்று காலமானார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Partywise Comparison since 1977 Jajpur Parliamentary Constituency". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 24 October 2015.
- ↑ "Former Mp Sent To Jail For Threatening Jmm Case Witness". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 13 February 1997. பார்க்கப்பட்ட நாள் 28 October 2015.
- ↑ "Chronology of the JMM MPs' bribery case". Rediff. 29 September 2000. பார்க்கப்பட்ட நாள் 28 October 2015.
- ↑ "Five times MP from Odisha Anadi Charan Das passes away". UniIndia. 16 June 2023. பார்க்கப்பட்ட நாள் 21 June 2023.