அனார்கலி மரிக்கார்

அனார்கலி மாரிகர் (Anarkali Marikar) மலையாளத் திரைப்படங்களில் நடிக்கும் ஓர் இந்திய நடிகை ஆவார்.

அனார்கலி மரிக்கார்
பிறப்புகொச்சி, கேரளா, இந்தியா
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்மார் இவானியோசு கல்லூரி, திருவனந்தபுரம்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2016–முதல்
பெற்றோர்
  • நியாஸ் மர்லிகர்
  • லாலி பி. எம்.
உறவினர்கள்இலட்சுமி மர்லிகர் (சகோதரி)

ஆரம்பகால வாழ்க்கை தொகு

நியாசு மாரிகர் மற்றும் லாலி பி. எம். ஆகியோருக்கு அனார்கலி மகளாகப் பிறந்தார். இவரது தந்தை ஒரு புகைப்படக் கலைஞர் ஆவார். தாய் ஒரு நடிகை. இவருக்கு இலட்சுமி மாரிகர் என்ற மூத்த சகோதரியும் உள்ளார். இவர் மலையாளத் திரைப்படமான நம்பர் 1 சினேகதீரம் பெங்களூர் வடக்கு-ல் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அனார்கலி திருவனந்தபுரத்தில் உள்ள மார் இவானியோஸ் கல்லூரி மக்கள் தகவல்தொடர்பில் பட்டம் பெற்றார். தனது சகோதரியின் நண்பரான ஒளிப்பதிவாளர் அனந்த் சி. சந்திரன் மூலம் தனது முதல் படமான ஆனந்தத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.[1]

தொழில் தொகு

அனார்கலி 2016ஆம் ஆண்டில் பதின்மக் காதல்-நகைச்சுவை படமான ஆனந்தத்தில் துணை வேடத்தில் அறிமுகமானார். இவரது இரண்டாவது படமான விமானத்தில் (2017) பிருத்விராஜ் சுகுமாரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் அறிமுக இயக்குநர் பிரதீப் நாயர் இயக்கியுள்ளார். இதன்பிறகு, அறிமுக இயக்குநர் நிசாத் இப்ராகிம் இயக்கிய அமலாவில் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்தார்.

2018ஆம் ஆண்டில், மந்தாரம் படத்தில் ஆசிப் அலிக்கு இணையாக தேவிகாவாக நடித்தார்.[2][3] 2019ஆம் ஆண்டில், அறிமுக இயக்குநர் மனு அசோகனின் உயாரே படத்தில் பார்வதி திருவோத்து, டோவினோ தாமஸ் மற்றும் ஆசிப் அலி ஆகியோருடன் நடித்தார்.[4] மன்னு முன்னதாக அனார்கலியுடன் விமானத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றினார். கதாநாயகியான பல்லவிக்கு (பார்வதி) நண்பரான சரியா டி கோஸ்டா என்ற இவரது பாத்திரம் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டது. அறிமுக இயக்குநர் சனில் களத்தில் இயக்கிய மார்கோனி மத்தாய் படத்திலும் இவர் விருந்தினர் வேடத்தில் நடித்துள்ளார்.

திரைப்படவியல் தொகு

குறி
  இதுவரை வெளிவராத படங்களைக் குறிக்கிறது
ஆண்டு தலைப்பு பங்கு குறிப்புகள்
2016 ஆனந்தம் தர்ஷனா
2017 விமணம் கௌரி
2018 மந்தாரம் தேவிகா
2019 உயரே சரியா டி கோஸ்டா [5]
மார்கோனி மாத்தாய் கேமியோ
2022 பிரியன் ஒட்டத்திலனு ஜியா
2023 ஆ 32 முத்தல் 44 வரே ஜியா [6]
சுலைகா மன்சில் ஹல [7]
ஜானகி ஜானே மரியா [8]
அமலா ஷெரின் [9]
கிர்க்கன் ரேச்சல் [10]

மேற்கோள்கள் தொகு

  1. Mohandas, Vandana (20 October 2017). "Anarkali emerges from the shadows". Deccan Chronicle. https://www.deccanchronicle.com/entertainment/mollywood/201017/anarkali-emerges-from-the-shadows.html. 
  2. "Anarkali Marikar opposite Asif Ali". Deccan Chronicle. 21 September 2017. http://deccanchronicle.com/entertainment/mollywood/210917/anarkali-marikar-opposite-asif-ali.html. 
  3. "Asif Ali to romance Anarkali in Mandaram". The New Indian Express. 21 September 2017. https://www.newindianexpress.com/entertainment/malayalam/2017/sep/21/asif-ali-to-romance-anarkali-in-mandaram-1660257.html. 
  4. "Samyuktha Menon, Anarkali Marikar join Parvathy's Uyare". The Times of India. 8 February 2019. https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/samyuktha-menon-anarkali-marikar-join-parvathys-uyare/articleshow/67900271.cms. 
  5. "Manju Warrier reveals first look of Parvathy, Tovino and Asif Ali starrer 'Uyare'". The News Minute (in ஆங்கிலம்). 2019-02-27. பார்க்கப்பட்ட நாள் 2023-04-06.
  6. "B 32 Muthal 44 Vare trailer promises a riveting tale of six women". Cinema Expres] (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-06.
  7. "Sulaikha Manzil makers release new song" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-20.
  8. "Janaki Jaane clears censors with a U certificate" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-07.
  9. "Anarkali Marikar’s ‘Amala’ to be screened at Chennai International Film Festival". 2021-02-16. https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/anarkali-marikars-amala-to-be-screened-at-chennai-international-film-festival/articleshow/80969010.cms. 
  10. "പ്രേക്ഷകരെ ത്രില്ലടിപ്പിച്ചും ചിന്തിപ്പിച്ചും 'കിർക്കൻ'; റിവ്യൂ". ManoramaOnline (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-30.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனார்கலி_மரிக்கார்&oldid=3918501" இலிருந்து மீள்விக்கப்பட்டது