அனிதா அக்னிகோத்ரி

அனிதா அக்னிஹோத்ரி (ஆங்கிலம்: Anita Agnihotri; வங்காள மொழி: অনিতা অগ্নিহোত্রী ; பிறப்பு 24 செப்டம்பர் 1956) என்பவர் இந்தியவினை சேர்ந்த பெங்காலி எழுத்தாளரும் கவிஞரும் ஆவார். இவரது எழுத்துக்கள் ஆங்கிலம், சுவீடன் மற்றும் ஜெர்மன் உள்ளிட்ட முக்கிய இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் (இந்திய ஆட்சிப் பணி 1980 தொகுதி). இவர் இந்தியாவில் வசிக்கிறார்.[1]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில்

தொகு

அனிதா அக்னிகோத்ரி கொல்கத்தாவில் பிறந்து தனது குழந்தைப் பருவத்தைக் கழித்தார். இவர் கொல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். மேலும் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

இவர் 1980-ல் ஒடிசா மாநில இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகத் தேர்வு செய்யப்பட்டார். இவர் குடிமைச் சேவையில் 37 வருட அனுபவமுடையவர். ஆட்சிப்பணி அதிகாரியாக அனிதா ஒடிசாவின் சுந்தர்கட் மாவட்டத்தின் ஆட்சியராகவும், ஜவுளி மற்றும் தொழில்துறை போன்ற துறைகளில் முதன்மை செயலாளராகவும் இருந்துள்ளார். 1991-ல், இவர் இந்திய ஆட்சிப் பணியிலிருந்து கல்வி விடுப்பில் ஐக்கிய இராச்சியத்தின் நார்விச்சில் உள்ள கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தில் வளர்ச்சிப் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

மத்திய அரசில் அனிதா 1996 மற்றும் 2001க்கு இடையில் வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகத்தில் கூட்டுத் தலைமை இயக்குநராகவும், பின்னர் 2008-2011-ல் மும்பை சாந்தாகுரூசு மின்னணு ஏற்றுமதி செயலாக்க மண்டல மேம்பாட்டு ஆணையராகவும் இணைச் செயலாளராக இருந்தார். தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராகவும் இருந்துள்ளார். அனிதா இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் செயலாளராக 2016-ல் ஓய்வு பெற்றார்.

எழுதுத்தாளராக

தொகு

அனிதா சிறு வயதிலேயே எழுதத் தொடங்கினார். எழுத்தாளர் பிமல் கர் இவரது இலக்கிய வாழ்க்கையைத் தொடர ஊக்குவித்தார். பள்ளி மாணவியாக, புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரான சத்யஜித் ரேயின் குழந்தைகள் பத்திரிகையான சந்தேஷ்சில் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவரது எழுத்துலகப் பங்களிப்புகள் புகழ்பெற்ற பெங்காலி எழுத்தாளர் மகாசுவேதா தேவியின் எழுத்துடன் ஒப்பிடப்பட்டுள்ளது.[2]

 
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் செயலாளர், அனிதா அக்னிகோத்ரி

விருதுகள் மற்றும் அங்கீகாரம்

தொகு
  • இந்து பாசு சுமிருதி விருது
  • சாகித்திய சேது விருது
  • பங்களா அகாதமி சோமன் சந்தா விருது, (நந்திகிராமில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனிதா இந்த விருதை திருப்பி அளித்தார்)
  • சரத் விருது
  • பங்கிய சாகித்திய பரிஷத் சம்மான்
  • கோல்போமேலா விருது
  • சைலஜானந்தா சுமிருதி விருது
  • கஜேந்திர குமார் மித்ரா சுமிருதி விருது
  • பிரதிபா பாசு ஸ்மிருதி விருது
  • வங்காள இலக்கியத்திற்கான பங்களிப்பிற்காகக் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் பூபன் மோகினி தாசி தங்கப் பதக்கம்
  • பொருளாதார நிபுணர்-குறுக்கெழுத்து விருது, 2011 ஆம் ஆண்டுக்கான 'இந்திய மொழி புனைகதை மொழிபெயர்ப்பு' பிரிவில் அனிதாவின் பதினேழு கதைகளின் தொகுப்பு, அருணவ சின்ஹாவால் பெங்காலி மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது.
  • கோஞ்ச் சாகித்திய விருது 2022, கோஞ்ச் சாகித்திய பத்ரிகா, மேற்கு வங்கம், இந்தியாவினால் வழங்கப்பட்டது.[3]

நூல் பட்டியல்

தொகு

கவிதைத் தொகுப்புகள்

  • சந்தன் காச் (1987)
  • பிரிஷ்டி அஸ்பே (1992)
  • ஸ்னாஜோவா பாஹினி ஜே (1995)
  • நிர்பச்சிதா கபிதா (1996)
  • பிரெய்லி (2002)
  • கிருதாஞ்சலி மேக் (2008)
  • கபிதா சமக்ரா (2009)
  • மாலிம்ஹார்பர் (2015)
  • அய்னா மாட்ரிசாமா (2016)
  • சிரேஷ்தா கபிதா (2019)[4]

நாவல்கள்

  • மகுல்திஹர் தின் (1996)[5]
  • ஜாரா பலோபெசெச்சிலோ (1998, புதிய சோபன் பதிப்பு 2019)[6]
  • அகல்போதன் (2003)
  • அலிக் ஜிபன் (2006)
  • சுகபாசி (2009)
  • அய்னாய் மனுஷ் நாய் (2013)
  • மகாநதி (2015)[7]
  • உபன்யாஸ் சமக்ரா (2018)
  • காஸ்ட் (2019)[8]
  • மகாகாந்தர் (2021)[9]
  • லாபனாக்டா (2022)[10]

சிறுகதைகளின் தொகுப்புகள்

  • சந்தன் ரேகா (1993)
  • பிரதிக்ஷன் கல்ப சங்கலன் (1997)
  • தாரணி (2000)
  • அடல் ஸ்பர்ஷா (2006)[11]
  • ஷ்ரேஸ்தா கல்பா (2003, விரிவான தொகுப்பு 2018)
  • பஞ்சஷ்டி கல்பா (2012)
  • தஷ்டி கல்பா (2009)
  • பாலோபசார் கல்பா (2018)[12]
  • சேரா பஞ்சஷ்டி கல்பா (2018)[13]
  • பஞ்சஷ்டி கல்பா (2019)[14]
  • பலாஷர் ஆயு (2022)[15]

குழந்தைகள் மற்றும் சிறார் இலக்கியம்

  • அகிம் ஓ பொரிகோனி (1993)
  • அகிம் ஓ ட்வைபர் மனுஷ், அகிம் நிருத்தேஷ், ரத்தன் மாஸ்டர் எர் பாத்ஷாலா, பாண்டி ராஜ்குமார் (2004)
  • ஜாய்ராமர் சிந்துக் (2006)
  • எபு கோகோ (2009)
  • சோட்டோடர் கல்பா சமாக்ரா (2012)[16]
  • சோட்டோடர் கல்பமேலா (2020)

கட்டுரைத் தொகுப்புகள் / புனைகதை அல்லாதவை

  • கொல்கத்தா பிரதிமா ஷில்பிரா (2001) [17]
  • உன்னயன் ஓ பிரந்திக் மனுஷ் (2007)
  • தேஷர் பித்தோர் தேஷ் (2013)
  • எய் அந்தரே கே ஜாகே (2019) [18]
  • ராட் படேசர் பாதை (2021) [19]
  • அமர் பிரதிபாதர் பாஷா (2022) [20]
  • ஏபி ஓட்டா & அனிதா அக்னிஹோத்ரி தொகுப்பு: அணை திட்டங்களில் தன்னிச்சையான இடமாற்றம் (nvoluntary Displacement in Dam Projects;) மைக்கேல் செர்னியாவின் முன்னுரை. பிராச்சி பிரகாஷன், 1996.பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8185824037

மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்கள்

  • காதலை அறிந்தவர்கள் (Those who had known love) (2000)[21]
  • ஃபாரஸ்ட் இன்டர்லூட்ஸ் (2001/ பெண்களுக்கான காளி)[22]
  • டாகர் ஐ மஹுல்திஹா (ஸ்வீடிஷ்) (2006 / போக்ஃபோர்லாகெட் டிரானன்)[23]
  • தி அவேக்கனிங் (2009/ ஜுபான்)[24]
  • சப்டோஜ் (2013)[25]
  • செவெண்டீன் (2015/ Zubaan)[26]
  • மஹுல்திஹா நாட்கள் (2018/ஜுபான்)[27]
  • ஏ டே இன் தி லைப் ஆப் மங்கள் தாரம் (2020)[28]
  • தி சிகில் (2021)[29]
  • மகாநதி (2021/ நியோகி புத்தகம்)[30]

மேற்கோள்கள்

தொகு
  1. Bio
  2. "Brave in Babudom". https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/brave-in-babudom/article28152369.ece. 
  3. "খোঁজ সাহিত্য পত্রিকা". www.facebook.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-19.
  4. "Shrestha Kavita, Anita Agnihotri, bestseller, poem, collection of Bengali poems | Deyspublishing". www.deyspublishing.com. Archived from the original on 2021-04-20. பார்க்கப்பட்ட நாள் 2021-04-20.
  5. "Ananda Publishers". www.anandapub.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-25.
  6. "Jara Bhalobesechhilo – Sopan" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-20.
  7. "Mahanadi, Anita Agnihotri, bestseller, novel, Bengali novel | Deyspublishing". www.deyspublishing.com. Archived from the original on 2021-04-20. பார்க்கப்பட்ட நாள் 2021-04-20.
  8. "Kaste, Anita Agnihotri, bestseller, novel, Bengali novel | Deyspublishing". www.deyspublishing.com. Archived from the original on 2021-04-20. பார்க்கப்பட்ட நாள் 2021-04-20.
  9. "Mahakantar, Anita Agnihotri, Bestseller, Novel, Bengali Novel | Deyspublishing". www.deyspublishing.com. Archived from the original on 2021-05-25. பார்க்கப்பட்ட நாள் 2021-05-25.
  10. Limited, Dey's Publishing Private. "Labanakta – Dey's Publishing | Bengali language/Bangla bhasa | Anita Agnihotri - deyspublishing.com". Dey's Publishing (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-19.
  11. "Ananda Publishers". www.anandapub.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-25.
  12. "Bhalobasar Galpo – Sopan" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-20.
  13. "SERA PANCHASTI GALPA, ANITA AGNIHOTRI, SHORT STORIES, BESTSELLER, COLLECTION OF SHORT STORIES". www.deyspublishing.com. Archived from the original on 2021-04-20. பார்க்கப்பட்ட நாள் 2021-04-20.
  14. "Ananda Publishers". www.anandapub.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-25.
  15. "Palasher Ayu". Patra Bharati | Prestigious Bengali Books (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2022-12-07. பார்க்கப்பட்ட நாள் 2022-05-19.
  16. "Chhotoder Golpomela – Sopan" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-20.
  17. "Ananda Publishers". www.anandapub.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-25.
  18. "Ei Andhare ke jage- Anita Agnihotri – Karigar Publishers". பார்க்கப்பட்ட நாள் 2021-04-20.
  19. "Rod Bataser Path, Anita Agnihotri, Bestseller, Autobiography, Bengali Autobiography | Deyspublishing". www.deyspublishing.com. Archived from the original on 2021-05-25. பார்க்கப்பட்ட நாள் 2021-05-25.
  20. "Amar Protibader Bhasha [Anita Agnihotri]". Boighar Dot In (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-19.
  21. Agnihotrī, Anitā. (2000). Those who had known love = Jara Bhalobesecchilo. New Delhi: Srishti Publishers & Distributors. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788187075561.
  22. "Forest Interludes: A Collection of Journals & Fiction – Zubaan" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-20.
  23. "Dagar i Mahuldiha: berättelser och reportage från östra Indien". Bokförlaget Tranan – Köp böcker direkt från våra förlagshyllor (in ஸ்வீடிஷ்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-20.
  24. "The Awakening – Zubaan" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-20.
  25. Agnihotrī, Anitā (2013). Sabotage. New Delhi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788187358732.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  26. "Seventeen – Zubaan" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-20.
  27. "Mahuldiha Days – Zubaan" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-20.
  28. k. b, Pragati (18 April 2020). "Review: A Day in the Life of Mangal Taram". 
  29. "Book excerpt: In The Sickle, Anita Agnihotri foregrounds the lives of Marathwada farmers and migrant workers". 
  30. "Author Anita Agnihotri's next to be based on Mahanadi" (in அமெரிக்க ஆங்கிலம்). The Statesman. 10 February 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-12-08.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிதா_அக்னிகோத்ரி&oldid=4110124" இலிருந்து மீள்விக்கப்பட்டது