அனிதா குமாரசாமி

அரசியல்வாதி

அனிதா குமாரசாமி (Anitha Kumaraswamy) ஜனதா தளம் (மதச்சார்பற்ற) கட்சியைச் சார்ந்த ஒரு இந்திய அரசியல்வாதியும், திரைப்படம் / தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளரும் மற்றும் ஊடக அலைவரிசையின் உரிமையாளரும் ஆவார். தற்போது அவர் ராமநகரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கர்நாடக சட்டப்பேரவையின் உறுப்பினராக உள்ளார், முன்னதாக 2008 முதல் 2013 வரை மதுகிரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் எச்.டி.குமாரசாமியின் முதல் மனைவி ஆவார்.

அனிதா குமாரசாமி
கருநாடக சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2018
முன்னையவர்எச். டி. குமாரசாமி
தொகுதிராமநகரம் சட்டமன்றத் தொகுதி, கருநாடகம்
பதவியில்
2008–2013
முன்னையவர்ஜி. பரமேஸ்வரா
பின்னவர்கே. என். ராஜன்னா
தொகுதிமதுகிரி சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
அனிதா குமாரசாமி

தளகவாரா கிராமம், சிக்கபள்ளாபூர் மாவட்டம், கருநாடகம்
அரசியல் கட்சிஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
பிற அரசியல்
தொடர்புகள்
ஜனதா தளம்
துணைவர்எச். டி. குமாரசாமி (m. 1986)
பிள்ளைகள்நிகில் குமார் (நடிகர்)
வாழிடம்(s)பெங்களூர், கருநாடகம்

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

அனிதா குமாரசாமி கர்நாடகாவின் சிக்கபள்ளாபூர் மாவட்டம், சிந்தாமணி தாலுகா, கைவாரா என்ற புனிதத்தலத்திற்கு அருகில் உள்ள தளகவாரா என்ற ஊரில் பிறந்தார். அவர் 1986 ஆம் ஆண்டில் எச்.டி. குமாரசாமியை மணந்தார், அவர்களுக்கு நிகில் கவுடா [1] [2] [3] என்ற மகன் உள்ளார். இவர் இந்தியாவின் முன்னாள் பிரதமர் எச்.டி.தேவேகவுடாவின் மருமகளும் ஆவார்.

தேவகவுடா குடும்பம் தொகு

குறிப்புகள் தொகு

  1. "Anchor, partner, manager, troubleshooter: For HDK's wife Anitha, Deve Gowda is the role model". 22 May 2018. பார்க்கப்பட்ட நாள் 23 May 2018.
  2. "At Rs 128 cr, Anitha Kumaraswamy richest candidate". 6 August 2013. பார்க்கப்பட்ட நாள் 23 May 2018.
  3. "Who is Kannada actress Radhika, the 'wife' of HD Kumaraswamy?". 23 May 2018. பார்க்கப்பட்ட நாள் 23 May 2018.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிதா_குமாரசாமி&oldid=3785282" இலிருந்து மீள்விக்கப்பட்டது