நிகில் குமார் (நடிகர்)
நிகில் குமாரசாமி (Nikhil Kumarswamy) இவர் ஓர் இந்திய நடிகரும் மற்றும் அரசியல்வாதியுமாவார்.[1] இவர் கன்னட மற்றும் தெலுங்குத் திரையுலகில் நடித்துள்ளார். கன்னட-தெலுங்கு இருமொழி திரைப்படமான ஜாகுவார் (2016) மூலம் நடிகராக அறிமுகமானார்.[2]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுநிகில் குமாரசாமி முன்னாள் கர்நாடக முதல்வர் எச். டி. குமாரசாமியின் மகனும் முன்னாள் இந்தியப் பிரதமர் எச். டி. தேவ கௌடாவின் பேரனும் ஆவார்.[1][2]
2020 பிப்ரவரி 10, பெங்களூரின் தாஜ் வெஸ்ட் எண்டில் காங்கிரசு தலைவரும் ரியல் எஸ்டேட்டருமான எம். கிருஷ்ணப்பாவின் பேத்தியான ரேவதியுடன் நிகில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.[3][4] திருமணம் 2020 ஏப்ரல் 17, அன்று ராம்நகரில் உள்ள ஜனபட லோகாவில் நடைபெற்றது.[5][6]
அரசியல் வாழ்க்கை
தொகு2019ஆம் ஆண்டு இந்திய பொதுத் தேர்தலில் கர்நாடகாவில் ( மக்களவை ) மண்டியா மாவட்டத்தில் இருந்து ஜனதா தளம் (மதச்சார்பற்றது) வேட்பாளராக நிகில் போட்டியிட்டார் [7] . வரலாற்று ரீதியாக இந்திய தேசிய காங்கிரசு மிகவும் வெற்றிகரமான கட்சியாக இருந்ததால், காங்கிரசு- ஜனதா தளம் (மதசார்பற்றது) கூட்டணிக்கு மண்டியா ஒரு பாதுகாப்பான கோட்டையாக கருதப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜனதா தளம் (மதச்சார்பற்றது) மண்டியா மாவட்டத்தில் போட்டியிட்டது.[8][9][10] தேர்தலில் அவர் மறைந்த அம்ரீசின் மனைவி சுமலதாவிடம் 128,876 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 "Nikhil Gowda's first interview is here".
- ↑ 2.0 2.1 "Former PM Deve Gowda and family revel in opening of grandson Nikhil Kumar's film Jaguar". Indianexpress.com. 13 October 2016.
- ↑ "HD Kumaraswamy's Son Nikhil Engaged To Congress Leader's Grand-Niece". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2020-02-10.
- ↑ www.thenewsminute.com https://www.thenewsminute.com/article/nikhil-kumaraswamy-engaged-former-cong-min-s-grandniece-revathi-bengaluru-117873. பார்க்கப்பட்ட நாள் 2020-02-10.
{{cite web}}
: Missing or empty|title=
(help) - ↑ "Preparation begins for Nikhil's wedding - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-06.
- ↑ "Kumaraswamy extends open invite; lakhs may turn up at his son's wedding in April". Hindustan Times (in ஆங்கிலம்). 2020-02-24. பார்க்கப்பட்ட நாள் 2020-03-06.
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ "Mandya (Lok Sabha constituency)", Wikipedia (in ஆங்கிலம்), 2020-02-29, பார்க்கப்பட்ட நாள் 2020-03-06
- ↑ Swamy, Rohini (2019-05-27). "It's down to 86-yr-old Deve Gowda to revive JD(S) as family politics, poll rout threaten party". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-06.
- ↑ Narayanan, Nayantara. "2019 results: With BJP sweeping Karnataka, will the Congress-JD(S) government survive?". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-06.