அனிதா ரெட்டி

அனிதா ரெட்டி (Anita Reddy) என்பவர் கர்நாடகாவைச் சேர்ந்த இந்தியச் சமூக சேவகர் மற்றும் தன்னார்வ நடவடிக்கை மற்றும் சேவைகள் சங்கத்தின் நிறுவனர் ஆவார்.[1][2] இவர் கர்நாடகா மற்றும் ஆந்திராவில் உள்ள குடிசைவாசிகளின் மறுவாழ்வு மற்றும் மேம்பாட்டிற்காகச் செய்த சேவைகளுக்காக நன்கு அறியப்பட்டவர்.[3] இவர் துவாரகா மற்றும் டிஆர்ஐகே அறக்கட்டளைகளின் நிர்வாக அறங்காவலர் ஆவார். குழந்தைகளின் கல்வி மற்றும் பெண்களின் வாழ்வாதாரத்திற்காக பணியாற்றி வருகிறார். இந்திய அரசு 2011ஆம் ஆண்டில் அனிதா ரெட்டிக்கு நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மசிறீ விருதினை வழங்கி கவுரவித்தது.[4]

அனிதா ரெட்டி
விருதுகள்பத்மசிறீ
மகிளா சாதகி விருது
ஜீன் ஹாரிஸ் விருது
பெண் வெற்றியாளர் விருது
நம்ம பெங்களூரு விருது
பி ஆர் எசு ஐ விருது
கெம்பகொளடா விருது
வாழ்நாள் சாதனையாளர் விருது-டி ஏ என் ஏ
வலைத்தளம்
Official web site

வாழ்க்கை

தொகு

ரெட்டி தமிழ்நாட்டில் சென்னையில், ரஞ்சனி ரெட்டி மற்றும் துவாரகநாத் ரெட்டி, தொழிலதிபர் மற்றும் பரோபகாரர் ஆகியோரின் பணக்கார குடும்பத்தில் பிறந்தார்.[5] இவரது பள்ளிப்படிப்பு ஆந்திராவில் உள்ள இரிஷி பள்ளத்தாக்கு பள்ளியிலும், பெண்கள் கிறித்துவக் கல்லூரியிலும் இருந்தது. இதன் பிறகு அமெரிக்காவின் கலிபோர்னியாவிற்குச் சென்றார். பின்னர் தனது குழந்தை பருவ நண்பர், கர்நாடகாவின் முதல் முதல்வர் கிசாம்பள்ளி செங்கல்ராய ரெட்டியின் மகன் பிரதாப் ரெட்டியை மணந்தார்.[5]

1970களின் பிற்பகுதியில் இவர் குடிசைவாசிகளின் நலனுக்காக பணியாற்றத் தொடங்கியபோது இவரது சமூக வாழ்க்கை தொடங்கியது. இவர் தன்னார்வ நடவடிக்கை மற்றும் சேவைகளுக்கான சங்கத்தை 1980இல் நிறுவினார்.[3] குடிசை வசதிகளின் வாழ்வின் வசதிகளை மறுவடிவமைப்பதன் மூலம் சேரிகளில் வாழும் மக்களின் வாழ்க்கை நிலைமை மேம்பாட்டில் பங்களிப்பது இவரது முதல் முயற்சியாக இருந்தது.[5] இவரது சமூக செயல்பாட்டு நடவடிக்கைகள் இவரது தந்தை 1996இல் துவங்கிய துவாராகாந் ரெட்டி ராமாநார்பானம் அறக்கட்டளையின் மூலம் உத்வேகம் பெற்றது.[1][2] தனது செல்வத்தினைப் பயன்படுத்தி இந்த அறக்கட்டளையினை நிர்வகிக்க ரெட்டி கேட்டுக்கொண்டார்.[3] ரெட்டி, கூடுதல் ஆதாரங்களுடன், சேரியில் வாழ்ந்த மக்களுக்குச் சிறந்த வசதிகளை நிறுவுவதற்காக பணியாற்றினார்.[5]

கலம்காரி கலையில் நெசவாளர்கள் மற்றும் கிராமப்புற கைவினைஞர்களின் மேம்பாடு, கைவினைஞர்களுக்கான (துவாரகா) ஒரு சமுதாயத்தை உருவாக்கியது ரெட்டியின் மற்றொரு சாதனையாகும். கலம்காரி கலைச் சமூக அழிவிலிருந்து இக்கலையின் வடிவத்தைப் புதுப்பித்து, கைவினைஞர்களின் தயாரிப்புகளைச் சேகரித்து, சேமித்து விற்பனை செய்வதற்கான தளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு துவாரகா செயல்படுகிறது.[5] ரெட்டியின் அடுத்த திட்டமாக துவாரகநாத் ரெட்டி அறிவுசார் நிறுவனத்தினை தோற்றுவிப்பதாகும். இந்நிறுவனம் தலைமைத்துவ பண்பினை ஏற்படுத்தும் மேம்பாட்டு நிறுவனமாகும். இதற்காக சிக்கபள்ளாப்பூரில் டிஆர்ஐகே விவேக வளாகம் எனப்படும் 40 ஏக்கர் இடத்தைத் தேர்வு செய்துள்ளார். இந்நிறுவனம் நாடகம், இசை, விளையாட்டு, கலை மற்றும் கைவினை மற்றும் காந்திய படிப்புகளை ஏழைமக்களுக்கு வழங்குவதை ஊக்குவிக்கிறது.இச்செயல் திட்டமானது டிஆர்ஐகே-ஜீவனோட்சவா அமைப்பின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.[5][6]

துருக்கி இசுதான்புல்லில் நடைபெற்ற வாழ்விடம் II, மனித குடியேற்ற மாநாடு 1996ல் (ஜூன் 3 முதல் 14 வரை) இந்திய அரசினைப் பிரதிநிதித்துவப்படும் வகையில் கலந்துகொண்டார்.[3] இந்த ஐக்கிய நாடுகள் மாநாடு கென்யாவில் தங்குமிடம் இல்லாதவர்களின் ஆண்டின் ஒரு பகுதியாக நடைபெற்றது [7] இவர் நகர்ப்புற ஏழைகளுக்கான வீட்டுவசதி பற்றிய அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்காகக் கர்நாடக அரசால் அமைக்கப்பட்ட வீட்டுவசதி செயற்குழுவிலும்[7] கர்நாடக குடிசை மாற்று வாரியத்தின் உறுப்பினராகவும் இருந்தார். இவர் ரஞ்சனி துவாரகநாத் ரெட்டி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராகவும் உள்ளார்.[6] கர்நாடக சர்வோதய பிரிவின் அறங்காவலராகவும் உள்ளார்.[7][8]

ரெட்டி ஜீவனோத்சவா, எனும் கலாச்சார அவையின் மூலம் கலையினை வளர்க்க முயல்கின்றார். பெங்களூருவில் உள்ள கேசி ரெட்டி நீச்சல் மையம் தேசிய அளவில் நீச்சல் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளை உருவாக்க வழிவகுத்துள்ளது. நிஷா மில்லட் மற்றும் மேக்னா நாராயணன் இந்த வசதியினைப் பயன்படுத்தி சாதனை புரிந்தவர்களாவார்கள்.[9] இவர் பெண்கள் குரல் அமைப்பின் செயலாளராகவும் மாநில அளவில் குடிசைவாசிகள் கூட்டமைப்பில் பணியாற்றுகிறார்.[7] இவர் பள்ளி சார்ந்த பிரச்சாரங்கள் மற்றும் உரையாடல்களுக்கும் ஏற்பாடு செய்கிறார்.[10]

இவரது தற்போது அரசுப் பள்ளிகள் உட்படப் பல சமூகங்களில் உள்ள ஏழை குழந்தைகளில் பூர்வீக மரபுகள் மற்றும் பாரம்பரிய அறிவை மேம்படுத்தும் முதல் கற்றல் மையமான கலை, உரிமைகள் மற்றும் சமூகங்கள் எனும் அமைப்பினை நிறுவுவதற்கான யோசனையை முன்மொழிந்துள்ளார். இளைஞர்கள் தாங்கள் வாழும் பகுதியின் உள்ளார்ந்த பலம் மற்றும் பிராந்திய வளர்ச்சிக்குப் பொருத்தமான வாய்ப்புகளின் வளங்களைக் கண்டறிய இந்த அமைப்பு உதவும்.

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்

தொகு

ரெட்டி 1997ஆம் ஆண்டில் மகளிர் சாதகி எனும் மகளிர் சாதனையாளர்கள் விருதைப் பெற்றார்.[7] பன்னாட்டு சுழற்கழக ஜீன் ஹாரிஸ் விருதினையும் [11] மகளிருக்கான இந்திய சுழற்விருதினையும் பெற்றார். 2010-11ல் நம் பெங்களூரு அறக்கட்டளையின் ஆண்டின் சிறந்த நபராக அறிவிக்கப்பட்டார்.[7][12] 2011இல், ரெட்டி நான்காவது மிக உயர்ந்த இந்தியக் குடிமை விருதான பத்மசிறீ விருதினை இந்திய அரசிடமிருந்து பெற்றார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Association for Voluntary Action and Service report". Association for Voluntary Action and Service. 2014. பார்க்கப்பட்ட நாள் 20 November 2014.
  2. 2.0 2.1 "Presentation by Anita Reddy". Video. Story Pick. 2014. பார்க்கப்பட்ட நாள் 20 November 2014.
  3. 3.0 3.1 3.2 3.3 "Chai with Manjula". Chai with Manjula. June 2010. Archived from the original on 16 ஜூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 20 November 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. 4.0 4.1 "Padma Shri" (PDF). Padma Shri. 2014. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 Chitra Ramani (25 September 2011). "The Hindu". பார்க்கப்பட்ட நாள் 20 November 2014.
  6. 6.0 6.1 "Kavitha". Kavitha. 2014. Archived from the original on 17 ஜூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 20 November 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. 7.0 7.1 7.2 7.3 7.4 7.5 "Bay Area Desi". Bay Area Desi. 2011. Archived from the original on 29 November 2014. பார்க்கப்பட்ட நாள் 20 November 2014.
  8. "Interview". YouTube. 10 April 2012. பார்க்கப்பட்ட நாள் 20 November 2014.
  9. "Swim Gala". Swim Gala. 2014. பார்க்கப்பட்ட நாள் 20 November 2014.
  10. "Aditi". Aditi. 2014. Archived from the original on 29 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 20 November 2014.
  11. "Rotary". 4 November 2011. பார்க்கப்பட்ட நாள் 20 November 2014.
  12. "Deccan Herald". 9 February 2011. பார்க்கப்பட்ட நாள் 20 November 2014.

 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிதா_ரெட்டி&oldid=3927069" இலிருந்து மீள்விக்கப்பட்டது