அனில் சவுகான்

தரைப்படை கட்டளையாளர் இளநாயகம் அனில் சவுகான் பிவிஎஸ்எம், யுஒய்எஸ்எம், ஏவிஎஸ்எம், எஸ்எம், விஎஸ்எம் (Anil Chauhan) என்பவர் இந்தியத் தரைப்படையின் ஓய்வு பெற்ற தலைமை அதிகாரி ஆவார். இவர் 28 செப்டம்பர் 2022 அன்று பாதுகாப்புப்படைகளின் தலைமைப் படைத்தலைவராக 30 செப்டம்பர் 2022 அன்று பதவியேற்றார்.[1]

அனில் சவுகான்
பாதுகாப்புப்படைகளின் 2வது தலைமைப் படைத்தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
28 செப்டம்பர் 2022 (2022-09-28)
குடியரசுத் தலைவர்திரௌபதி முர்மு
பிரதமர்நரேந்திர மோதி
பாதுகாப்பு துறைராஜ்நாத் சிங்
முன்னையவர்பிபின் இராவத்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமே 18, 1961 (1961-05-18) (அகவை 62)
துணைவர்அனுபமா சவுகன்
முன்னாள் கல்லூரி
விருதுகள் பரம் விசிட்ட சேவா பதக்கம்
உத்தம் சேவா பதக்கம்
அதி விசிட்ட சேவா பதக்கம்
சேனா பதக்கம்
விசிட்ட சேவா பதக்கம்
Military service
பற்றிணைப்பு இந்தியா
கிளை/சேவை இந்தியத் தரைப்படை
சேவை ஆண்டுகள்13 சூன் 1981 – 31 மே 2021
2022 – முதல்
அலகு11வது கூர்க்கா துப்பாக்கி படை
கட்டளைகிழக்குப் படை பிரிவு
III படை

லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே இராணுவத் துணைத் தலைவராகப் பதவி உயர்வு பெற்றதைத் தொடர்ந்து இவர் 2019 செப்டம்பரில் கிழக்கு படைத்தளக் கட்டளைத் தளபதியாகப் பணியாற்றினார்.[2][3]

சவுகான் முன்பு இந்தியத் தரைப்படையின் இராணுவ நடவடிக்கைகளின் தலைமை இயக்குநராக பணியாற்றினார்.[4] இவர் முன்னர் இந்திய தரைப்படையின் III படையின் தளபதியாக இருந்தார். இவர் தரைப்படை கட்டளையாளர் அபய் கிருஷ்ணாவிடமிருந்து இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.[5][6][7][8][9]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

சவுகான், கொல்கத்தா வில்லியம் கோட்டை கேந்திரிய வித்யாலயாவில் பள்ளிக் கல்வியினை முடித்துள்ளார். பின்னர் கடக்வாஸ்லாவில் உள்ள தேசியப் பாதுகாப்பு அகாதமி மற்றும் தேராதூன், இந்தியப் படைத்துறைக் கல்விக்கூடத்தில் இராணுவ பயிற்சி பெற்றுள்ளார்.[5][8]

பணி தொகு

சவுகான் 1981 இல் 11 கூர்க்கா துப்பாக்கி படையினர் பணியில் சேர்ந்தார். இவர் தனது பணியின் போது ஆணையிடுபவராகவும், அறிவுறுத்தும் பணியாளராகவும் மற்றும் அறிவுறுத்தல் வழங்குபவராகவும் பணியாற்றியுள்ளார். சம்மு காசுமீர் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளைத் திறம்படக் கையாளுவதில் அனுபவம் பெற்றவர்.[5][8] அங்கோலாவுக்கான ஐக்கிய நாடுகளின் தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.[5][8]

சூலை 2019-ல், மனோஜ் முகுந்த் நரவனேவினைத் தொடர்ந்து கிழக்குக் கட்டளையின் பொது அலுவலராகவும் நியமிக்கப்பட்டார். பின்னர் இவர் ஆகத்து 31 அன்று இராணுவப் பணியாளர்களின் துணைத் தலைவராக ஆனார்.[10]

சவுகான் 31 மே 2021 அன்று ஓய்வு பெற்றார்.[11]

பாதுகாப்புப் படைத் தலைவர் தொகு

சவுகான் 28 செப்டம்பர், 2022 அன்று பாதுகாப்புப் படைகளின் இரண்டாவது தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.[12]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

சவுகான், கலைஞரான அனுபமாவை மணந்தார்.[13] இந்த தம்பதிக்கு பிரக்யா என்ற மகள் உள்ளார்.[14]

மரியாதைகள் மற்றும் அலங்காரங்கள் தொகு

சவுகானுக்கு, பரம் விசிட்ட சேவா பதக்கம், உத்தம் யுத் சேவா பதக்கம், அதி விசிட்ட சேவா பதக்கம், சேனா பதக்கம் மற்றும் விசிட்ட சேவா பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.[15][16][17]

    வார்ப்புரு:Ribbon devices  
       
வார்ப்புரு:Ribbon devices வார்ப்புரு:Ribbon devices வார்ப்புரு:Ribbon devices வார்ப்புரு:Ribbon devices
வார்ப்புரு:Ribbon devices வார்ப்புரு:Ribbon devices வார்ப்புரு:Ribbon devices வார்ப்புரு:Ribbon devices
பரம் விசிட்ட சேவா பதக்கம் உத்தம் சேவா பதக்கம் அதி விசிட்ட சேவா பதக்கம் சேனா பதக்கம்
விசிட்ட சேவா பதக்கம் சாமன்ய சேவா பதக்கம் சிறப்பு சேவை பதக்கம் ஆபரேஷன் பராக்ரம் பதக்கம்
சைன்ய சேவா பதக்கம் உயர் உயர சேவை பதக்கம் விதேச சேவா பதக்கம் சுதந்திரப் பதக்கத்தின் 50வது ஆண்டு விழா
30 வருட நீண்ட சேவை பதக்கம் 20 வருட நீண்ட சேவை பதக்கம் 9 ஆண்டுகள் நீண்ட சேவை பதக்கம் மோனுவா

தரவரிசை தேதிகள் தொகு

சின்னம் தரவரிசை படைப்பிரிவு நாள்
  இரண்டாவது லெப்டினன்ட் இந்தியத் தரைப்படை 13 சூன் 1981 [18]
  இளயரையர் இந்தியத் தரைப்படை 13 சூன் 1983 [19]
  கலபதி இந்தியத் தரைப்படை 13 ஜூன் 1986 [20]
  சிறுநாயகம் இந்தியத் தரைப்படை 13 சூன் 1992 [21]
  இள பேரரையர் இந்தியத் தரைப்படை 16 திசம்பர் 2004 [22]
  படையணி கட்டளையாளர் இந்தியத் தரைப்படை 1 அக்டோபர் 2005 [23]
  படைப்பகுதி தலைவர் இந்தியத் தரைப்படை 1 சூன் 2009 (பணிமூப்பு 8 சூன் 2008இலிருந்து) [24]
  மேஜர் ஜெனரல் இந்தியத் தரைப்படை 1 சனவரி 2014 (பணிமூப்பு 7 அக்டோபர் 2011 இலிருந்து) [25]
  தரைப்படைத்‌ கட்டளையாளர் இந்தியத் தரைப்படை 1 ஜூலை 2016 [26]
  பாதுகாப்புப்படைகளின் தலைமைப் படைத்தலைவர் இந்திய இராணுவம் 28 செப்டம்பர் 2022

மேற்கோள்கள் தொகு

  1. Gen Anil Chauhan takes charge as India's new CDS
  2. Sep 1, Jayanta Gupta | TNN | Updated (2019-09-01). "Lieutenant General Anil Chauhan takes over as Eastern Army Commander | Kolkata News - Times of India". The Times of India (in ஆங்கிலம்).{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  3. "Lt Gen Naravane relinquishes charge of Eastern Command, to take over as VCOAS". 2019-08-31.
  4. "Lt. Gen Anil Chauhan takes charge as DGMO of Indian Army".
  5. 5.0 5.1 5.2 5.3 "Lt. Gen. Anil Chauhan is new GOC 3 Corps". www.easternmirrornagaland.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-12-05.
  6. "Army Chief General Bipin Rawat reviews security situation in Manipur" (in en-US). The Indian Express. 2017-01-25. http://indianexpress.com/article/india/army-chief-general-bipin-rawat-reviews-security-situation-in-manipur/. 
  7. mizzima (2017-11-07). "Myanmar army vows to throw out Indian rebels" (in en). Mizzima. http://www.mizzima.com/news-regional/myanmar-army-vows-throw-out-indian-rebels. 
  8. 8.0 8.1 8.2 8.3 "Lt Gen Anil Chauhan takes over as GOC Spear Corps 20170101". e-pao.net. பார்க்கப்பட்ட நாள் 2017-12-05.
  9. "Army Installs Lachit Borphukan's Statue at Dinjan Base » Northeast Today" (in en-US). Northeast Today. 2017-06-06. https://www.northeasttoday.in/army-installs-lachit-borphukans-statue-at-dinjan-base/. 
  10. Gurung, Shaurya Karanbir. "Naravane appointed as new Vice Chief of Indian Army, four army commanders appointed". The Economic Times. பார்க்கப்பட்ட நாள் 24 July 2019.
  11. "Lt Gen Manoj Pande relinquishes Command of Andaman & Nicobar Command". Press Information Bureau (Government of India). Press Information Bureau. 31 May 2021. பார்க்கப்பட்ட நாள் 31 May 2021.
  12. PIB(2022-09-28). "Government appoints Lt General Anil Chauhan (Retired) as Chief of Defence Staff (CDS)". செய்திக் குறிப்பு.
  13. "Calcutta shaped me as a soldier: Lt Gen. Anil Chauhan". www.telegraphindia.com.
  14. "All you need to know about Anil Chauhan, India's second Chief of Defence Staff". mint (in ஆங்கிலம்). 28 September 2022.
  15. "LIST OF PERSONNEL BEING CONFERRED GALLANTRY AND DISTINGUISHED AWARDS ON THE OCCASION OF REPUBLIC DAY-2020" (PDF). static.pib.gov.in. பார்க்கப்பட்ட நாள் 28 September 2022.
  16. "390 Republic Day Gallantry and Other Defence Decorations Announced".
  17. "Ashok Chakra Awarded to NK Neeraj Kumar Singh of 13 Rajputana Rifles (Posthumous) 374 Republic Day Gallantry and Other Defence Decorations Announced". archive.pib.gov.in. பார்க்கப்பட்ட நாள் 28 September 2022.
  18. "Part I-Section 4: Ministry of Defence (Army Branch)". The Gazette of India. 24 July 1982. p. 1090. https://egazette.nic.in/WriteReadData/1982/O-0921-1982-0030-40807.pdf. 
  19. "Part I-Section 4: Ministry of Defence (Army Branch)". The Gazette of India. 19 November 1983. p. 1670. https://egazette.nic.in/WriteReadData/1983/O-0884-1983-0047-38821.pdf. 
  20. "Part I-Section 4: Ministry of Defence (Army Branch)". The Gazette of India. 21 March 1987. p. 414. https://egazette.nic.in/WriteReadData/1987/O-0672-1987-0012-30011.pdf. 
  21. "Part I-Section 4: Ministry of Defence (Army Branch)". The Gazette of India. 19 December 1992. p. 2230. https://egazette.nic.in/WriteReadData/1992/O-0470-1992-0051-18786.pdf. 
  22. "Part I-Section 4: Ministry of Defence (Army Branch)". The Gazette of India. 15 October 2005. p. 1890. https://egazette.nic.in/WriteReadData/2005/W_42_2012_119.pdf. 
  23. "Part I-Section 4: Ministry of Defence (Army Branch)". The Gazette of India. 16 September 2006. p. 1295. https://egazette.nic.in/WriteReadData/2006/W_37_2011_072.pdf. 
  24. "Part I-Section 4: Ministry of Defence (Army Branch)". The Gazette of India. 25 June 2011. p. 1180. https://egazette.nic.in/WriteReadData/2011/W_26_2011_088.pdf. 
  25. "Part I-Section 4: Ministry of Defence (Army Branch)". The Gazette of India. 15 August 2015. p. 2132. https://egazette.nic.in/WriteReadData/2015/165120.pdf. 
  26. "Part I-Section 4: Ministry of Defence (Army Branch)". The Gazette of India. 31 December 2016. p. 2678. https://egazette.nic.in/WriteReadData/2016/173373.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனில்_சவுகான்&oldid=3926793" இலிருந்து மீள்விக்கப்பட்டது