அனில் தஸ்மானா

அனில் தஸ்மானா (Anil Dhasmana), இந்தியாவின் வெளிநாட்டு உளவு அமைப்பான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பின் செயலராகவும், தேசிய தொழில்நுட்ப ஆய்வு நிறுவனத்தின் தலைவராகவும்[3], பணியாற்றிய இந்தியக் காவல் பணி அதிகாரி ஆவார்.

அனில் தஸ்மானா
அனில் குமார் தஸ்மானா
செயலாளர், ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு
பதவியில்
31 சனவரி 2017 – 29 சூன் 2019
முன்னையவர்ராஜிந்தர் கண்ணா
பின்னவர்சமந்த் கோயல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 அக்டோபர் 1957 (1957-10-02) (அகவை 67)[1]
பௌரி, உத்தராகண்டம், இந்தியா [2]
தேசியம்இந்தியர்

சுயசரிதை

தொகு

அனில் தஸ்மானா 2 அக்டோபர் 1957 அன்று உத்தராகண்டம் மாநிலத்தின் பௌரியில் பிறந்தார். 1981 மத்தியப் பிரதேச தொகுதி இந்தியக் காவல் பணி அதிகாரியாக 3 டிசம்பர் 1981 அன்று நியமிக்கப்பட்டார். [4] இந்தியாவின் வெளிநாட்டு உளவு அமைப்பான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பின் சார்பாக இலண்டன் மற்றும் பிராங்க்ஃபுர்ட் நகரங்களில் பணியாற்றியவர். பணி ஓய்வுக்குப் பின்னர் 31 சனவரி 2017 முதல் 29 சூன் 2019 முடிய ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பின் செயலராக பணியாற்றினார்.[5][6]30 சூன் 2019 முதல் தேசிய தொழில்நுட்ப ஆய்வு நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. "IPS officers to hold ADG posts at the Centre" (PDF). Ministry of Home Affairs, GOI. Archived from the original (PDF) on 1 சூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 12 மார்ச்சு 2012.
  2. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 22 திசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 18 திசம்பர் 2016.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. [https://www.aninews.in/news/national/general-news/anil-dhasmana-appointed-new-chief-of-ntro20200918224933/ Anil Dhasmana appointed new chief of NTRO
  4. "IPS gradation list" (PDF). Archived from the original (PDF) on 22 திசம்பர் 2016.
  5. "RAW likely new Chief is expert on Balochistan affairs". The Times of Islamabad. 6 திசம்பர் 2016. Archived from the original on 20 திசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 6 திசம்பர் 2016.
  6. "Countdown begins for spy chief posts". The Telegraph. Archived from the original on 5 திசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 4 திசம்பர் 2016.
  7. தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பின் புதிய தலைவராக ரா முன்னாள் தலைவர் அனில் தஸ்மானா நியமிக்கப்பட்டுள்ளார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனில்_தஸ்மானா&oldid=4121063" இலிருந்து மீள்விக்கப்பட்டது