அனுபமா நிரஞ்சனா
அனுபமா நிரஞ்சனா (Anupama Niranjana கன்னடம்: ಅನುಪಮಾ ನಿರಂಜನ ) (1934 – 1991) [1] மருத்துவர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் கன்னட மொழியில் நவீன புனைகதை மற்றும் புனைவிலி படைப்புகளை எழுதியுள்ளார்.
அனுபமா நிரஞ்சனா | |
---|---|
பிறப்பு | வெங்கடலட்சுமி 1934 திர்தகல்லி, இந்தியா |
இறப்பு | 1991 |
பணி | மருத்துவர்,எழுத்தாளர் |
வாழ்க்கைத் துணை | நிரஞ்சனா |
இவர் பெண்ணிய பார்வையோடு தனது படைப்புகளை உருவாக்கியுள்ளார். திரிவேணி மற்றும் எம்.கே இந்திரா ஆகிய சமகால பெண்ணிய சிந்தனையாளார்களோடு இணைந்து அறியப்படுகிறார். இவரது புதினமான ருணமுக்தலுவை புட்டண்ணா கனகல் ஒரு வெற்றிகரமான திரைப்படமாக உருவாக்கினார். [2]
இவரது இயற்பெயர் வெங்கடலட்சுமி ஆகும்.அனுபமா தார்வாடு மற்றும் பெங்களூரில் மருத்துவராகப் பயிற்சி பெற்றார். ஆரம்பகாலம் முதலே சமூக பிரச்சினைகள் குறிப்பாக பெண்கள் பிரச்சினைகள் ஆகியவற்றை மையமாக வைத்து புதினங்கள் மற்றும் கதைகளை எழுதியுள்ளார்.[3] நவீன கன்னட இலக்கியத்தின் முற்போக்கு எழுத்தாளரான கன்னட எழுத்தாளர் நிரஞ்சனாவை மணந்தார். இவர்களது மகள்கள் தேஜஸ்வினி மற்றும் சீமந்தினி பரவலாக அறியப்பட்ட கல்வியாளர்கள். அனுபமா புற்றுநோயால் இறந்தார்.பெண்களுக்காக இவரது பெயரில் ஒரு விருது வழங்கப்படுகிறது. [4]
முக்கிய விருதுகள்
தொகு- கருநாடக சாகித்ய அகாதமி விருது
- சோவியத் லேண்ட் நேரு விருது
சான்றுகள்
தொகு- ↑ Women writing in India, p. 382.
- ↑ Photo on Kamat's Potpourri
- ↑ One of her stories
- ↑ "Anupama Award". Archived from the original on 2004-06-21. பார்க்கப்பட்ட நாள் 2021-03-19.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)