அனுமந்தக்குடி சமணக் கோயில்

அனுமந்தக்குடி சமணப் பள்ளி என்பது சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே அனுமந்தக் குடியில் உள்ள சமணர் பள்ளி ஆகும். தென் தமிழகத்தில் பழமையான சமணர் பள்ளிகள் பெரும்பாலும் மலைக் குகைகளில்தான் இருந்துள்ளன, ஆனால் இந்தக்கோயில் கருங்கல்லால் கட்டப்பட்ட பள்ளியாகத் திகழ்கிறது. மேலும் இது இப்போதும் வழிபாட்டில் உள்ளது.

இக்கோயில் தேவகோட்டையில் இருந்து 10 கிமீ தொலைவில் சுந்தர பாண்டியன்பட்டினம் செல்லும் சாலையில் விருசுழி ஆற்றின் கரையில் உள்ள அனுமந்தக்குடியில் உள்ளது. இது சமணர்களின் 23 ஆம் தீர்த்தங்கரரான பார்சுவநாதருக்கு கட்டப்பட்டது ஆகும். இங்கு கருவறை, முன்மண்டபம், மகா சாத்தையா ஆலயம், பலி பீடம் ஆகியவற்றகை கொண்டதாக உள்ளது. இங்கிருந்த பழைய பார்சுவநாதர் சிலை சேதமானதால் அதற்கு பதில், புதிய சிலை சில ஆண்டுகளுக்கு முன் நிறுவப் பட்டது. பழைய சிலை முன் மண்டபத்தில் வலது பக்கம் வைக்கப் பட்டுள்ளது. இங்கு தர்மதேவி இயக்கி, மகாசாத்தையா, காளி, கருப்பன், மாரியம்மன், கணபதி போன்றோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. பழமையான இக்கோயில், கி.பி 1881 இல் விருசுழி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்து, இதனால் 1885 இல் தற்போதுள்ள இடத்தில் கட்டப்பட்டுள்ளது எனப்படுகிறது.[1]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு