தமிழ்நாட்டில் சமணம்

தமிழ்நாட்டில் சமணம் (Jainism in Tamil Nadu), தமிழ்நாட்டில் சமணத்தின் தோற்றம், வளர்ச்சி மற்றும் தற்போதைய நிலையைக் விளக்குகிறது.

கழுகுமலை சமணர் படுகைகள், தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா

வரலாறு

தொகு

தமிழ்நாட்டில் பொ.ஊ.மு. மூன்றாம் நூற்றாண்டின் துவக்ககால தமிழ்ப் பிராமி கல்வெட்டுகள் மற்றும் பொ.ஊ. எட்டாம் நூற்றாண்டின் திருச்சி மலைக் கோட்டை கல்வெட்டுக்கள் தமிழ்நாட்டில் சமணர்களின் இருப்பை வெளிக்கொணர்கிறது.[1]

தற்கால மக்கள்தொகை பரம்பரல்

தொகு

சமணத்தின் திகம்பரப் பிரிவைச் சேர்ந்த தமிழ்ச் சமணர்கள், தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், குறிப்பாக வட தமிழகத்தின் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், கடலூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர் மாவட்டங்களில் பெருவாரியாக வாழ்கின்றனர். தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகையில், தமிழ்ச் சமணர்களின் எண்ணிக்கை 85,000 (0.13%) ஆகவுள்ளது.

அரசர்களின் ஆதரவு

தொகு
 
சித்தன்னவாசல் குகை ஓவியங்கள், பொ.ஊ. ஏழாம் நூற்றாண்டு, புதுக்கோட்டை மாவட்டம்

களப்பிரர்கள் தமிழ்நாட்டை பொ.ஊ. 3 முதல் 7-ஆம் நூற்றாண்டு வரை ஆண்ட காலத்தில், சமணத்தை ஆதரித்தனர்.[2]

பல்லவர்கள் இந்து சமயத்துடன், சமணத்தையும் ஆதரித்தனர். பல்லவ மன்னர்கள் திரைலோக்கியநாதர் கோயில், சிதறால் மலைக் கோவில்களைக் கட்டி சமணத்தை ஆதரித்தனர்.[3][4]

துவக்கத்தில் சமணத்தை ஆதரித்த பாண்டியர்கள், பின்னர் திருஞானசம்பந்தரால் சைவ சமயத்தின் தழுவிப் போற்றி வளர்த்தனர்.[5]

பாண்டியர்கள், சமண பண்பாட்டுத் தலங்களான சித்தன்னவாசல் குகை ஓவியங்கள், சமணர் மலை, மதுரை, கழுகுமலை சமணர் படுகைகள் போன்றவற்றவை நிறுவினர்.

சோழர்கள் சைவ சமயத்துடன், சமணத்தையும் ஆதரித்தனர்.[6] சோழ மன்னர் முதலாம் இராஜராஜ சோழனின் சகோதரி குந்தவை நாச்சியார் திருமலை சமணர் கோயில் வளாகம் என்ற குந்தவை ஜீனாலயம், திறக்கோயில், பூண்டி அருகர் கோயில், மன்னர்குடி மல்லிநாதர் கோயில்களைக் கட்டினார்கள்

தமிழ் இலக்கியத்தின் மீது சமணத்தின் தாக்கங்கள்

தொகு

 

சங்கத் தமிழ் இலக்கியத்திற்கு சமணர்கள் ஆற்றிய பங்கு அளப்பரியது. சமண முனிவர்கள் இயற்றிய சீவக சிந்தாமணி, நாலடியார் மற்றும் ஐஞ்சிறு காப்பியங்களான உதயணகுமார காவியம், சூளாமணி, நாக குமார காவியம், நீலகேசி, யசோதர காவியம் ஆகியன குறிப்பிடத்தக்கவை. [7] சங்க இலக்கியத்தின், சமண இலக்கியங்கள் எட்டாம் நூற்றாண்டிலோ அதற்குப் பின்னரோ எழுதப்பட்டது என சில அறிஞர்கள் கருதுகிறார்கள்.[8]தமிழின் இரட்டை காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் சமணத்தின் தாக்கம் அதிகம் உள்ளது.[9]

அகராதிகள்

தொகு

பொ.ஊ. எட்டாம் நூற்றாண்டில் சமண திவாகர முனிவர் இயற்றிய திவாகர நிகண்டும், பொ.ஊ. பத்தாம் நூற்றாண்டில் பிங்கல முனிவர் இயற்றிய பிங்கல நிகண்டும், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சூடாமணி நிகண்டும், தமிழ் மொழிக்கு வளம் சேர்த்தன.

கோயில்கள்

தொகு
 
திரைலோக்கியநாதர் கோயில், காஞ்சிபுரம்

பாண்டிய நாட்டில் 26 சமணக் குடைவரைகளும், 200 கல் படுக்கைகளும், 60 கல்வெட்டுகளும் உள்ளன. மேலும் சமணத் துறவிகள் தமிழ் காப்பியங்களையும், தமிழ் இலக்கண நூல்களையும், அகராதிகளையும் இயற்றினர்.[10]

பொ.ஊ. 7–8-ஆம் நூற்றாண்டின் சித்தனானவாசல் குகைகள் சமண ஓவியக் கலைக்கும், குடைவரைகளுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும். மேலும் சித்தன்னவாசல் மலைகளில் வாழ்ந்த சமணத் துறவிகளின் பெயர்கள் ஏழடிப்பட்டம் சமணர் படுக்கை கல்வெட்டுகளாக, பொ.ஊ.மு. 2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி வரி வடிவிலும் மற்றும் பொ.ஊ. எட்டாம் நூற்றாண்டின் தமிழ் வரி வடிவிலும் பொறிக்கப்பட்டுள்ளன.[11]

பொ.ஊ. எட்டாம் நூற்றாண்டின் கழுகுமலை சமணர் சிற்பங்கள் மற்றும் வட்டெழுத்துக கல்வெட்டுகள், தமிழகத்தில் சமணத்தின் மறுமலர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. கழுகுமலைக் ஒற்றைக்கல் கோயிலை பாண்டிய மன்னர் பராந்தக நெடுஞ்செழியன் எழுப்பினார்.[12]

தமிழ்ச் சமணர்களின் சமயத் தலைமையிடமாக மேல்சித்தாமூர் சமண மடம் விளங்குகிறது.[13]

வீழ்ச்சி

தொகு

சமணத்திற்கு தமிழக மன்னர்களின் ஆதரவு குறைந்த காரணத்தினால், சமணம் படிப்படியாக தமிழகத்தில் வீழ்ச்சியடைந்தது.[14] பல்லவ மன்னர் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் (பொ.ஊ. 600 - 630), அப்பரின் தூண்டுதலால் சமணத்திலிருந்து, சைவ சமயத்திற்கு மாறினார்.[15] இப்பல்லவ மன்னர் இயற்றிய மத்தவிலாசம் எனும் நூல் சமணம் மற்றும் பௌத்தத் துறவிகளை எள்ளிநகையாடியது.[16] பொ.ஊ. ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தர், பாண்டிய மன்னர் கூன் பாண்டியனை, சமணத்திலிருந்து சைவ சமயத்திற்கு மதம் மாற்றினார்.

சமணக் குடைவரைக் கோயில்கள், படுக்கைகள் மற்றும் கோயில்கள்

தொகு

மடங்கள்

தொகு

இதனையும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
 1. "Eighth century artefacts on Jainism at Rockfort lie neglected, damaged", தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, 16 July 2016
 2. Kulke, Hermann; Rothermund, Dietmar (2007). A History of India (4th ed.). London: Routledge. p. 105. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780415329200. பார்க்கப்பட்ட நாள் 7 September 2016.
 3. http://www.thehindu.com/thread/arts-culture-society/article8179948.ece
 4. "Chitharal". Tamil Nadu Tourism. பார்க்கப்பட்ட நாள் 23 March 2017.
 5. "Pandya dynasty". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2 June 2017.
 6. Sastri 2002, ப. 339.
 7. Cush, Robinson & York 2012, ப. 515, 839.
 8. Zvelebil 1992, ப. 13–16.
 9. Dundas 2002, ப. 116–117.
 10. S. S. Kavitha (31 October 2012), "Namma Madurai: History hidden inside a cave", தி இந்து
 11. S. S. Kavitha (3 February 2010), "Preserving the past", தி இந்து
 12. "Arittapatti inscription throws light on Jainism", தி இந்து, 15 September 2003, archived from the original on 13 அக்டோபர் 2003, பார்க்கப்பட்ட நாள் 26 ஜனவரி 2019 {{citation}}: Check date values in: |accessdate= (help)
 13. Sangave, Vilas Adinath (2001). Facets of Jainology: Selected Research Papers on Jain Society, Religion, and Culture. Popular Prakashan. p. 135. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788171548392. பார்க்கப்பட்ட நாள் 2012-05-27.
 14. Natubhai Shah 2004, ப. 69–70.
 15. Lochtefeld 2002, ப. 409.
 16. Arunachalam 1981, ப. 170.

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்நாட்டில்_சமணம்&oldid=3873323" இலிருந்து மீள்விக்கப்பட்டது