கழுகுமலை சமணர் படுகைகள்

கழுகுமலை சமணர் படுக்கைகள்[1] (Kalugumalai Jain beds), தமிழ்நாடு மாநிலத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் கழுகுமலை எனும் ஊரில் அமைந்துள்ளது. இச்சமணர் படுகைகள் கோவில்பட்டிலிருந்து 22 கிமீ தொலைவில் கழுகுமலை பேரூராட்சியில் உள்ளது.

கழுகுமலை சமணர் படுகைகள்
கழுகுமலை சமணச் சிற்பங்கள்
கழுகுமலை சமணச் சிற்பங்கள்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்கழுகுமலை, தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு
புவியியல் ஆள்கூறுகள்9°09′02″N 77°42′15″E / 9.15056°N 77.70417°E / 9.15056; 77.70417
சமயம்சமணம்
இணையத்
தளம்
kalugumalaitemple.tnhrce.in

இச்சமணக் கல் படுக்கைகள் குடைவரை கட்டிட அமைப்பில், பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் (பொ.ஊ. 768–800) அமைக்கப்பட்டதாக கருதப்படுகிறது.[2] இங்கு திகம்பர சமணத் துறவிகள் தங்கி, சமண சமயத்தை பரப்பினர்.

இச்சமணப் படுக்கைகளுக்கு அருகில் பொ.ஊ. 8ம் நூற்றாண்டின் சிவன் கோயில், கழுகுமலை வெட்டுவான் கோயில் மற்றும் கழுகுமலை முருகன் கோயில் அமைந்துள்ளது.

இச்சமண படுகைகளில் மகாவீரர், பாகுபலி, பார்சுவநாதர் போன்ற 150 தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. கழுகுமலை சமணர் படுகைகள், தமிழகத் தொல்லியல் துறை பராமரிக்கிறது.

பாகுபலி மற்றும் பார்சுவநாதர் சிற்பங்கள்

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு