அனுராதா பால்
அனுராதா பால் (Anuradha Pal) ஒரு கைம்முரசு இணை கலைஞரும், பல தாளவாதியும், இசையமைப்பாளரும் ஆவார். இவர் பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம், லிம்கா சாதனைகள் புத்தகம் ஆகியவற்றால் உலகின் முதல் தொழில்முறை பெண் தபலா வாசிப்பாளராகப் போற்றப்படுகிறார்.[1][2]
அனுராதா பால் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பிடம் | மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
இசை வடிவங்கள் | இந்துஸ்தானி இசை, உலக இசை, தாள இசைக்கருவி |
தொழில்(கள்) | இசையமைப்பாளர், இசை இயக்குநர், கைம்முரசு இணை நிபுணர் |
இசைக்கருவி(கள்) | கைம்முரசு இணை, பல தாள இசைக்கருவி |
வெளியீட்டு நிறுவனங்கள் | Sur aaur Saaz |
இணையதளம் | www |
தனது சொந்த போராட்டங்களால் தூண்டப்பட்ட இவர், முதன்முதலில் அனைத்து பெண் இந்திய பாரம்பரிய இசை இசைக்குழுவான, ஸ்த்ரீ சக்தியை நிறுவினார்.[3]
இவரது பங்களிப்புகளுக்காக, இவர் பிரதமர் நரேந்திர மோடியால் 2017இல் பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டார்.[4]
இவர் 2006 இல் பெண் அதிகாரம், கல்வி மற்றும் சேர்க்கைக்கான யுனிசெஃப் விளம்பரத் தூதராகவும் இருந்தார்.
அனைத்திந்திய வானொலியின் உயர்தர விதுஷி, கலாச்சார அமைச்சகம் மற்றும் கலாச்சார உறவுகளுக்கான இந்திய மன்றம் ஆகியவற்றில் சிறந்த தரவரிசை இசைக்கலைஞராக இவர் பட்டியலிடப்பட்டார்.[5] 20 ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையான பயிற்சியில் நிறுவப்பட்ட இவரது சிறந்த குரலின் தரம், இசைத்திறன் மற்றும் துல்லியமான தாள கலைத்திறனுக்காக உலகளவில் மதிக்கப்படுகிறது.[6] இந்துஸ்தானி இசை , கருநாடக இசை, உலக இசை, நடனம், கவிதை, ஓவியம் போன்றவற்றுடன் சர்வதேச ஒத்துழைப்புடன்[7] முன்னணி நிபுணர்களுடன் இவருடைய உணர்திறன் மற்றும் சிந்தனைமிக்க துணை போன்றவை.[8]
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஅனுராதா பால் மும்பையில் முக்கிய மருந்து வியாபாரியான, தேவிந்தர் பால்-ஓவியர்- எழுத்தாளர் இலா பால் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார்.[9] பனாரசு கரானாவின் ஸ்ரீ மாணிக்ராவ் போபட்கர் மற்றும் மதன் மிசுரா ஆகியோரின் கீழ் தனது தபலா பயிற்சியைத் தொடங்கினார். இறுதியாக உஸ்தாத் அல்லா ரக்கா மற்றும் பஞ்சாப் கரானாவின் சாகீர் உசேன் [10] ஆகியோரின் கீழ் நன்கு பயிற்சி பெற்ற நிபுணரானார்.
ஒரு குழந்தை அதிசயமாக, இவர் தனது 9வது வயதில் தூர்தர்ஷனுக்காக தனது முதல் நிகழ்ச்சியை வழங்கினார்.[11] இவர் பதினேழு வயதில் மகாராட்டிரா டைம்ஸ் என்ற பத்திரிக்கையால் லேடி சாகிர் உசேன் என்று வர்ணிக்கப்பட்டார்.[12]
பெண் வலுவூட்டலுக்கு பங்களிப்பு
தொகுஅனுராதா 25 ஆண்டுகளுக்கும் மேலாக தனது இசைக்குழுவான ஸ்திரீ சக்தி மூலம், ஆண் ஆதிக்கம் செலுத்தும் துறைகளில் போராடும் மற்ற பெண் இசைக்கலைஞர்களை ஊக்குவித்து வருகிறார்.[13]
சிறீஅக்ரசன் கன்யா பிஜி கல்லூரி (வாரணாசி),[14] ரெபெல் கேர்ள்ஸ் இன்டராக்டிவ் (டெல்லி),[15] ருயா கல்லூரி (மும்பை) ஆகிய இடங்களில் இளம் பெண்களுக்கு சுய-அதிகாரம் மற்றும் சுயமரியாதையை வளர்க்க ஊக்குவிப்பதற்காக இவர் இசை நிகழ்ச்சியினை நிகழ்த்தியுள்ளார்.
கௌரவங்கள்
தொகுபெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விளம்பரத் தூதரான, அனுராதா 'பாரத் கி லக்ஷ்மி',[16] 'ரிதம் குயின்',[17] 'பெர்குஷனிஸ்ட் பார் எக்ஸலன்ஸ்', 'தப்லா நிகழ்வு' (இந்தியா டுடே 2000), இந்திய இசையில் மிகவும் செல்வாக்கு மிக்க பெண் (ஏவி மேக்ஸ் பத்திரிகை 2001), 'தேசிய பெருமை மற்றும் உத்வேகம்' (டிரிப்யூன் 2012), இந்திய பாரம்பரிய இசையின் முக்கிய ஜோதி,[18] மற்றும் 'தூய அதிசய பெண்' மற்ற பெண்களை மேம்படுத்துதல் மற்றும் சமூகத்தின் பார்வையை மாற்றுவது, (சஹாரா டைம்ஸ் 2004) உள்ளிட்ட பல கௌரவங்களை பெற்றுள்ளார்.
லிம்கா சாதனைகள் புத்தகம் 1991 -ல் 'உலகின் முதல் தொழில்முறை பெண் கைம்முரசு நிபுணர்' என்று அங்கீகரித்தது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Showreel - Anuradha Pal". Youtube.
- ↑ "Woman of many rhythms". The Tribune. https://www.tribuneindia.com/2012/20120708/spectrum/book7.htm.
- ↑ "Anuradha Pal's Stree Shakti in 1996". YouTube.
- ↑ "Beti Bachao, Beti Padhao".
- ↑ "All India Radio". Facebook.
- ↑ "6 Gharanas | Anuradha Pal". YouTube.
- ↑ "Collaborations". YouTube.
- ↑ "Tabla Accompaniment". YouTube.
- ↑ "Archived copy". Archived from the original on 30 March 2018. பார்க்கப்பட்ட நாள் 29 September 2019.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Interview with Anuradha Pal–a female Tabla Player". 3 June 2010. Archived from the original on 28 ஆகஸ்ட் 2018. பார்க்கப்பட்ட நாள் 21 செப்டம்பர் 2021.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "Pandita Anuradha Pal's Showreel". Vimeo.
- ↑ "Lady Zakir Hussain - Maha Times". Anuradha Pal. Archived from the original on 2021-07-22. பார்க்கப்பட்ட நாள் 2021-09-21.
- ↑ "Meet Stree Shakti, India’s first all-women classical band". https://www.hindustantimes.com/art-and-culture/meet-stree-shakti-india-s-first-all-women-classical-band/story-8cstvXJdcxW7zsjnPOQS5M.html.
- ↑ "Agrasen Kanya College". Anuradha Pal. Archived from the original on 2021-08-01. பார்க்கப்பட்ட நாள் 2021-09-21.
- ↑ "Rebel Girls". Instagram.
- ↑ "Bharat ki Laxmi". Twitter.
- ↑ "Anuradha Pal Press Clippings". Anuradha Pal. Archived from the original on 2021-08-01. பார்க்கப்பட்ட நாள் 2021-09-21.
- ↑ "Torchbearers". Twitter.
வெளி இணைப்புகள்
தொகு- The Hindu year 2009
- The Hindu year 2006
- Golden Horn Records பரணிடப்பட்டது 2021-09-21 at the வந்தவழி இயந்திரம்
- Berklee College of Music
- South Asian Women’s Network
- Website
- Sur aaur Saaz
- Report on DNA
- The right note on www.masala.com
- Classical musical maestros world on Times of India
- Report on Tribune India
- Report on Mid-day
- operatheatremadlenianum.com
- Report on New York Times பரணிடப்பட்டது 2017-12-25 at the வந்தவழி இயந்திரம்