அனு அகர்வால்

வடிவழகி மற்றும் நடிகை

அனு அகர்வால் ( Anu Aggarwal) 1969 ஜனவரி 11 அன்று பிறந்த இவர் ஒரு முன்னாள் இந்திய நடிகை மற்றும் விளம்பர நடிகை ஆவார். ஆஷ்கி, தி கிளவுட் டோர் மற்றும் திருடா திருடா "ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுகிறார்.[2]

அனு அகர்வால்
பிறப்பு11 சனவரி 1969 (1969-01-11) (அகவை 55)[1]
தில்லி, இந்தியா
மற்ற பெயர்கள்அனு ஆர்யா அகர்வால்
பணிநடிகர், விளம்பர நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1988 முதல் 1996 வரை

தனிப்பட்ட வாழ்க்கை, தொழில்

தொகு

அகர்வால் 1969 ஜனவரி 11 அன்று புது தில்லியில் பிறந்தார், சென்னையில் வளர்ந்தார். தில்லி பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் தங்கப் பதக்கம் பெற்றார்.[3] விளம்பரங்களுக்கு நடிக்க ஆரம்பித்த பின்னர், "சொல்லாடல் நிகழ்ச்சி நடத்துபவராகவும் மற்றும் "தூர்தர்ஷன்" தொலைக்காட்சித் தொடரான "இஸ் பஹேன்" (1988) என்பதில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த பின்னர், அவர் தனது பாலிவுட் திரைப்படமான "ஆஷிகி" என்பதில் அறிமுகமானார். இப்படத்தின் இசை ரசிகர்களால் பெரிதும் வரவேற்பை பெற்றது. இதன் பின்னர், அதிகமான படங்களில் தோன்ற ஆரம்பித்தார்.[3] ஒரு கார் விபத்துக்குப் பிறகு, அகர்வால் 29 நாட்களுக்கு ஆழ்மயக்கம் நிலையில் இருந்தார், இந்த நாட்களில் அவர் தனது முந்தைய வாழ்க்கையின் நினைவுகள் இல்லாமல் இருந்துள்ளார்.[4] இவர் பெங்களூரில் வாழ்கிறார்.[4] இவர் ஒரு தொழில் முறை பளு தூக்கும் வீரர் ஆவார். விபத்திற்குப் பின்னர் தொழில் முறை பளு தூக்கும் பல போட்டிகளில் போட்டியிட்டார்.[3]

திரைப்பட வரிசை

தொகு
வருடம் படங்கள் பாத்திரம் குறிப்புகள்
1988 "இசி பஹானே" சந்திரம்மா தொலைக்காட்சித் தொடர்
1990 "ஆஷிகி" அனு வர்கீஸ் அறிமுகத் திரைப்படம்
1992 " கசாப் தமாசா" கங்கா
1993 "திருடா திருடா" சந்திர லேகா " லேகா" தமிழ்த் திரைப்படம்
1993 "கிங் அங்கிள்" ஃபென்னி ஃபெர்னான்டோ
1993 கல்-நாயக்கா" கிரண்/ அனுராதா ஆர். பக்‌ஷி
1994 "த க்ளௌட் டோர்" இளவரசி குராங்கி குறும் படம்
1994- 1997 பிபிஎல் ஓயே! அசின் தொலைக்காட்சித் தொடர்
1995 ஜனம் குன்ந்தி" கிரண் எம் பிரசாத் / கிரண் ஆர். கபூர்
1995 ராம் சாஸ்திரா" "லவ் மெஷின்" பாடலில் சிறப்புத் தோற்றம்
1996 "ரிட்டர்ன் ஆப் த ஜ்வெல் தீப்" இளவரசி விஷாகா

மேற்கோள்கள்

தொகு
  1. "Anu Agrawal". Rottentomatoes.com. பார்க்கப்பட்ட நாள் 2016-09-05.
  2. "The Enigma of Arrival". Mumbai Mirror. 4 May 2008. http://mumbaimirror.com/others/sunday-read/The-Enigma-of-Arrival/articleshow/15808087.cms?. பார்த்த நாள்: 11 June 2010. 
  3. 3.0 3.1 3.2 Sharma, Isha (9 December 2015). "From Wonder Girl Of 'Aashiqui' To A Sanyasi, This Is Anu Aggarwal's Story In Her Own Words!". indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2016-09-05.
  4. 4.0 4.1 "Aashiqui star returns to life, turns author". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 22 July 2013. Archived from the original on 7 சூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 3 July 2015. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனு_அகர்வால்&oldid=4169480" இலிருந்து மீள்விக்கப்பட்டது