அனோயரா கதுன்

குழந்தைகள் உரிமை ஆர்வலர்

அனோயரா கதுன் (Anoyara Khatun) (பிறப்பு 1996கள்) இந்திய குழந்தைகளின் உரிமைகள் ஆர்வலராவார். 2017ஆம் ஆண்டில், தனது 21 வயதில், மேற்கு வங்காள மாநிலத்தில் குழந்தை கடத்தல் மற்றும் குழந்தை திருமணத்தை எதிர்த்துப் போராடியதற்காக இந்தியாவின் பெண்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான நாரி சக்தி விருது இவருக்கு வழங்கப்பட்டது.

அனோயரா கதுன்
நாரி சக்தி விருது வழங்கும் விழாவில் அனோயரா கதுன்
பிறப்பு1996 (அகவை 27–28)கள்
தேசியம் இந்தியா
பணிமாணவர்
அறியப்படுவதுகுழந்தைக் கடத்தல், குழந்தைத் தொழிலாளர் மற்றும் குழந்தைத் திருமணம் ஆகியவற்றிலிருந்து குழந்தைகளை காப்பாற்றுதல்

வாழ்க்கை தொகு

அனோயரா கதுன், மேற்கு வங்காளத்தின் கிராமப்புற வடக்கு 24 பர்கனா மாவட்டம், சந்தேஷ்காலி, சோட்டோ அஸ்காரா கிராமத்தில் ஒரு வறுமையான குடும்பத்தில் 1996இல் பிறந்தார். .[1][2][3] சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்த இவர், பன்னிரண்டு வயதில் புதுதில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு இவர் வீட்டுப் பணியாளாராக ஒரு பணியில் செய்தார். வீட்டுப் பணியாளராக பணிபுரிந்த சில மாதங்களுக்குப் பிறகு, இவர் அங்கிருந்து தப்பித்து தனது கிராமத்திற்குத் திரும்பினார். தன்னைப்போலவே இருக்கும் குழந்தைகளின் நிலை பயங்கரமானது எனக் கண்டறிந்தார்.[4]

பணிகள் தொகு

சிறு வயதிலேயே குழந்தைகள் பிரசவத்திற்கு தள்ளப்பட்டனர். சிலர் நகர எல்லைகளை மீறி வங்காளதேசம் வங்காளதேசத்துக்கும் கடத்தப்பட்டனர். சில குழந்தை திருமணத்திற்கு கட்டாயப்படுத்தப்பட்டனர். தன்னைச் சுற்றியுள்ள நிலைமையை மாற்றும் நோக்கத்துடன், இவர் 'தகாகியா சமூக நலச் சங்கம்' என்பதுடனும், சேவ் தி சில்ட்ரன் அமைப்புடனும் தொடர்பு கொண்டார். அங்கு இவர் குழந்தைகளின் உரிமைகள் என்ன என்பதைக் கற்றுக்கொண்டார். அதிக எண்ணிக்கையிலான மக்களைச் சென்றடைய, இவர் குழந்தைகளின் உரிமைகளில் தன்னம்பிக்கை கொண்ட குழுக்களை உருவாக்கும் செயல்முறையைத் தொடங்கினார். ஒரு குறுகிய காலத்திற்குள், கடத்தப்பட்ட 180 குழந்தைகளை அவர்களது குடும்பத்தினருடன் மீண்டும் இணைக்க அனோயாரா உதவினார். கிட்டத்தட்ட முப்பத்த்தாறு குழந்தைத் திருமணங்களை நிறுத்தினார். 85 குழந்தைகளை குழந்தைத் தொழிலாளர் ஆவதிலிருந்து மீட்டார். மேலும், 400 குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அழைத்துச் சென்றார்.[5]

விருது தொகு

 
2016இல் நாரி சக்தி விருது 2016 பெறுநர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி உரையாடுகிறார். உடன் மேனகா காந்தி அனோயரா கதுன் வலது ஓரத்தில் காணலாம்

2011இல், மேற்கு வங்காளத்தின் தற்போதைய முதலமைச்சர் மம்தா பானர்ஜி இவரை பாராட்டினார். 2012ஆம் ஆண்டில், சர்வதேச குழந்தைகள் அமைதி பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட மூன்று பேரில் ஒருவராக அனோயரா இருந்தார்.[1] 2017 மார்ச் 8 அன்று, சர்வதேச மகளிர் தினத்தன்று , மேற்கு வங்காள மாநிலத்தில் சிறுவர் கடத்தல் மற்றும் குழந்தை திருமணத்தை எதிர்த்துப் போராடிய பங்களிப்புகளுக்காக, இந்தியாவிற்கான மிக உயர்ந்த சிவில் விருது நரிஷக்தி புருஸ்கருக்கு 2016 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.[5][6] குழந்தைகள் உரிமைகளை ஆதரிப்பவராக 2015 மற்றும் 2016 ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் பொதுச் சபையில் பங்கேற்க அனோயரா கதுன் அழைக்கப்பட்டார்.[7]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Anoyara Khatun: The Child Crusader Against Exploitation of Children". Save the Children India (in அமெரிக்க ஆங்கிலம்). 7 July 2014. பார்க்கப்பட்ட நாள் 2020-06-01.{{cite web}}: CS1 maint: url-status (link)
  2. Bhattacharya, Ravik (2017-03-10). "'Nari Shakti Puraskar' winner from Bengal waiting for over a year to get a house under Pradhan Mantri Awas Yojana". Hindustan Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-01.{{cite web}}: CS1 maint: url-status (link)
  3. Singh, G. (2017-06-01). "A child rights crusader". ROTARY NEWS (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-01.
  4. Bhalla, Nita (8 March 2017). "India honors former child maid who saved hundreds of others". Thomson Reuters Foundation. பார்க்கப்பட்ட நாள் 2020-06-01.
  5. 5.0 5.1 "Indian government confers Child Champion Anoyara Khatun with 'Nari- Shakti Puraskar'". Save the Children India (in அமெரிக்க ஆங்கிலம்). 16 March 2017. பார்க்கப்பட்ட நாள் 2020-06-01.
  6. Chatterjee, Chandreyee (11 March 2017). "Girl champ & her fans". Telegraph India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-01.{{cite web}}: CS1 maint: url-status (link)
  7. "Young Indian displays girl power, fighting against trafficking". UN News (in ஆங்கிலம்). 2016-10-11. பார்க்கப்பட்ட நாள் 2020-06-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனோயரா_கதுன்&oldid=3931106" இலிருந்து மீள்விக்கப்பட்டது