அன்சு ராஜ் அன்சு

பஞ்சாப் பாடகர், அரசியல்வாதி

அன்சு ராஜ் அன்சு (Hans Raj Hans) என்பவர் இந்தியப் பாடகரும் அரசியல்வாதியும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் மற்றும் பத்மசிறீ விருதைப் பெற்றவர்.[1]

அன்சு ராஜ் அன்சு
அன்சு ராஜ் அன்சு (வலது) யுவராஜ் அன்சு உடன்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
23-மே-2019
முன்னையவர்உதிர் ராஜ்
தொகுதிவடமேற்கு தில்லி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு9 ஏப்ரல் 1962 (1962-04-09) (அகவை 62)
சபிபூர், பஞ்சாப், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிள்ளைகள்நவராஜ் அன்சு & யுவராஜ் அன்சு
இணையத்தளம்www.hansrajhans.org
இசை வாழ்க்கை
பிறப்பிடம்ஜலந்தர், பஞ்சாப், இந்தியா
இசைத்துறையில்1983–present

இவர் பஞ்சாபி நாட்டுப்புறப் பாடல்கள் சூஃபி இசை மற்றும் திரைப்படப் பாடல்களைப் பாடி வருகிறார். மேலும் தனது சொந்த முயற்சியின் காரணமாக 'பஞ்சாபி-பாப்' இசைத் தொகுப்புகளை வெளியிட்டு வருகின்றார். கச்சே தாகே திரைப்படத்தில் நுசுரத் பதே அலி கான் போன்ற பிற கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.[2]

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

அன்சு ராஜ் அன்சு இந்தியாவின் பஞ்சாபில் ஜலந்தருக்கு அருகிலுள்ள சாபிபூர் கிராமத்தில் பிறந்தார். அன்சு ஜலந்தரில் உள்ள டி. ஏ. வி. கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார்.[3]

அன்சு தனது பதின்ம வயதிலிருந்தே, உஸ்தாத் புரான் ஷா கோடியிடம் பாடுவதில் பயிற்சி பெற்றார்.[4]

2014-ல், அன்சு ராஜ் இசுலாம் மதத்திற்கு மாறியதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இவர் இதனை மறுத்தார்.[5][6]

இசை வாழ்க்கை தொகு

 
பஞ்சாபி கெய்கி கருத்தரங்கில்

இளைஞனாக இருக்கும்போது, அன்சு இசையமைப்பாளர் சரஞ்சித் அஹுஜாவிடம் இசைக் கற்றுக்கொண்டார். பின்னர் பஞ்சாபி நாட்டுப்புற, பக்தி மற்றும் சூஃபி இசைப் பாடல்களைப் பாடத் தொடங்கினார்.[7] கச்சே தாகே படத்தில் நுசுரத் ஃபதே அலி கானுடன் இணைந்து பணியாற்றினார்.

அன்சு வாஷிங்டன் பல்கலைக்கழகம் மற்றும் சான் ஜோஸ் மாநிலப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கெளரவ இசைப் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.[8]

அரசியல் வாழ்க்கை தொகு

அன்சு சனவரி 2009-ல் சிரோமணி அகாலி தளம் கட்சியில் சேர்ந்தார். 2009ஆம் ஆண்டு மே மாதம் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் ஜலந்தர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார்.[9]

இவர் 18 திசம்பர் 2014 அன்று சிரோமணி அகாலி தளம் கட்சியிலிருந்து விலகி பிப்ரவரி 2016-ல் இந்தியத் தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.[10]

பின்னர் திசம்பர் 10, 2016 அன்று பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.[11] அன்சு 2019 இந்திய பொதுத் தேர்தலில் வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு உதித் ராஜை தோற்கடித்து நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[12]

இசைத்தொகுப்பு தரவுகள் தொகு

இசைத் திரட்டு தொகு

  • 2017 முண்டே பஞ்சாபி
  • 2014 ஜாது
  • 2011 ஏக் இஷாஆஆ
  • 2008 யாரா ஓ யாரா
  • 2007 வஞ்சாரா
  • 2004 தி நைட்
  • 2003 தேரா இஷ்க்
  • 2002 ஹாயே சோஹ்னியே
  • 2002 காமா தி ராத்
  • 2001 சப் டன் சோஹ்னி
  • 2001 ஜஞ்சர்
  • 2000 சொர்னி
  • 1996 லால் கராரா
  • 1994 மொஹபத்
  • 1993 இஷ்கே டி பர்சாத்
  • 1992 ஜஞ்சரியா
  • 1992 ஆர் டுடி நா பார் டுடி
  • 1991 தாஹ் கார்கே
  • 1990 தேரா மேரா பியார்
  • 1990 ஆஷிகான் டி கஹ்தி ஜிந்தகி
  • 1990 வாரிஸ் பஞ்சாப் டி
  • 1989 பலே நி ரஹே ரஹே
  • 1987 ஏக் டாங் ஹோர் மர் ஜா
  • 1987 ஏக் குரி மைனு ரஜ்ஹெயோன் ஃபகிர் கர் கை
  • 1983 ஜோகியன் டி கண்ணா விச்

மும்பை திரைப்பட உலகில் தொகு

  • 2018 சோனு கே டிடு கி ஸ்வீட்டி [13]
  • 2011 மௌசம்
  • 2011 பாட்டியாலா ஹவுஸ்
  • 2008 பிளாக் & ஒயிட்
  • 2002 பெக்காம் போல வளைக்கவும்
  • 2002 23 மார்ச் 1931: ஷஹீத்
  • 2001 நாயக்
  • 2001 ஜோடி நம்பர். 1
  • 2001 மான்சூன் வெட்டிங்
  • 2000 பிச்சூ
  • 1999 கச்சே தாகே

மதம் சார்ந்த பதிப்புகள் தொகு

  • 2011 அம்ரித் வர்கா பானி (சர்தூல் சிக்கந்தருடன் ) வார்ல்டு மியூசிக்
  • 2009 கோய் ஆன் மிளவாய் (சாந்த் அனூப் சிங் (உனா சாஹிப் வாலே) & பாய் மனிந்தர் சிங் (ஸ்ரீ நகர் வாலே)
  • 2008 300 சாலா ஹஸூர் சாஹிப் (டி-சீரிஸ்)
  • 2006 போலே சோ நிஹால் (சர்தூல் சிக்கந்தருடன்)
  • 2006 சிகி தியான் ஷானா
  • 2004 நிக்கே நிக்கே து கல்சே (டி-சீரிஸ்)
  • 2003 வாடா மேரா கோவிந்த்
  • 2000 அமிர்தரா
  • 1997 மேரா பஜான் வாலா மாஹி
  • 1991 பட்டா பட்டா சிங்கன் டா வைரி (டி-சீரிஸ்)

திரைப்படவியல் தொகு

  • துப்பட்டா தேரா சத் ரங் தா (ஸீபிடு ரிக்கார்டு)

சுயசரிதை தொகு

  • ராக்ஸ் டு ராகஸ்... மற்றும் அப்பால் - ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ், ப்ரீத் இந்தர் தில்லான், பவர் வெளியிடு

பாராட்டுக்கள் தொகு

விருது வழங்கும் விழா வகை பெறுபவர் முடிவு மேற்கோள்
4வது மிர்ச்சி இசை விருதுகள் ஆண்டின் சிறந்த ஆண் பாடகர் பரிந்துரை [14]

மேற்கோள்கள் தொகு

  1. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
  2. "Patiala House". The Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/music/music-reviews/Patiala-House/articleshow/7302466.cms. 
  3. "Distinguished Alumni". davjalandhar.com. Archived from the original on 2019-08-30. பார்க்கப்பட்ட நாள் 2019-08-30.
  4. "Puran Shah Koti, the legendry guru of many Punjabi singers". Oneindia. 18 May 2009. பார்க்கப்பட்ட நாள் 24 April 2019.
  5. "Hans Raj Hans on AAP's Allegations That He Converted to Islam | ABP News". YouTube.
  6. "Lok Sabha Polls 2019: Hans Raj Hans Denies Conversion to Islam, Hits Out at "Liar" Kejriwal".
  7. If one thing falls in place... பரணிடப்பட்டது 26 சனவரி 2011 at the வந்தவழி இயந்திரம். Hindustan Times (21 January 2011). Retrieved on 19 April 2013.
  8. "Melody is out, noise is in, says Hans Raj Hans". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 2013-10-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131029001659/http://articles.timesofindia.indiatimes.com/2003-06-29/chandigarh/27196682_1_hans-raj-hans-cadets-sufi-singer. 
  9. "Punjabi singer Hans Raj Hans in LS battle from Jalandhar". business-standard.com. Press Trust of India. 27 April 2009. http://www.business-standard.com/article/economy-policy/punjabi-singer-hans-raj-hans-in-ls-battle-from-jalandhar-109042700181_1.html. 
  10. "Singer Hans Raj Hans joins Congress". Tribune India இம் மூலத்தில் இருந்து 2019-11-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191102215923/https://www.tribuneindia.com/video/singer-hans-raj-hans-joins-congress/13896.html. 
  11. Now, Hans ditches Congress for BJP பரணிடப்பட்டது 22 சனவரி 2018 at the வந்தவழி இயந்திரம்
  12. "BJP's Delhi List Out, Singer Hans Raj Hans Replaces Lawmaker Udit Raj". NDTV. 23 April 2019. https://www.ndtv.com/india-news/lok-sabha-polls-2019-bjp-announces-candidates-for-all-7-seats-in-delhi-singer-hans-raj-hans-replaces-2027210. 
  13. "Dil Chori Remake Honey Singh in 2017". http://redmux.com/song/dil-chori-sada-ho-gaya/. 
  14. "Nominations - Mirchi Music Award Hindi 2011". 30 January 2013. Archived from the original on 30 January 2013. பார்க்கப்பட்ட நாள் 24 May 2018.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்சு_ராஜ்_அன்சு&oldid=3742538" இலிருந்து மீள்விக்கப்பட்டது