அன்னி கூப்பர் பாய்ட்

அன்னி கூப்பர் பாய்ட் ( Annie Cooper Boyd ) (1880-1935) ஒரு அமெரிக்க பெண்ணியவாதியும், நீர்வர்ண ஓவியங்கள் வரைபவரும், நாட்குறிப்பு எழுதுபவரும் ஆவார்.[1]

அன்னி கூப்பர் பாய்ட்
பிறப்புஅன்னி பர்ன்ஹாம் கூப்பர்
1880 (1880)
சாக் துறைமுகம், நியூயார்க்
இறப்பு1935 (அகவை 54–55)
தேசியம்அமெரிக்கா
அறியப்படுவதுஓவியக் கலை
வாழ்க்கைத்
துணை
வில்லியம் ஜான் பாய்ட் (தி. 1895)

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

அன்னி பர்ன்ஹாம் கூப்பர் பாய்ட் ஒரு செழிப்பான படகு கட்டும் தொழிலாளியான வில்லியம் கூப்பரின் மகளாக நியூயார்க்கில் உள்ள சாக் துறைமுகத்தில் பிறந்தார்; இவர், தனது பெற்றோரின் பதினொரு குழந்தைகளில் கடைசியாகப் பிறந்தவர்.[2] இவர், தனது 16வது வயதில் நாட்குறிப்பை எழுதத் தொடங்கி, அதை தனது முதிர்வயது வரை தொடர்ந்து எழுதினார்.[3] இவரது தந்தை 1894 இல் இறந்தார், ஓராண்டு கழித்து இவர் வில்லியம் ஜான் பாய்ட் என்பவரை மணந்தார், அவருடன் புரூக்ளினுக்கு குடிபெயர்ந்தார்; இவரது தந்தை இவருக்களித்த சாக் துறைமுக இல்லத்தைக் கோடைகாலத்தில் தங்கும் இல்லமாகப் பயன்படுத்தினர். இவர்களின் மகன் வில்லியம் 1898 இல் பிறந்தார், இவர்களின் மகள் நான்சி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்தார்.[2] இவர் நியூயார்க் நகரத்தில் உள்ள ஹென்றிட்டா மற்றும் வர்ஜீனியா கிரான்பெரி சகோதரிகளிடமிருந்து பாடம் கற்றுக்கொண்டார். பின்னர் அவர்கள் சாக் துறைமுகத்தில் இவரைச் சந்தித்தனர். வில்லியம் மெரிட் சேசால் நடத்தப்படும் ஷின்னெகாக் ஹில்ஸ் சம்மர் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்டில் இவர் நேரத்தை செலவிட்டார், அங்கு இவரது ஆசிரியர் பெரும்பாலும் சார்லஸ் எல்மர் லாங்லி ஆவார்.[4] இறுதியில், இவர் தனது கணவருடன் சாக் துறைமுகத்தில் உள்ள கோடைக்கால இல்லத்தில் முழுநேரமாக வசிக்கத் திரும்பினர், அங்கு இவர் 'ஹெரால்ட் ஹவுஸ் தேநீர் அறை' எனும் பெயரில் உணவகத்தை நடத்தினார்.[1]

பாய்டின் பல ஓவியங்கள் இவரது முன்னாள் இல்லத்தைத் தலைமையிடமாகக் கொண்ட சாக் ஹார்பர் ஹிஸ்டோரிகல் சொசைட்டியால் தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[5][6] கட்டிடம் முழுவதும் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.[1][7] இவரது நாட்குறிப்பில் இருந்து சில பகுதிகள் மற்றும் ஓவியங்கள், "அன்கர் டு வின்ட்வார்ட்: தி டைரிஸ் & பெயிண்டிங்ஸ் ஆஃப் அன்னி கூப்பர் பாய்ட் (1880-1935) என்கிற பெயரில் வெளியிடப்பட்டது.[3]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Boody, Peter (20 August 2006). "New Life for an Early Feminist's House". பார்க்கப்பட்ட நாள் 9 January 2017 – via NYTimes.com.
  2. 2.0 2.1 Gallagher, Gail (22 March 2015). "Painting the Hamptons: Annie Cooper Boyd". பார்க்கப்பட்ட நாள் 9 January 2017.
  3. 3.0 3.1 "The East End seen through Annie Cooper Boyd's eyes". 11 May 2010. பார்க்கப்பட்ட நாள் 9 January 2017.
  4. Gallagher, Gail (3 April 2015). "Painting the Hamptons: Annie Cooper Boyd, Artistic Influences". பார்க்கப்பட்ட நாள் 9 January 2017.
  5. "Sag Harbor Historical Society Toasting To Annie Cooper Boyd's 150th Birthday During Annual Hamptons ... – Out And About – For The Cause". 9 December 2014. பார்க்கப்பட்ட நாள் 9 January 2017.
  6. "Annie Cooper Boyd House". Archived from the original on 4 செப்டம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 9 January 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. Gallagher, Gail (28 March 2015). "Painting the Hamptons: The Mermaid Bath". பார்க்கப்பட்ட நாள் 9 January 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னி_கூப்பர்_பாய்ட்&oldid=3927100" இலிருந்து மீள்விக்கப்பட்டது