அன்ழோங் வாங்

அன்ழோங் வாங் ஒரு கோட்பாட்டு இயற்பியலாளர் ஆவார் , அவர் ஈர்ப்பு விசை அண்டவியல், வானியற்பியல் துகள்களில் புலமை பெற்றவர். அவர் பேய்லர் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பீடத்தில் உள்ளார்.[1] தற்போது இவர் அண்டவியலில் சரம் / எம் கோட்பாடு, ஓரவா - இலிப்சிட்சு ஈர்ப்பு ஆகியவற்றைக் குறித்து பணியாற்றி வருகிறார்.

வாங் பேய்லரில் உள்ள கணித இயற்பியலாளரான யூமி வூவை மணந்தார் , அவர்கள் அமெரிக்காவின் டெக்சாசில் வாக்கோவில் வாழ்கிறார்கள்.

ஆராய்ச்சி தொகு

வாங் அண்மையில் மேற்கொண்ட ஆராய்ச்சி , பொது சார்பியல், மீச்சரக் கோட்பாடு, எம் - கோட்பாட்டுக் கருவிகளைப் பயன்படுத்தி ஈர்ப்பு விசை , அண்டவியல், வானியற்பியல் கூறுபாடுகளில் கவனம் செலுத்தியுள்ளது. அவரது அண்மைய படைப்புகளில், புடவியின் பிந்தைய அண்ட முடுக்கம், எம். கோட்பாட்டில் அண்டவியல், கருந்துளைகளின் வெப்ப இயங்கியல், ஈர்ப்புச் சரிவிலிருந்து அவற்றின் உருவாக்கம் , ஓரவா -இ லிப்சிட்சு குவைய ஈர்ப்பும் அண்டவியல், வானியற்பியலுக்கான அதன் பயன்பாடுகளும் பற்றிய ஆய்வுகள் அடங்கும்.

வெளியீடுகள் தொகு

ஈர்ப்பு கோட்பாடு , அண்டவியல் , சரக் கோட்பாடு, உயர் ஆற்றல் வானியற்பியல் ஆகிய தலைப்புகளில் புலமைமிகு இதழ்களில் வாங் 100 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதியுள்ளார்.

தகைமைகள் தொகு

வாங் மே 2009 இல் பேய்லர்[2] பல்கலைக்கழகத்திலிருந்து சிறந்த ஆராய்ச்சியாளர் விருதைப் பெற்றார். அங்கு புடவி ஆசிரியர் குழுவில் உறுப்பினராக உள்ளார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. Baylor Physics Faculty பரணிடப்பட்டது ஆகத்து 24, 2009 at the வந்தவழி இயந்திரம்
  2. Baylor Professional Spotlight - Fall 2009
  3. "Editorial Board of Universe". MDPI Publishing. 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-10-22.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்ழோங்_வாங்&oldid=3773033" இலிருந்து மீள்விக்கப்பட்டது