அபய் மற்றும் ராணி பாங்

இந்திய சமூக ஆர்வலர்கள்

அபய் பாங் மற்றும் ராணி பாங் (Abhay and Rani Bang) ஆகிய இருவரும் இந்தியாவிலுன் மகாராட்டிராவிலுள்ள கட்சிரோலி மாவட்டத்தில் பணிபுரியும் ஆர்வலர்கள் மற்றும் சமூக சுகாதார ஆய்வாளர்கள் ஆவர். 2018இல் இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மசிறீ விருது வழங்கி கௌரவித்தது, 2018[1]

அபய் மற்றும் ராணி பாங்
Abhay and Rani Bang
அபய் மற்றும் ராணி பாங்
பிறப்புவர்தா மற்றும் சந்திரபூர், மகாராட்டிரம், இந்தியா
தேசியம் இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நாக்பூர்
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்
பணிசமூகப் பணிகள்
அறியப்படுவதுசமூகப் பணி, சமூக சுகாதாரம், போதை மறுவாழ்வு, வீட்டில் பிறந்த குழந்தை பராமரிப்பு
பிள்ளைகள்ஆனந்த் பாங், அம்ருத் பாங்
விருதுகள்
  • மகாராட்டிர பூசண் விருது (2003)
  • மெகார்தர் அறாக்கட்டளை சர்வதேச விருது (2006)
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாடு மூலம் பெண்கள் மேம்பாட்டுக்கான தேசிய விருது (2008)
  • ஜம்னாலால் பஜாஜ் விருது (2006)
  • சிறப்புமிக்க முன்னாள் மாணவர் விருது, சர்வதேச சுகாதாரத் துறை, புளூம்பெர்க் பொது சுகாதாரப் பள்ளி, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், அமெரிகா (2013)
  • சமூக மருத்துவத்தில் சிறந்த ஆராய்ச்சிக்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய விருது

பணிகள்

தொகு

உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டு, இந்தியா முழுவதும் மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் செயல்படுத்தப்படும் குழந்தை இறப்பு வீதங்களை கணிசமாகக் குறைத்த ஒரு திட்டத்தை இவர்கள் ஒன்றாகக் கண்காணித்தனர்.[2] [3] அபய் மற்றும் ராணி ஆகிய இருவரும் கிராமப்புற சுகாதார சேவை மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள சமூக ஆரோக்கியத்திற்கான கல்வி, செயல் மற்றும் ஆராய்ச்சிக்கான இலாப நோக்கற்ற சங்கத்தை நிறுவினர்.

இவர்கள் மகாராட்டிரா பூசண் விருதை வென்றுள்ளனர். மேலும் இலக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் இருந்து கௌரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர்.[4][5] மும்பையில் உள்ள எஸ். என். டி. டி மகளிர் பல்கலைக்கழகமும் ராணி பேங்கிற்கு கௌரவ விருது வழங்கியுள்ளது.[6] உலகின் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் கல்வி மற்றும் மருத்துவ இதழ்களில் ஒன்றான தி லான்செட் இவர்களை "கிராமப்புற இந்தியாவில் சுகாதாரப் பாதுகாப்பின் முன்னோடிகள்" என்று விவரித்தது.[7] ஜான்ஸ் ஹாப்கின்ஸ் புளூம்பெர்க் பொது சுகாதாரப் பள்ளியின் சர்வதேச சுகாதாரத் துறையின் புகழ்பெற்ற முன்னாள் மாணவர் விருதை இவர்கள் பெற்றுள்ளனர். இவர்களின் தொழில் வாழ்க்கையின் போது, சமூக அடிப்படையிலான ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பில் ஒரு மறுமலர்ச்சியை வளர்க்க உதவியுள்ளனர்.[8] 2016 ஆம் ஆண்டில், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் இவர்களுக்கு புகழ்பெற்ற முன்னாள் மாணவர் விருதை வழங்கியது.[9]

 
தங்கள் இளைய மகன் அம்ருத்துடன் அபய் மற்றும் ராணி பாங்,

குழந்தை இறப்பு விகிதத்தில் குறைப்பு

தொகு
 
தான் வடிவமைத்த மூச்சு எண்ணிக்கை கருவியுடன் அபய் பாங்

மே 2017 இல், மகாராட்டிரா மாநிலத்தில் குழந்தை இறப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை எவ்வாறு குறைப்பது என்பது குறித்த பரிந்துரைகளை வழங்க பம்பாய் உயர் நீதிமன்றம் அபய் பாங்கை அழைத்தது. இவர் அளித்த பரிந்துரைகளை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, மாநில அரசுக்கு அதன் கொள்கை முடிவுகளில் பரிந்துரைகளை இணைத்து தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டது.[10]

மேற்கோள்கள்

தொகு
  1. "MINISTRY OF HOME AFFAIRS PRESS NOTE" (PDF). mha.nic.in. Archived from the original (PDF) on 26 January 2018. பார்க்கப்பட்ட நாள் 25 January 2018.
  2. Day, Elizabeth (2011-03-20). "Dr Abhay Bang: the revolutionary paediatrician" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 November 2012.
  3. "Save the Children UK | International Children's Charity" (PDF).
  4. Bang, Abhay T; Bang, Rani A; Baitule, Sanjay B; Reddy, M Hanimi; Deshmukh, Mahesh D (4 December 1999). "Effect of home-based neonatal care and management of sepsis on neonatal mortality: field trial in rural India". The Lancet 354 (9194): 1955–1961. doi:10.1016/s0140-6736(99)03046-9. பப்மெட்:10622298. http://www.thelancet.com/journals/lancet/article/PIIS0140-6736(99)03046-9/fulltext. பார்த்த நாள்: 17 June 2014. 
  5. "PGI ने मनाया 20वां दीक्षांत समारोह, वीमेन हेल्थ इश्यूज पर हुई चर्चा". www.bhaskar.com. 27 September 2015. Archived from the original on 4 March 2016.
  6. "S.N.D.T. Women's University". sndt.ac.in. Archived from the original on 21 January 2013.
  7. "The Lancet honour for Bang couple". The Times of India. 13 January 2011.
  8. "Alumni Award". www.jhsph.edu. Archived from the original on 28 July 2013.
  9. लोकसत्ता टीम (2 April 2016). "डॉ. राणी व डॉ. अभय बंग यांना जॉन्स हॉपकिन्स विद्यापीठाचा पुरस्कार". Loksatta (in மராத்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-06-15.
  10. "HC accepts report on malnutrition" (in en-IN). 2017-05-03. https://www.thehindu.com/news/cities/mumbai/hc-accepts-report-on-malnutrition/article18379834.ece. 

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Abhay and Rani Bang
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=அபய்_மற்றும்_ராணி_பாங்&oldid=4141831" இலிருந்து மீள்விக்கப்பட்டது