அபரணை

இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள நகரம்

ஹபரணை இலங்கை அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறுநகரம் ஆகும். இது அம்பேபுசை-திருகோணமலை (A6) வீதியில் அமைந்துள்ள ஓர் முக்கிய சந்தியாகும். இங்கிருந்து பொலநறுவை மற்றும் மட்டக்களப்பு நகரங்களுக்கான பேருந்து சேவை நடைபெறுகின்றது. திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு செல்வோர் இப்பகுதியிலேயே பேருந்து மாறுதல் வேண்டும்.

ஹபரணை
நாடுஇலங்கை
மாகாணம்வடமத்திய மாகாணம்
மாவட்டம்அனுராதபுரம்
நேர வலயம்ஒசநே+5:30 (Sri Lanka Standard Time Zone)

இப்பகுதியானது சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாகும். இதற்கருகே சிகிரியாவும் அமைந்துள்ளது. இங்கே யானைகளில் சவாரிசெய்யமுடியும். சுற்றுலாத் துறைக்கெனவே வளர்க்கப்பட்ட நன்கு பழக்கப் படுத்தப்பட்ட யானைகள் இங்கு உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபரணை&oldid=2220648" இலிருந்து மீள்விக்கப்பட்டது