அம்பேபுசை

இலங்கையின் கமபஹா மாவட்டத்தில் உள்ள நகரம்

அம்பேபுசை (Ambepussa) என்பது இலங்கையின் சப்ரகமுவ மாகாணத்தின், கேகாலை மாவட்டத்தில் உள்ள ஓர் ஊராகும்.

அம்பேபுசை
අඹේපුස්ස
அம்பேபுசை is located in இலங்கை
அம்பேபுசை
அம்பேபுசை
ஆள்கூறுகள்: 7°14′30″N 80°12′40″E / 7.2418°N 80.2112°E / 7.2418; 80.2112
நாடுஇலங்கை
மாகாணம்சப்ரகமுவா
மாவட்டம்கேகாலை
பரப்பளவு
 • மொத்தம்4.078 km2 (1.575 sq mi)
மக்கள்தொகை
 (2015)
 • மொத்தம்4,742
நேர வலயம்ஒசநே+5:30 (Sri Lanka Standard Time)
இலங்கை அஞ்சல் துறை
11212
இடக் குறியீடு035

வரலாறு

தொகு

அம்பேபுசை தொடருந்து நிலையம், முதல் பயணிகள் தொடருந்து சேவைக்கான முடிவிட நிலையமாக இருந்தது. இந்த நிலையத்துக்கான தொடருந்து சேவைக்காக பத்துப் பெட்டிகள் கொண்ட வண்டி கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து 1865 அக்டோபர் 22 அன்று புறப்பட்டது. இருப்பினும் முதல் தொடருந்து 1864 திசம்பர் 27 அன்றே நிலையத்திற்கு வந்தது.[1]

அம்பேபுசை நகரத்தில் முன்னர் அம்பேபுசை ரெஸ்ட்ஹவுஸ் என அழைக்கப்பட்ட ஹெரிடேஜ் அம்பேபுசை ஓட்டல் அமைந்துள்ளது, இது நாட்டின் விடுதி நோக்கத்திற்காக கட்டப்பட்ட பழமையான தங்கும் விடுதியாகும்.[2] 1822 ஆம் ஆண்டு கொழும்பு-கண்டி கண்டி வீதி அமைக்கப்பட்ட போது பொதுப்பணித் திணைக்களத்தின் நிறைவேற்றுப் பொறியியலாளர் வசிப்பிடமாக இது கட்டப்பட்டது.[3] இது 1828 ஆம் ஆண்டில் ஒரு ஓய்வு மாளிகையாக மாற்றப்பட்டது. இது வெள்ளை வட்டத் தூண்களைக் கொண்டதாகவும், ஒரு மாடி, ஏழு அறைகளோடு, டச்சுக்கால வளமனை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

மகா ஆற்றின் கரையில் அமைந்துள்ள அரசாங்க வேளாண் பண்ணைக்கு இந்த நகரம் பெயர் பெற்றது.

புவியியல்

தொகு

அம்பேபுசை கொழும்பிலிருந்து வடமேற்கில் தீவின் மேற்குப் பகுதியில் 59 கிமீ (37 மைல்) தொலைவில் உள்ளது. இது கண்டிக்கு கிழக்கே 57 கிமீ (35 மைல்) தொலைவிலும், குருணாகலுக்கு வடகிழக்கே 34 கிமீ (21 மைல்) தொலைவிலும், கேகாலையில் இருந்து 18 கிமீ (11 மைல்) தொலைவிலும் உள்ளது.

போக்குவரத்து

தொகு

அம்பேபுசை ஏ1 (கொழும்பு - கண்டி) நெடுஞ்சாலை, ஏ-6 (அம்பேபுசை-திருகோணமலை) வீதியின் சந்தியில் அமைந்துள்ளது. அம்பேபுசை தொடருந்து நிலையம் கம்பகா மாவட்டத்தில் வடகிழக்கில் 7 கிமீ (4.3 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பேபுசை&oldid=4121986" இலிருந்து மீள்விக்கப்பட்டது