அபிஞான சாகுந்தலம்

(அபிக்ஞான சாகுந்தலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சாகுந்தலம் என்பது காளிதாசரால் இயற்றப்பட்ட சமசுகிருத மொழி நாடக நூல் ஆகும். வட இந்தியாவிலிருந்து சகர்களை விரட்டிய பெருமைக்குரிய குப்தப் பேரரசர் இரண்டாம் சந்திரகுப்தர் எனும் சந்திரகுப்த விக்கிரமாதித்தியன் அரசவைக் கவிஞராக திகழ்ந்தவர் காளிதாசர். சகுந்தலா மற்றும் துஷ்யந்தன் காதல் திருமணத்தை விளக்கும் சாகுந்தலம் நாடகத்தில் ஏழு அங்கங்கள் உள்ளன. இதன் உட்பொருள் வியாச மகாபாரதத்தினின்று எடுக்கப்பட்டது. ஆயினும் இலக்கியச் சுவைக்கேற்பச் சில மாறுதல்கள் செய்யப்பட்டன.

ரவி வர்மர் வரைந்த சகுந்தலை ஓவியம்

சமசுகிருத மொழி சாகுந்தலம் நாடக நூலை உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆர்தர் டபுள்யு. ரைடர் என்பவர் சாகுந்தலம் நாடகத்தை ஆங்கில மொழியில் மொழி பெயர்த்துள்ளார். [1]

பிரபல கலாசாரத்தில்

தொகு

காளிதாசரின் சாகுந்தலம் நாடகம், தமிழ், இந்தி மற்றும் மலையாள மொழிகளில் திரைப்படங்களாக வெளி வந்துள்ளது. [2][3][4]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Arthur W. Ryder தந்த முழு மொழிபெயர்ப்பு
  2. https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D) சகுந்தலை – 1940, தமிழ் திரைப்படம்]
  3. சாகுந்தலா (1943 - இந்தி)திரைப்படம்
  4. Shakuntala (film) – சாகுந்தலம் 1965 - மலையாளத் திரைப்படம்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிஞான_சாகுந்தலம்&oldid=3432680" இலிருந்து மீள்விக்கப்பட்டது