அபிசேகா விமலவீரா
சுஹாசினி அபிஷேகா விமலவீரா (Sinhala:අභිෂේකා විමලවීර; பிறப்பு 11 நவம்பர் 1988) இலங்கை நாட்டு பாடகர், திரைப் பின்னணிப் பாடகர், பாடலாசிரியர்.[1][2] காதல் நயமிக்க வாசனையே சந்தா திரைப்படத்தில் பின்னணிப் பாடகியாக அவருக்கு பரவலான அங்கீகாரம் கிடைத்தது. இதனை உதயகாந்தா வர்ணசூரியா இயக்கி இருந்தார்.[3][4].சாலஞ்சு, ரூபன்தரணா, சினசுனா அதரேன் ஆகியத் திரைப்படங்களிலும் பின்னணிப் பாடகியாக பாடியுள்ளார்.[5][6][7][8]
அபிசேகா விமலவீரா | |
---|---|
பிறப்பு | 11 நவம்பர் 1988 காலி, தென் மாகாணம், இலங்கை |
மற்ற பெயர்கள் | அபி |
கல்வி |
|
பணி |
|
அறியப்படுவது | நிசாரா |
உயரம் | 5 அடி 6 அங் (1.65 மீ) |
பிள்ளைகள் | 1 |
இசை வாழ்க்கை | |
இசை வடிவங்கள் |
|
இசைக்கருவி(கள்) | வாய்ப்பாட்டு |
இசைத்துறையில் | 1999–நடப்பு |
இளமையும் தனிவாழ்வும்
தொகுஅபிசேகா இலங்கையின் காலியில் 11 நவம்பர் 1988 அன்று பிறந்தவர். திரைப்பட இயக்குநரும் பாடலாசிரியரும் எழுத்தாளருமான சுனில் விமலவீராவிற்கும் தமயந்தி விமலவீராவிற்கும் ஒரே மகவாகப் பிறந்தார். தொடக்கக் கல்வியை காலியிலுருந்த புனித இதய கான்வென்ட் பள்ளியில் படித்தார். பின்னர் மிலகிரியாவிலிருந்த புனித பவுல் பெண்கள் பள்ளியில் உயர்நிலைக் கல்வி தொடர்ந்தார். 2006இல் இந்தியாவின் இலக்னோவில் அமைந்திருந்த பட்காண்டே இசை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் சங்கீத விசாரத் என்ற பட்டம் பெற்றார். 2013இல் கொழும்பு பல்கலைக்கழகத்திலிருந்துஇசையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 2019இல் கொழும்பு பல்கலைக்கழகத்தில் இசைத்துறை விரிவுரையாளராக சேர்ந்தார்.[9][10]
தமது சிறு அகவைகளிலேயே லகிரு மாடலா , சாமனலா உயானா , செல்லம் கெதர , தெதுன அண்டாவ போன்ற சிறுவர் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். அவரது தந்தையார் பழைய ஆங்கில, சிங்கள,இந்தி பாடல்களை அறிமுகப்படுத்தி அவரது இசை ஆர்வத்திற்கு வித்திட்டார்.[11]
தம் இசைக் கல்வியைத் தொடர்ந்து 2020இல் இசையில் முதுகலைப் பட்டத்தை இலங்கையின் களனிப் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.[12][13]
திருமணம் முடித்து அவருக்கு ஃபைரி அபிலாசுயா ஆலககூன் என்ற பெயருள்ள மகள் உள்ளார்.[14] தோல் அழகு சாதனங்கள் தயாரிக்கும் வணிக முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.
பணிவாழ்வு
தொகுபாட்டு
தொகுதிரைப்பட பின்னணிப் பாட்டு
தொகு"மங்களம் பாதாளா" என்ற பாடலை சஞ்சனா என்ற திரைப்படத்திற்காக பாடி திரையிசை பாடகியாக தம்மை முதன்முதலில் வெளிப்படுத்தினார். தொடர்ந்து 2009இல் சினாசுன அதரேன் படத்திற்காக "நில் நுவான் பத்து செம" என்ற பாடலைப் பாடினார்.[4] 2011இல் உதயகாந்தா வர்ணசூரியா சாலஞ்சு திரைப்படத்தில் "பிரார்த்தனா பிடி ந" என்ற பாடலுக்கு பங்களிக்க வாய்ப்பளித்தார்.[15][16] 2013இல் "ஹீனா டம் மிடக்" என்ற பாடலுக்கு குரல் கொடுத்துள்ளார்.[17]
2014இல் வெளியான இரு படங்களில் குரல் கொடுத்துள்ளார். பராக்ரமா ஜெயசிங்கே இயக்கிய குயு செரா என்ற திரைப்படத்தில் "மீ மினிசத் பாவே லோவே" என்ற பாடலுக்கு பங்களித்துள்ளார். ரூபதரணா திரைப்படத்தில் "அவச்சகா மா" என்ற பாடலையும் அதே ஆண்டு பாடி உள்ளார். இந்த இருவரிசையில் லகிரு பிரேராவுடன் இணைந்து பாடியுள்ளார். 2018இல் வாசனையே சன்டா என்ற திரைப்படத்தில் "மது சண்டகன்" என்ற பாடலைப் பாடி உள்ளார்.[18] [19]
தொலைத்தொடர் பின்னணிப் பாட்டு
தொகுஅபிசேகா தொலைக்காட்சித் தொடரில் பின்னணிப் பாடுவது "அமா" என்ற தொலைத்தொடரில் தொடங்கியது.இத்தொடரின் கருத்துருப் பாடலான "தெகோபுல் கன்டுலின் தெமா"வைப் பாடியுள்ளார். இதிலும் இணையாக லகிரு பிரேரா பாடியுள்ளார். அடுத்து 2015இல் ஈரு தொலைக்காட்சியில் "அடரேய் மன் அடரேய்" தொலைத்தொடரில் "இதே இன்னே டென் ஓயாமை" என்ற பாடலைப் பாடியுள்ளார். தவிரவும் "சரிதாயகதா பாட தென்னா" என்ற தொலைத்தொடருக்கு துவக்கப் பாடலையும் பிளாக்மெயில் திரைத்தொடருக்கு "மீ நிஷா யமயே" என்ற கருப் பாடலையும் பாடியுள்ளார்.
அண்மையில் சீரசா தொலைக்காட்சியில் வரும் "ராசு" தொலைத்தொடருக்கு கருப் பாடலான "அபா ஆமு நோவுனா நம்" என்ற பாடலைப் பாடியுள்ளார்.
தனிப் பாடல்கள்
தொகுஎண் | பாட்டு | இசையமைப்பாளர்(கள்) | பாடலாசிரியர்(கள்) |
---|---|---|---|
1 | நேத்ரா | திலும் தேஜன் எட்டியரச்சி | சனித் விதரங்கே |
2 | நிசாரா | திலும் தேஜன் எட்டியரச்சி | அபிசேகா விமலவீரா |
3 | ரிடி ரைடீ | திலும் தேஜன் எட்டியரச்சி | அபிசேகா விமலவீரா |
4 | ஆநே நும்ப நெ கியா | திலினா ருகுனாகெ | அபிசேகா விமலவீரா |
5 | ககா பாடா அருனல்லே | அபிசேகா விமலவீரா | அபிசேகா விமலவீரா |
6 | சீமா ந | திலும் தேஜன் எட்டியரச்சி , Lahiru Perera | அபிசேகா விமலவீரா |
திரையிசைப் பாடல்கள்
தொகுஆண்டு | பாட்டு | திரைப்படம் | எழுதியோர் | கூட்டுக் கலைஞர்(கள்) |
---|---|---|---|---|
2009 | நில் நுவன் பது செம | சினசூனா அடரேன் | ||
2011 | பிரார்த்தனா பிடீ | சாலஞ்சஸ் | - | சுரேந்திர பெரேரா ,நடீ கஹதபித்தியா , தில்லோன் லாம்ப் |
2014 | அவசகா மா | ரூபன்தரனா | மனுரங்கா விஜெசேகரா | லகிரூ பெரேரா |
2018 | மது சந்தகன் | வாசனையே சன்டா | சுனில் விமலவீரா | அமல் பெரேரா |
மேற்கோள்கள்
தொகு- ↑ "At that time I could have looked at the ground without looking at those eyes: Abhishek Wimalaweera". Sarasaviya. பார்க்கப்பட்ட நாள் 2021-02-13.
{{cite web}}
:|archive-date=
requires|archive-url=
(help) - ↑ "Singer Abhisheka talks about her daughter Abilasha for the first time". Sarasaviya. பார்க்கப்பட்ட நாள் 5 June 2014.
- ↑ "'Wassane Sanda' now in cinema". Sunday Times. பார்க்கப்பட்ட நாள் 6 September 2018.
- ↑ 4.0 4.1 "'Wassane Sanda' goes to Sydney". The Sunday Times. பார்க்கப்பட்ட நாள் 26 May 2018.
- ↑ "Udaya meets the challenge". Daily News. பார்க்கப்பட்ட நாள் 3 April 2018.
- ↑ "Abhisheka's wedding". Sarasaviya. பார்க்கப்பட்ட நாள் 27 December 2012.
- ↑ "Leisure Shopping". Daily News. 19 December 2017. http://www.dailynews.lk/2015/10/15/features/leisure-shopping?page=1. பார்த்த நாள்: 15 October 2015.
- ↑ "Responsibility". Sarasaviya. பார்க்கப்பட்ட நாள் 23 May 2019.
- ↑ "Abhisheka's new home". Sarasaviya. பார்க்கப்பட்ட நாள் 19 June 2014.
- ↑ "You are my shadow". Sarasaviya. பார்க்கப்பட்ட நாள் 26 January 2016.
- ↑ பிலபிடியா, சுரேஷ்னி (சூலை 20, 2021). "Empowering and inspiring the youth". டெய்லி நியூஸ். http://www.dailynews.lk/2021/07/20/tc/254418/empowering-and-inspiring-youth. பார்த்த நாள்: 13 September 2021.
- ↑ "Abhisheka". Sarasaviya. பார்க்கப்பட்ட நாள் 23 May 2019.
- ↑ "Abhisheka's higher education". Sarasaviya. பார்க்கப்பட்ட நாள் 23 May 2019.
- ↑ "Daughter's beautiful gift". Sarasaviya. பார்க்கப்பட்ட நாள் 25 September 2014.
- ↑ "'Challengers' on the move". Sunday Times. பார்க்கப்பட்ட நாள் 3 April 2018.
- ↑ "'Challenges challenge to youth". Sunday Times. 2011-03-13. http://sundaytimes.lk/110313/Magazine/sundaytimestvtimes_3.html.
- ↑ "Double Trouble - ඩබල් ට්රබල්". Sinhala Cinema Database. பார்க்கப்பட்ட நாள் 5 March 2017.
- ↑ "Two books by filmmaker". The Sunday Times. பார்க்கப்பட்ட நாள் 26 May 2018.
- ↑ "Que Sera, a highly entertaining film". The Sunday Observer. பார்க்கப்பட்ட நாள் 1 March 2017.
- ↑ "For every son who has a mother - For every mother who has a son - Nethra". Siyatha FM. 19 July 2019. http://24.siyathafm.lk/abhisheka-new-song-nethra/. பார்த்த நாள்: 19 July 2019.
- ↑ "A song that Abhisheka Wimalaweera did after a long time". Saaravita. 16 April 2017. பார்க்கப்பட்ட நாள் 15 May 2020.
- ↑ "wassanaye sanda". Sarasaviya. பார்க்கப்பட்ட நாள் 10 May 2018.
- ↑ "Sri Lanka Cinema History". National Film Corporation of Sri Lanka. Archived from the original on 23 August 2016. பார்க்கப்பட்ட நாள் 3 October 2016.
- ↑ "'Sinasuna Adaren' now on show". Sunday Times. பார்க்கப்பட்ட நாள் 16 December 2019.