அபிலாசா குமாரி
அபிலாசா குமாரி (Abhilasha Kumari)(பிறப்பு 23 பிப்ரவரி 1956) தற்போது 23 மார்ச் 2019 முதல் இந்திய லோக்பால்அமைப்பின் நீதிபதியாக இருந்தார்.[1] இவர் 2006 முதல் 2018 வரை குஜராத் உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிய முன்னாள் நீதிபதியும்,2018 இல் மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாகவும் இருந்தார். இவர் குசராத்து மாநிலத்தின் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக 17 மே 2018 முதல் 23 மார்ச் 2019 வரை இருந்தார்.
மாண்பமை நீதிபதி அபிலாசா குமாரி | |
---|---|
லோக்பால் அமைப்பின் நீதித்துறை உறுப்பினர் | |
பதவியில் 23 மார்ச் 2019 – 8 சூலை 2021 | |
நியமிப்பு | ராம் நாத் கோவிந்த் |
முன்னையவர் | பதவி உருவாக்கப்பட்டது |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 23 பெப்ரவரி 1956 |
துணைவர் | பிரித்விந்த்ரசிங் கோகில் (தி. 1979) |
பெற்றோர் |
|
முன்னாள் கல்லூரி |
|
வாழ்க்கை
தொகுஅபிலாசா குமாரி, 23 பிப்ரவரி 1956 இல் பிறந்தார்.[2] இமாச்சல பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் [[வீரபத்ர சிங்] - அவரது முதல் மனைவி இரத்ன குமாரி ஆகியோரின் மகளாவார். இவர் நான்கு சகோதரிகளுக்கும் மூத்த சகோதரருக்கும் மூத்தவர்.இவர் தனது ஆரம்பக் கல்வியை சிம்லாவின் லோரெட்டோ ஆங்கிலப் பள்ளியில் படித்தார்.[2] [3] She is the eldest of four sisters and a brother.[3] அதன் பிறகு தில்லி பல்கலைக்கழகத்தின் இந்திரபிரஸ்தா கல்லூரியில் ஆங்கிலத்தில் இளங்கலையையும், அதைத் தொடர்ந்து இமாச்சலப் பிரதேச பல்கலைக்கழக சட்ட பீடத்திலிருந்து இளங்கலைச் சட்டத்தையும் முடித்தார்.[2]
குமாரி 26 மார்ச் 1984 முதல் ஒரு வழக்கறிஞராக தனது தொழிலைத் தொடங்கினார்.[2] இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்திலும் இமாச்சலப் பிரதேச நிர்வாக தீர்ப்பாயத்திலும் பயிற்சி பெற்றார். இவர் 1995 முதல் 2002 வரை கூடுதல் மத்திய அரசு நிலை ஆலோசகராகவும், மார்ச் 2003 முதல் திசம்பர் 2005 வரை இமாச்சல பிரதேசத்தின் கூடுதல் தலைமை வழக்கறிஞராகவும் இருந்தார்.[2]
பிற பணிகள்
தொகுஇவர், இமாச்சலப் பிரதேசம் கிரிசி விசுவாவித்யாலயா, இமாச்சலப் பிரதேச பல்கலைக்கழகம், இமாச்சலப் பிரதேச பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுக் கழகம், இமாச்சலப் பிரதேச மாநில மின்சார வாரியம் ஆகியவற்றுக்கான சட்ட ஆலோசகராகவும்-நிலை-ஆலோசகராகவும் பணியாற்றினார். இவர் டல்ஹவுசி மாநகர சபை, சிம்லா மாநகராட்சி, இமாச்சலப் பிரதேச பள்ளிக் கல்வி வாரியம், இமாச்சலப் பிரதேச தொழில்நுட்பக் கல்வி வாரியம் ஆகியவற்றின் நிலைக்குழு ஆலோசனை உறுப்பினராக பணியாற்றினார்.[2]
நீதிபதி
தொகுஇவர், குஜராத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக 9 ஜனவரி 2006 முதல் 7 பிப்ரவரி 2018 வரை பணியாற்றினார்.[4][5] பிப்ரவரி 9 முதல் 22 பிப்ரவரி 2018 வரை பதின்மூன்று நாட்களுக்கு மட்டுமே மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக இருந்தார்.[6][4][7][8] 17 மே 2018 முதல் இந்தியாவின் குசராத்து மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக உள்ளார்.[9]
23 மார்ச் 2019 அன்று 3 பிற நீதித்துறை உறுப்பினர்களுடன் லோக்பால் அமைப்பின் நீதித்துறை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[1]
சொந்த வாழ்க்கை
தொகுஅபிலாசா குமாரி, 7 நவம்பர் 1979 அன்று சிம்லாவில், முன்னாள் வாலா மாநிலத்தின் அரச குடும்பத்தைச் சேர்ந்த பிரித்விந்த்ரசிங் கோகில் என்பவரை மணந்தார். இவர்களுக்கு இராகவேந்திரன் என்ற ஒரு மகன் 11 ஜூலை 1981 அன்று பிறந்தான்.[10]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Lokpal: Meet the men and women who will probe corruption". qrius.com. பார்க்கப்பட்ட நாள் 2019-03-29.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "High Court of Gujarat". gujarathighcourt.nic.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 September 2018.
- ↑ 3.0 3.1 "वीरभद्र सिंह की बेटी अभिलाषा ने संभाला चीफ जस्टिस का कार्यभार" (in hi). Dainik Jagran. https://www.jagran.com/himachal-pradesh/shimla-virbhadra-singh-s-daughter-abhilasha-takes-over-charge-of-chief-justice-17493584.html.
- ↑ 4.0 4.1 "Justice Abhilasha Kumari promoted". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/ahmedabad/justice-abhilasha-kumari-promoted/articleshow/62812014.cms.
- ↑ "वीरभद्र की बेटी जस्टिस अभिलाषा कुमारी बनेंगी HC की चीफ जस्टिस" (in hi-IN). Navbharat Times. https://navbharattimes.indiatimes.com/india/ex-cm-virbhadra-singh-daughter-abhilasha-kumari-become-chief-justice/articleshow/62467863.cms.
- ↑ Samom, Shobhapati (9 February 2018). "Justice Abhilasha Kumari is Manipur HC’s first woman chief justice" (in en). Hindustan Times. https://www.hindustantimes.com/india-news/justice-abhilasha-kumari-is-manipur-hc-s-first-woman-chief-justice/story-1MdcD0Pu0N2YEcNakPsG4O.html.
- ↑ "Justice Abhilasha Kumari takes oath as Manipur Chief Justice for 13 days, father Virbhadra Singh attends function" (in en-US). The Hush Post. 9 February 2018. https://thehushpost.com/miscellaneous/justice-abhilasha-kumari-takes-oath-manipur-chief-justice-13-days-father-virbhadra-singh-attends-function/.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Former HC judge is GSHRC chief". Ahmedabad Mirror. 11 May 2018. https://ahmedabadmirror.indiatimes.com/ahmedabad/others/former-hc-judge-is-gshrc-chief/articleshow/64115225.cms. பார்த்த நாள்: 15 October 2018.
- ↑ "Abhilasha Kumari takes charge of office of Chairperson of Gujarat Human Right Commission for five-year term" (in en-US). DeshGujarat. 17 May 2018. http://deshgujarat.com/2018/05/17/abhilasha-kumari-takes-charge-of-office-of-chairperson-of-gujarat-human-right-commission-for-five-year-term/.
- ↑ Soszynski, Henry. "BASHAHR". members.iinet.net.au. Archived from the original on 29 September 2018. பார்க்கப்பட்ட நாள் 17 September 2018.