அப்சான் அஞ்சும்

இந்திய தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் தொகுப்பாளர்

அப்சான் அஞ்சும் (இந்தி: अफ़शां अंजुम) ஓர் இந்தியத் தொலைக்காட்சிப் பத்திரிகையாளர் மற்றும் தொகுப்பாளர். என்டிடிவி இந்தியாவில் மூத்த செய்தி ஆசிரியராகப் பணிபுரிந்தார்.[1] அஞ்சும் ஐசிசி உலகக்கிண்ணத் துடுப்பாட்டப் போட்டிகளைத் தொகுத்து வழங்கியதன் மூலம் பரவலாக அறியப்படுகிறார். மேலும், கேல் இந்தியா மற்றும் கூக்லி ஆகிய விளையாட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார். ஐந்து முறை NT விருதை வென்றுள்ளார்.

சொந்த வாழ்க்கை

தொகு

அஞ்சும் புது தில்லியில் பிறந்தார். இவரது தந்தை ஆவ்ரி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிந்தார். இவருக்கு இரண்டு மூத்த சகோதரர்கள் உள்ளனர், ஒருவர் மரபணு பொறியியல் மற்றும் உயிரி தொழில்நுட்பத்திற்கான சர்வதேச மையத்தில் விஞ்ஞானியாவார்,மற்றொருவர் சொந்தமாக வணிக நிறுவனத்தை நடத்துகிறார். யுனிசெஃப் நிறுவனத்தில் பணிபுரியும் இடேனிசு அசீசை இவர் மணந்தார். தற்போது ஸ்ரீநகரில் வசிக்கிறார்.

தொழில் வாழ்க்கை

தொகு

அஞ்சும் தில்லி பல்கலைக்கழகத்தில் இதழியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார் மற்றும் 2006 இல் ஐக்கிய இராச்சியம், வேல்சு, கார்டிஃப் பல்கலைக்கழகத்தில் தாம்சன் அறக்கட்டளையில் ஒளிபரப்பு பத்திரிகையில் இந்தியாவின் இளம் பத்திரிகையாளர்களுக்கான பிரித்தானிய உதவித்தொகைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆஜ் தக் மூலம் நிருபராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் 2003 இல் என்டிடிவியில் சேர்ந்தார். அப்போதிருந்து, அவர் ஒரு நிருபராக இருந்து விளையாட்டுப் பிரிவில் மூத்த செய்தி ஆசிரியராகப் பணியாற்றினார்.

விருதுகளும் பாராட்டுகளும்

தொகு

அஞ்சும் 2007 மற்றும் 2014 ஆண்டுகளுக்கு இடையில் ஐந்து முறை 'இந்தியில் சிறந்த விளையாட்டு வழங்குநருக்கான NT விருதை வென்றுள்ளார் [2] [3] [4] [5] மாதவ் ஜோதி அலங்கார் போன்ற பல மதிப்புமிக்க விருதுகளையும் வென்றுள்ளார்.

சான்றுகள்

தொகு
  1. "Afshan anjum". ndtv.com.
  2. "NT Awards 2008". http://ntawards.indiantelevision.com/y2k8/winners.htm. 
  3. "NT Awards 2010". http://ntawards.indiantelevision.com/y2k10-new/winners.htm. 
  4. "NT Awards 2013". http://ntawards.indiantelevision.com/y2k13/winners.php. 
  5. "NT Awards 2014". http://ntawards.indiantelevision.com/y2k14/winners.php. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்சான்_அஞ்சும்&oldid=3816999" இலிருந்து மீள்விக்கப்பட்டது