அப்துல்லா சிடி
அப்துல்லா சிடி அல்லது சிக் டாட் பின் அஞ்சாங் அப்துல்லா, (Abdullah CD, 2 அக்டோபர் 1923 – 13 சனவரி 2024) என்பவர் மலேசியாவில் ஓர் அரசியல்வாதி; மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளராகப் பொறுப்பு வகித்தவர்.[1]
அப்துல்லா சிடி Abdullah CD | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சிக் டாட் பின் அஞ்சாங் அப்துல்லா 2 அக்டோபர் 1923 லம்போர் கிரி, பாரிட், பேராக், மலாயா |
இறப்பு | 13 சனவரி 2024 சுக்கிரின், நராதிவாட், தாய்லாந்து | (அகவை 100)
அரசியல் கட்சி | மலாயா பொதுவுடைமை கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | மலாய் தேசிய கட்சி; மலாயாவின் புரட்சிகர மலாய் தேசியக் கட்சி |
துணைவர்(கள்) | சூரியானி அப்துல்லா (தி. 1955; இற. 2013) |
பிள்ளைகள் | 1 மகள் |
வாழிடம்(s) | சுக்கிரின், தாய்லாந்து |
கல்வி | கிளிபர்ட் பள்ளி, கோலாகங்சார் |
அறியப்படுவது | மலாயா அவசரகாலம் முக்கிய நபர் |
Military service | |
பற்றிணைப்பு | மலாயா தேசிய விடுதலை இராணுவம் |
சேவை ஆண்டுகள் | 1949 - 1989 |
அலகு | 10-ஆவது மலாய்ப் படை |
போர்கள்/யுத்தங்கள் | மலாயா அவசரகாலம்;
|
வாழ்க்கை வரலாறு
தொகுஅப்துல்லா சிடி, 1923 அக்டோபர் 2-ஆம் தேதி, பேராக், பாரிட் நகர்ப் பகுதியில் மினாங்கபாவு பெற்றோருக்குப் பிறந்தார். 1880-ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான மகா ராசாலேலா போர்களில் இருந்த ஆர்வங்களால் அவரும் மலாயா விடுதலைக் கொள்கையில் ஈர்க்கப்பட்டார்.[2][3]
பேராக், பாசீர் சாலாக் எனும் இடத்தில் பிரித்தானிய ஆணையர் ஜேம்சு பர்ச் என்பவர்; மகாராசா லேலா என்பவரால் 1875 நவம்பர் மாதம் 2-ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த நிகழ்வு மலாயா மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இளம் மலாயர் ஒன்றியம்
தொகுஇளைஞனாக இருந்த போது, அவர் ’இளம் மலாயர் ஒன்றியம்’ அமைப்பில் சேர்ந்தார். மேலும் சப்பானிய ஆக்கிரமிப்பின் ஆரம்ப கட்டங்களில் பேராக்கில் உள்ள லம்போர் மாவட்டத்தில் இளம் மலாய் ஒன்றியத்தின் செயலாளராக இருந்தார்.
இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, அக்டோபர் 1945-இல் மலாய் தேசியக் கட்சியை அமைப்பதில் அப்துல்லா சிடி ஈடுபட்டார்.
அகமது போசுதமாம்
தொகுமலாய் தொழிலாளர் இயக்கத்தை ஒழுங்கு அமைப்பதற்கும் அவர் பொறுப்பு ஏற்றார். மேலும் அகில மலாயா தொழிற்சங்கங்களின் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1948-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மலாயாவின் பிரித்தானிய காலனித்துவ அரசு மலாயா அவசரநிலையை பிரகடனப் படுத்தியது. அதற்கு சிறிது காலத்திற்கு முன்பு, அப்துல்லா சிடி, டாக்டர் புர்கானுதீன் எல்மி மற்றும் அகமது போசுதமாம் ஆகியோர் மலாயா சுதந்திரத்திற்கான போராட்டத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை விவாதிக்க ஒரு கூட்டத்தை நடத்தினர்.
மலாயா அவசரகாலம்
தொகுபிரித்தானியர்கள் மலாயா அவசரநிலையை அறிவித்த போது, அப்துல்லா சிடி, மலாயா கம்யூனிஸ்டு கட்சி; அங்காத்தான் மூடா இன்சாப் அமைப்பின் உறுப்பினர்கள் பலரை மலாயா காடுகளில் பிரித்தானிய எதிர்ப்பு கெரில்லா புரட்சியில் ஈடுபடுத்தினார். ஜூலை 1948 இல், வடக்கு பகாங்கில் பிடிபட்டார். ஆனாலும் அவர் தப்பித்தார்.
12 மே 1949-இல், பகாங், தெமர்லோவில் மலாயா பிரித்தானிய கட்சியின் 10-ஆவது படைப் பிரிவைத் தொடக்கினார். மேலும் 1989-ஆம் ஆண்டு வரை அதன் தலைவராக இருந்தார்.
அரசாங்கத்துடன் அமைதி ஒப்பந்தம்
தொகுபற்பல போராட்டங்களுக்குப் பிற்கு, 1989 டிசம்பர் 2-ஆம் தேதி, மலேசிய அரசாங்கத்துடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதன் பின்னர் மலேசிய அரசாங்கத்திற்கு எதிரான ஆயுதப் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்தது.
அப்துல்லா சிடி, மலாயாவை ஆட்சி செய்த பிரித்தானியர்களுக்கு எதிராகப் பல ஆயுதப் போர்களில் ஈடுபட்டார். அந்தப் போர்களில் பலத்த காயங்களுக்கும் உள்ளானார்.
சூரியானி அப்துல்லா
தொகுமலாயா பிரித்தானிய கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்த சூரியானி அப்துல்லா எனும் நீ எங் மிங் சிங் (née Eng Ming Ching) என்பவரை பிப்ரவரி 1955-இல் மணந்தார். போர் அமைதிக்குப் பின்னர், இருவரும் அவர்கள் தாய்லாந்து, சுக்கிரின் எனும் பகுதியில் வாழ்ந்தனர். 2013-இல் சூரியானி மரணம் அடைந்தார்.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Abdullah CD, the leader of the 10th Regiment of the PKM, who is now 96 years old and suffers from speech problems". பார்க்கப்பட்ட நாள் 21 February 2023.
- ↑ Ishak Saat, Radikalisme Melayu Perak 1945–1970, USM, 2014
- ↑ Suriani Abdullah(1999), Rejimen Ke-10 dan Kemerdekaan, Nan Dao Publisher