அப்துல் பாரி பிரங்கி மகாலி
அப்துல் பாரி பிரங்கி மகாலி ( Abdul Bari Firangi Mahali ) (1878-1926) ஓர் இந்திய முஸ்லிம் அறிஞரும் இலக்னோவில் உள்ள பிரங்கி மகால் பகுதியைச் சேர்ந்த எழுத்தாளருமாவார்.[1] இவர் 111 புத்தகங்களை எழுதியுள்ளார்.[1]
அப்துல் பாரி பிரங்கி மகாலி | |
---|---|
சுய தரவுகள் | |
பிறப்பு | 1878 |
இறப்பு | 1926 |
சமயம் | இசுலாம் |
வரலாறு
தொகுஇவரது குடும்பம் பீகாரின் பாராபங்கியிலுள்ள சிகாலி பகுதியிலிருந்து பிரங்கி மகாலுக்கு 1692 வாக்கில் சென்றது.[1] 1915இல், இவர் இலக்னோவில் வசித்து வந்தார்.
அரசியல்
தொகுமுதல் உலகப் போரின்போது துருக்கி சுல்தானை பிரித்தன் ஆதரிக்கவோ அல்லது போரிலிருந்து வெளியேறவோ இவர் கேட்டுக்கொண்டார்.[2] ஜனவரி 26, 1919 அன்று இவர் இலக்னோவில் முஸ்லிம்களுக்கு எதிரான பிரிட்டிசாரின் அணுகுமுறைக்கு எதிராக ஒரு போராட்டக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.[3][4] கிலாபத் இயக்கத்தில் இவர் மிகவும் தீவிரமாக இருந்தார்.[1]
இவர் இந்து - முஸ்லிம் ஒற்றுமையை, குறிப்பாக கிலாபத் போராட்டத்தின் போது வலியுறுத்தினார். மகாத்மா காந்தியின் கூட்டாளியாகவும் இருந்தார். மற்ற சந்தர்ப்பங்களில், இந்துக்களுக்காக மாடுகளை பலியிட வேண்டாம் என்று முஸ்லிம்களை இவர் கேட்டுக்கொண்டார்.[5]
நிறுவனங்கள்
தொகு- மேற்கத்திய கல்விக்கு எதிரான தனது எதிர்ப்பில், இலக்னோவில் மதர்ஸா-இ-நிசாமியா என்ற கல்வி நிறுவனத்தை நிறுவினார்.
- முஸ்லிம் புனித தலங்களை ஆங்கிலேயர்கள் இழிவுபடுத்துவதைத் தடுக்க அஞ்சுமான்-இ-குடம்-இ-கப்பாவை (1914) அமைத்தார்.
- இவர் தாருல் முசன்னெபின் ஷிப்லி அகாதமியின் (1915-1916) நிறுவனர் உறுப்பினராக இருந்தார்.[6]
- இந்தியாவின் ஐக்கிய மாகாணங்களில் (1920) ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் நிறுவனர் உறுப்பினராக இருந்தார்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Cam Diary: Lucknow's Farangi Mahal". Daily Times (newspaper). Archived from the original on 22 April 2007. பார்க்கப்பட்ட நாள் 22 August 2019.
- ↑ Gandhi's Rise to Power: Indian Politics 1915–1922 By Judith M. Brown
- ↑ Jafariya News, 21 November 2004 பரணிடப்பட்டது 6 ஏப்பிரல் 2010 at the வந்தவழி இயந்திரம்
- ↑ The historic perspective of Inhidaam-e-Jannatul Baqee & Jannatul Mualla பரணிடப்பட்டது 12 ஏப்பிரல் 2010 at the வந்தவழி இயந்திரம்
- ↑ September 1923. Francis Robinson, Separatism Among Indian Muslims, Delhi, 1975, p. 339.
- ↑ Darul Musannefin Shibli Academy Retrieved 22 August 2019
- ↑ "Jamia Millia Islamia, A Historical Note". Archived from the original on 30 June 2007. பார்க்கப்பட்ட நாள் 22 August 2019.