அமனுல்லாகான்

ஆப்கானிஸ்தானின் மன்னர் (1892-1960)

அமனுல்லாகான் (பஷ்தூ: أمان الله خان, உருது: أمانالله خان ; சூன் 1, 1892 – ஏப்ரல் 25, 1960) ஆப்கானித்தான் இராச்சியத்தின் அரசுத் தலைவராக 1919 முதல் 1929 வரை இருந்தவராவார்; முதலில் அமீராகவும் 1926க்குப் பின்னர் அரசனாகவும் இருந்தார்.[2]ஆப்கானித்தானின் அமீராக இருந்த அபிபுல்லாவின் மகனான இவர், தந்தை கொலையுண்ட பின் படைகளின் ஆதரவுடன் அமீரானார். அமனுல்லாகான் கி.பி. 1919 - ல் இந்தியாவின் மீது படையெடுத்தார். இது மூன்றாம் ஆங்கில-ஆப்கானியப் போர் எனப்பட்டது. புதிய அரசியல் சட்டம் ஒன்றையும் இவர் நாட்டிற்கு அளித்தார். ஐக்கிய இராச்சியத்திலிருந்து விடுபட்ட பின்னர் தமது நாட்டுக்கெனத் தனியான வெளிநாட்டுக் கொள்கையை வகுத்தார்.

அமனுல்லாகான்
கடவுள் கொடையளித்த ஆப்கானித்தான் இராச்சியத்தின் அரசர்[1]
ஆட்சிபெப்ரவரி 28, 1919 - சனவரி 14, 1929
முன்னிருந்தவர்நசுருல்லா கான்
பின்வந்தவர்இனயத்துல்லா கான்
தந்தைஅபிபுல்லா கான்
தாய்சர்வார் சுல்தானா பேகம்
பிறப்புசூன் 1, 1892
பாஃக்மான், ஆப்கானித்தான்
இறப்புஏப்ரல் 25, 1960(1960-04-25) (அகவை 67)
சூரிக்கு, சுவிட்சர்லாந்து

அமனுல்லாகான் ஆப்கானிஸ்தானத்தை ஐரோப்பிய மயமாக்க விரும்பி பல சீர்திருத்தங்களை மேற்கொண்டார். அதனை விரும்பாத இஸ்லாமிய முல்லாக்கள் 1924 மார்ச் முதல் 1925 ஜனவரி வரை கலகத்தில் ஈடுபட்டனர். கோஸ்ட் கலகம் எனப்பட்ட இதுவே 1928 - ல் நடைபெற்ற மக்கள் புரட்சிக்கு வித்திட்டது. அப்புரட்சி தோல்வியடைந்தது. ஆனால், அமனுல்லாகான் 1929 ஜனவரி 14 - ஆம் நாள் முடி துறந்து ரோமாபுரிக்குச் சென்றார். பின் 1941 - ஆம் ஆண்டு ஜெர்மனி உதவியுடன் ஆட்சியைக் கைப்பற்ற முயன்றார். தமது முயற்சிகளில் தோல்வியடைந்த அமனுல்லாகான் 1960ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் சூரிக்கு நகரில் மரணமடைந்தார்.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமனுல்லாகான்&oldid=3408439" இலிருந்து மீள்விக்கப்பட்டது