அமரகுந்தி

சேலம் மாவட்ட சிற்றூர்

அமரகுந்தி (Amaragunthi) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், சேலம் மாவட்டம், தாரமங்கலம் வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூராகும்.

அமரகுந்தி
சிற்றூர்
அமரகுந்தி is located in தமிழ் நாடு
அமரகுந்தி
அமரகுந்தி
தமிழ்நாட்டில் அமைவிடம்
அமரகுந்தி is located in இந்தியா
அமரகுந்தி
அமரகுந்தி
அமரகுந்தி (இந்தியா)
ஆள்கூறுகள்: 11°44′N 77°58′E / 11.733°N 77.967°E / 11.733; 77.967
நாடு இந்தியா
Stateதமிழ்நாடு
மாவட்டம்சேலம்
பரப்பளவு
 • மொத்தம்6.4926 km2 (2.5068 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்6,100
 • அடர்த்தி940/km2 (2,400/sq mi)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
636503
இணையதளம்https://www.facebook.com/amaragunthivillage

புவியியல்

தொகு

அமரகுந்தி மாவட்ட தலைமையகமான சேலத்தில் இருந்து மேற்கே 29 கி.மீ தொலைவிலும், தாரமங்கலத்திலிருந்து 9 கி.மீ. தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 339 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

இதன் அருகில் பாணபுரம், தோசம்பட்டி, பெரியசோரகை, உ. மாரமங்கலம், நங்கவள்ளி. ஆகிய சிற்றூர்கள் உள்ளன. அமரகுந்திக்கு தெற்கே தாரமங்கலமும், வடக்கே மேச்சேரியும், கிழக்கே ஓமலூர் வட்டமும், மேற்கே கடையம்பட்டியும் எல்லைகளாக உள்ளன.

போக்குவரத்து

தொகு

அமரகுந்திக்கு அருகிலுள்ள தொடருந்து நிலையங்களாக தோலாசம்பட்டி, மேச்சேரி சாலை நிலையங்கள் உள்ளன. 23 கி.மீ தொலைவில் சேலம் சந்திப்பு தொடருந்து நிலையம் உள்ளது.

மக்கள் வகைப்பாடு

தொகு

அமரகுந்தியின் உள்ளூர் மொழி தமிழ். அமரகுந்தி கிராமத்தில் 1567 வீடுகளும், 6100 மக்களும் வசிக்கின்றனர். இதில் பெண்களின் எண்ணிக்கை 47.2% உள்ளது. கிராம மக்களின் கல்வியறிவு விகிதம் 60.0% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 24.2% ஆகவும் உள்ளது.[1]

கோயில்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Amaragundhi Village". {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமரகுந்தி&oldid=4059714" இலிருந்து மீள்விக்கப்பட்டது