அமோகபாசா கல்வெட்டு

அமோகபாசா சிலையின் பின்புறத்தில் எழுத்து வடிவங்களில் உள்ள் கல்வெட்டு

அமோகபாசா கல்வெட்டு (ஆங்கிலம்: Amoghapasa Inscription இந்தோனேசியம்: Prasasti Amoghapasa) என்பது பாடாங் ரோக்கோ கல்வெட்டின் (Padang Roco Inscription) மேல்பகுதியில் உள்ள அமோகபாசா சிலையின் (Pāduka Amoghapāśa; Avalokiteśvara) பின்புறத்தில் எழுத்து வடிவங்களில் உள்ள் கல்வெட்டு ஆகும்.

அவலோகிதர் சிலையின் பின்புறத்தில் எழுதப்பட்ட கல்வெட்டு; செவ்வக அடித்தளம் பாடாங் ரோக்கோ கல்வெட்டு என்று அழைக்கப்படுகிறது.

1347-ஆம் ஆண்டில், ஆதித்தியவர்மன், பாடாங் ரோக்கோ கல்வெட்டின் அமோகபாசா சிலையின் பின்புறத்தில் இந்தக் கல்வெட்டைச் சேர்த்தார்[1]:232  அந்தச் சிலை தன்னை சித்தரிப்பதாக ஆதித்தியவர்மன் அறிவித்தார்.

இன்று இந்தக் கல்வெட்டு, ஜகார்த்தாவில் உள்ள இந்தோனேசியாவின் தேசிய அருங்காட்சியகத்தில் உள்ளது.

பாடாங் ரோக்கோ கல்வெட்டு

தொகு

பாடாங் ரோக்கோ கல்வெட்டு என்பது 1286-ஆம் ஆண்டு, இந்தோனேசியா, மேற்கு சுமாத்திரா, தருமசிராயா மாநிலம், சித்தியூங் மாவட்டம், நாகரி சிகுந்தர், பாடாங் ரோக்கோ, பாத்தாங்காரி ஆற்றின் மூலத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு ஆகும்.[2]

இந்தக் கல்வெட்டு, அவலோகிதர் சிலையின் அடித்தளமாக உள்ளது.[3]

அமோகபாசா கல்வெட்டின் பின்புறம் (D.198-6469) எனும் குறியீடு செதுக்கப்பட்டுள்ளது.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Coedès, George (1968). Walter F. Vella (ed.). The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8248-0368-1.
  2. Muljana, Slamet, 1981, Kuntala, Sriwijaya Dan Suwarnabhumi, Jakarta: Yayasan Idayu, hlm. 223.
  3. Hendrik Kern, 'De Wij-inscriptie op het Amoghapâça-beeld van Padang-tjandi (Midden-Sumatra) 1269 Caka', Tijdschrift voor Indische taal-, land- en volkenkunde, Uitgegeven door het Bataviaasch Genootschap van Kunsten en Wetenschappen (TBG), 49, 1907, pp.159-171; also Hendrik Kern, 'De Wij-inscriptie op het Amoghapaca-beeld van Padang Candi (Midden-Sumatra) 1269 Caka', Verspreide Geschriften, The Hague, Martinus Nijhoff, Vol. VII, 1917, pp.165-75.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமோகபாசா_கல்வெட்டு&oldid=4177927" இலிருந்து மீள்விக்கப்பட்டது