பாடாங் ரோக்கோ கல்வெட்டு

பாத்தாங்காரி ஆற்றின் மூலத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட 1286-ஆம் ஆண்டு கல்வெட்டு

பாடாங் ரோக்கோ கல்வெட்டு (ஆங்கிலம்: Padang Roco Inscription இந்தோனேசியம்: Prasasti Padang Roco) என்பது இந்தோனேசியா, மேற்கு சுமாத்திரா, தருமசிராயா மாநிலம், சித்தியூங் மாவட்டம், நாகரி சிகுந்தர், பாடாங் ரோக்கோ, பாத்தாங்காரி ஆற்றின் மூலத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட 1286-ஆம் ஆண்டு கல்வெட்டு ஆகும்.[1]

பாடாங் ரோக்கோ கல்வெட்டு
Padang Roco Inscription
Prasasti Padang Roco
கல்வெட்டின் மேல் அவலோகிதர் சிலை.
செய்பொருள்எரிமலைப் படிகப்பாறை
உருவாக்கம்1208 அல்லது1286
கண்டுபிடிப்புபாடாங் ரோக்கோ, நாகரி சிகுந்தர், சித்தியூங் மாவட்டம், தருமசிராயா மாநிலம், மேற்கு சுமாத்திரா, இந்தோனேசியா (1911)
தற்போதைய இடம்இந்தோனேசியாவின் தேசிய அருங்காட்சியகம், ஜகார்த்தா
பதிவுD.198-6468

கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட இடமான பாடாங் ரோக்கோ எனும் கிராமத்தின் பெயரில் இந்தக் கல்வெட்டிற்கும் பெயரிடப்பட்டது. பாடாங் ரோக்கோ என்பது உள்ளூர் மினாங்கபாவு மொழிப் பெயராகும். சிலைகளின் புலம் (Field of Statues) என்று பொருள்படும்.

பாடாங் என்றால் வயல் என்று பொருள்; ரோக்கோ என்றால் இந்து-பௌத்த தெய்வங்களின் உருவமான அர்கா (Arca) அல்லது மூர்த்தி (Murti) பொருள்படும்.

விளக்கம்

தொகு

இந்தக் கல்வெட்டு 1911-இல் பாடாங் ரோக்கோவில் உள்ள பாத்தாங்காரி ஆற்றின் மூலத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது. செவ்வக வடிவிலான கல்லில் நான்கு பக்கங்களிலும் கல்வெட்டு செதுக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டு, அவலோகிதர் சிலையின் அடித்தளமாக உள்ளது.[2]

அவலோகிதர் சிலையின் பின்புறம் 1347 CE (NBG 1911: 129, 20e) தேதியிட்டு அமோகபாசா கல்வெட்டு என்று செதுக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டு பண்டைய ஜாவானிய எழுத்துக்களில் செதுக்கப்பட்டுள்ளது. கல்வெட்டில் இரண்டு மொழிகள் (பழைய மலாய் மொழி மற்றும் சமசுகிருதம்) (Krom 1912, 1916; Moens 1924; dan Pitono 1966) பயன்படுத்தப்பட்டுள்ளன.

இன்று இந்தக் கல்வெட்டு ஜகார்த்தா இந்தோனேசியாவின் தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டின் குறியீட்டு எண்கள்; அடித்தளத்திற்கான குறியீடு D.198-6468; அமோகபாசா சிலைக்கான குறியீடு D.198-6469.

தோற்றம்

தொகு

இந்தக் கல்வெட்டு 1208 CE - 1286 CE என தேதியிடப்பட்டுள்ளது. அதே காலக்கட்டத்தில் ஜாவா தீவில் சிங்கசாரி இராச்சியம் மற்றும் சுமாத்திராவில் தருமசிராயாவின் மெலாயு இராச்சியம் ஆகியவை ஆட்சியில் இருந்துள்ளன.

1208-ஆம் ஆண்டு, சிங்காசாரியின் மன்னர் கீர்த்தநகராவின் (King Kertanegara of Singhasari) கட்டளையின் கீழ், அமோகபாசா அவலோகிதர் சிலை பூமிஜாவாவிலிருந்து (Bhumijawa) (ஜாவா) சுவர்ணபூமிக்கு (Suvarnabhumi) (சுமாத்திரா) கொண்டு செல்லப்பட்டது என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.

இந்தச் சிலை தருமசிராயாவில் அமைக்கப்படும். இந்தப் பரிசு சுவர்ணபூமி (சுமாத்திரா) மக்களை மகிழ்விக்கும்; குறிப்பாக அவர்களின் மன்னர் திரிபுவனராஜா மௌலிவர்மதேவாவை (Tribhuwanaraja Mauliwarmmadewa) மகிழ்விக்கும் என்று குறிக்கப்பட்டு உள்ளது.

ஆதித்யவர்மன்

தொகு

1347-இல், ஆதித்தியவர்மன் (Adityawarman) பாடாங் ரோக்கொ சிலையை ரம்பகான் (Rambahan) எனும் இடத்திற்கு மாற்றினார். இந்த இடம் பாத்தாங்காரி ஆற்றின் பிறப்பிடமான லாங்சாட் ஆற்றுக்கு (Langsat River) அருகில் உள்ளது.

சிலையின் பின்புறத்தில் ஆதித்தியவர்மன் மேலும் ஒரு கல்வெட்டையும் சேர்த்துள்ளார். இந்தக் கல்வெட்டு 1347 CE என தேதியிட்டு அமோகபாசா கல்வெட்டு (Amoghapasa inscription) என்று குறிப்பிடுகிறது. செவ்வக அடித்தள பாடாங் ரோக்கொ கல்வெட்டு இன்னும் பாடாங் ரோக்கொ பகுதியில் பாதுகாப்பாக உள்ளது.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Muljana, Slamet, 1981, Kuntala, Sriwijaya Dan Suwarnabhumi, Jakarta: Yayasan Idayu, hlm. 223.
  2. Hendrik Kern, 'De Wij-inscriptie op het Amoghapâça-beeld van Padang-tjandi (Midden-Sumatra) 1269 Caka', Tijdschrift voor Indische taal-, land- en volkenkunde, Uitgegeven door het Bataviaasch Genootschap van Kunsten en Wetenschappen (TBG), 49, 1907, pp.159-171; also Hendrik Kern, 'De Wij-inscriptie op het Amoghapaca-beeld van Padang Candi (Midden-Sumatra) 1269 Caka', Verspreide Geschriften, The Hague, Martinus Nijhoff, Vol. VII, 1917, pp.165-75.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாடாங்_ரோக்கோ_கல்வெட்டு&oldid=4177885" இலிருந்து மீள்விக்கப்பட்டது