மெலாயு இராச்சியம்
மெலாயு இராச்சியம் அல்லது மெலாயு, தருமசிராயா அல்லது ஜம்பி இராச்சியம் (ஆங்கிலம்: Melayu Kingdom; மலாய்; இந்தோனேசிய மொழி: Kerajaan Melayu; சீனம்: 末羅瑜國) என்பது இந்தோனேசியாவின் மேற்கு சுமாத்திரா மற்றும் ஜம்பி இராச்சியத்தில் அமைந்திருந்த ஒரு பாரம்பரிய புத்த இராச்சியம் ஆகும்.[1][2][3]
மெலாயு இராச்சியம் Melayu Kingdom Kerajaan Melayu | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
671–692 1028–1347 | |||||||||||||
தலைநகரம் | மினாங்கா; தருமசிராயா; பகாருயோங் | ||||||||||||
பேசப்படும் மொழிகள் | பழைய மலாய் மொழி சமசுகிருதம் | ||||||||||||
சமயம் | பௌத்தம், இந்து மதம் | ||||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||||
மகாராஜா | |||||||||||||
• 1183 | திரிலோகய ராஜா | ||||||||||||
• 1286 – 1316 | திரிபுவனராஜா | ||||||||||||
• 1316 – 1347 | அகரேந்திரவர்மன் | ||||||||||||
வரலாறு | |||||||||||||
• தொடக்கம் | 671 | ||||||||||||
• இணைப்பு சிறீவிஜயம் | 692 | ||||||||||||
• விடுதலை | 1028 | ||||||||||||
• கூட்டு மயாபாகித்து பேரரசு | 1347 | ||||||||||||
நாணயம் | தங்க வெள்ளி நாணயங்கள் | ||||||||||||
| |||||||||||||
தற்போதைய பகுதிகள் | இந்தோனேசியா; சிங்கப்பூர்; மலேசியா; தாய்லாந்து |
இந்த இராச்சியத்தைப் பற்றிய பெரும்பான்மைத் தகவல்களுக்கான முதன்மைச் சான்றுகள் தாங் புதிய வரலாறு (New History of the Tang) மற்றும் 671-இல், அங்கு வருகை புரிந்த சீன புத்த துறவி யிஜிங் என்பவரின் (Chinese Buddhist monk Yijing) நினைவுக் குறிப்புகள் ஆகும்.
692-ஆம் ஆண்டு, மெலாயு இராச்சியம், சிறீ விஜய பேரரசால் கவரப்பட்டு சிறீ விஜய பேரரசிற்குள் இணைக்கப்பட்டது. இருப்பினும், 12-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்த இணைப்பு உடைந்து விட்டது.[4]
பொது
தொகுமெலாயு இராச்சியத்தின் சரியான அமைவிடம் வரலாற்றாசிரியர்கள் இடையே இன்றும் ஆய்வுக்கு உட்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் சுமத்திராவில், பலெம்பாங்கிற்கு வடக்கே சுமார் 300 கிமீ தொலைவில், இன்றைய ஜாம்பி நிலப்பகுதியைச் சுற்றி உள்ள பகுதியில் மெலாயு இராச்சியம் நிறுவப்பட்டு இருக்கலாம் என்பது ஒரு கோட்பாடு.
இந்தக் கோட்பாட்டின்படி, பாத்தாங்காரி ஆற்றுப் பகுதியில் (Batang Hari River) வசித்த இனக் குழுக்களால் நிறுவப்பட்டு இருக்கலாம்; மற்றும் பகாருயோங் (Pagarruyung) மினாங்கபாவு உள்நாட்டு தங்க நிறுவப்பட்டு இருக்கலாம் எனவும் ஒரு கருத்து நிலவுகிறது.[5]
சொற்பிறப்பியல்
தொகுமெலாயு என்ற சொல்லின் தோற்றத்திற்கு பல்வேறு கோட்பாடுகள் உள்ளன. ஒரு கோட்பாடு, ஜாவானியச் சொற்களான மெலாயு (Melayu) அல்லது மலாயு (Mlayu) எனும் சொற்களில் இருந்து பெறப்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறது. மெலாயு என்றால் தயார் என்று பொருள்படும்.
மற்றொரு கோட்பாடு, சுமாத்திராவில் சுங்கை மெலாயு என்ற பெயரைக் கொண்ட ஓர் ஆற்றின் வலுவான நீரோட்டத்தை விவரிக்கிறது. இந்த ஆறு பாத்தாங்காரி ஆற்றின் கிளை ஆறாகும்.
பாத்தாங் காரி ஆறு (Batang Hari River) பகாருயோங் படகுத் துறைப் பகுதியை அடைகிறது.[6] இந்தப் பெயர் பின்னர் மெலாயு இராச்சியத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கலாம். இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் தாங்கள் குடியேறிய இடத்திற்கு ஆற்றின் பெயரை வைப்பது வழக்கம் ஆகும்.[7]
மலையூர்
தொகுமற்றொரு கோட்பாட்டின்படி, மலை (Malay) மற்றும் ஊர் (Ur) அல்லது நிலம் (Land) என்று பொருள்படும் தமிழ்ச் சொற்களின் கூட்டுச் சொல்லான மலையூர் என்பதிலிருந்து உருவாகி இருக்கலாம். அதுவே சுமாத்திராவில் உள்ள மலைத்தொடரான பாரிசான் மலைகளைக் குறிக்கலாம்.[8][9][10]
வாயு புராணம் (Vayu Purana) எனும் இந்து புராண நூலின் 48-ஆம் அத்தியாயத்தில் மலைய திவீபா (Malayadvipa) என்ற சொல் உள்ளது; மலைத் தீவு என்று பொருள்படும். மலைய திவீபா எனும் அந்தச் சொல் கிழக்குக் கடலில் தங்கமும் வெள்ளியும் நிறைந்த மாநிலங்களில் ஒன்றாக விளங்கும் ஒரு மாநிலத்தை அடையாளப் படுத்துகிறது.
தித்திவாங்சா மலைத்தொடர்
தொகுஅறிஞர்கள் சிலர் இந்தச் சொல்லை சுமத்திரா தீவுடன் ஒப்பிடுகின்றனர்.[11] எனினும், இந்திய அறிஞர்கள் பலர் இந்தச் சொல் மலாய் தீபகற்பத்தைக் குறிக்கலாம் என்று உறுதிபடுத்துகின்றனர்.[12][13]
தித்திவாங்சா மலைத்தொடர் எனும் மலைத்தொடர், மலாயா தீபகற்பத்தைக் இரு பிரிவுகளாகப் பிரிக்கிறது. இந்த மலைத்தொடரைச் சுற்றியுள்ள பகுதிகளில் தங்க கனிமங்கள் நிறைந்து உள்ளதாகவும் அறியப்படுகிறது.[14][15][16][17] ஆகவே, இந்தக் கூற்றும் மலையத்வீபா எனும் கோட்பாட்டிற்குப் பொருந்தி வருகிறது.
மெலாயு சொல் தோற்றம்
தொகுதொலெமியின் புவியியல் சான்றுகள்
தொகுமெலாயு கோலோன் (Maleu-Kolon) என்ற சொல் தொலெமியின் ஜியோகிராபியா (Ptolemy's Geographia) எனும் புவியியல் நூலில் பயன்படுத்தப்பட்டது. இந்தச் சொல் மலைக்கோலம் (Malayakolam) அல்லது மலைக்கூரம் (Malaikurram) என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து தோன்றியதாக நம்பப்படுகிறது.
அந்தச் சொற்கள் மலாயா தீபகற்பத்தின் புவியியல் பகுதியைக் குறிக்கின்றன.[18] 7-ஆம் நூற்றாண்டில், ஒரு தேசம் அல்லது ஓர் இராச்சியத்திற்கான (Maleu-Kolon) என்ற சொல்லின் முதல் பயன்பாடு யிஜிங் என்பவரால் பதிவு செய்யப்பட்டது.
பிரகதீஸ்வரர் ஆலயச் சான்றுகள்
தொகு11-ஆம் நூற்றாண்டு, பிரகதீஸ்வரர் ஆலயத்தின் தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு மலையூரைக் குறிப்பிடுகிறது. சிறீ விஜய சோழர் படையெடுப்பு காலத்தில் ஓர் இராச்சியத்தின் அரண்மனைக்கு வலுவான அரணைக் கொண்ட ஒரு மலை இருந்தது என அந்தக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டு உள்ளது.
இது முதலாம் ராஜேந்திர சோழனின் படையெடுப்பைக் குறிக்கிறது.[19]
சீன வரலாற்றுச் சான்றுகள்
தொகுயுவான் அரசமரபு (1271-1368) மற்றும் மிங் அரசமரபு (1368-1644) சீன வரலாற்று நூல்களில் மா-லா-யு (Ma-La-Yu) என்றசொல் அடிக்கடி குறிப்பிடப்பட்டுள்ளது. இது தென் சீனக் கடலுக்கு அருகில் உள்ள ஓர் இராச்சியத்தைக் குறிக்கிறது.
சீன வரலாற்று நூல்களில் பயன்படுத்தப்பட்ட சொற்களில் போக்-லா-யு (Bok-la-yu), மோக்-லா-யு (ஆங்கிலம்: Mok-la-yu; சீனம்: 木扌于), மா-லி-யு-ஊர் (ஆங்கிலம்: Ma-li-yu-er; சீனம்: 马里宇儿), ஓ-லை-யு (ஆங்கிலம்: Oo-lai-yu; சீனம்: 武来了; என்பது துறவி சுவான்சாங் (Xuanzang) எழுத்துப் படிவத்தில் இருந்து); மற்றும் ஊ-லாய்-யு (ஆங்கிலம்: Wu-lai-yu; சீனம்: (无码) போன்றவை சான்றுகளாக அமைகின்றன.[20][21]
மலையூர்
தொகுயுவான் அரசமரபு வரலாற்றில், மலாயுவிற்கு எதிராக தாய்லாந்து சுகோத்தாய் இராச்சியத்தின் (Sukhothai Kingdom) தெற்கு நோக்கிய விரிவாக்கத்தை விவரிப்பதில் மலையூர் (Ma-li-yu-er) என்ற சொல் குறிப்பிடப்பட்டுள்ளது:[22]
“ | ".. சயாம் மற்றும் மா-லி-யூ-ர் இடையே பகை ஏற்பட்டு... இருவரும் ஒருவரை ஒருவர் கொன்றனர்... | ” |
தாய்லாந்து சுகோத்தாய் இராச்சியத்தின் நடவடிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், சுகோத்தாய் இராச்சியத்தின் மூன்றாவது மன்னர் ராம் காம் ஏயிங் (Ram Khamhaeng) என்பவரின் அரசவைக்கு யுவான் அரசமரபு ஆணை ஓலையுடன் ஒரு சீனத் தூதர் வந்தார்.[23]
மார்க்கோ போலோ
தொகுஅந்த ஆணை ஓலையில் "உங்கள் வாக்குறுதியைக் காப்பாற்றுங்கள், மா-லி-யு-ஊருக்கு எந்தத் தீமையும் செய்யாதீர்கள்" என்று ஆணையிடப்பட்டு இருந்தது.[25] சீனப் பதிவேட்டில் தோன்றிய "மா-லி-யு-ஊர்" (Ma-li-yu-er) என்ற இராச்சியம் மெலாயு இராச்சியமாக இருக்கலாம்.
அதே காலக் கட்டத்தில் வாழ்ந்த வெனிசு பயணி மார்க்கோ போலோ (1254-1324) என்பவரால் குறிப்பிடப்பட்ட இராச்சியம்; மெலாயு இராசியமாகவும் இருக்கலாம். மார்க்கோ போலோவின் பயணங்கள் (The Travels of Marco Polo) எனும் நூலில், அவர் மலாய் தீபகற்பத்தில் உள்ள மலையூர் என்ற இராச்சியத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.[24][25]
அமோகபாசா கல்வெட்டு
தொகுமெலாயு பூமி (bhūmi Mālayu) எனும் சொற்கள்; 1286 என குறிக்கப்பட்ட பாடாங் ரோக்கோ கல்வெட்டில் (Padang Roco Inscription) பொறிக்கப்பட்டுள்ளன.[26]
பாடாங் ரோக்கோ கல்வெட்டுப் பதிவின் படி, மெலாயு பூமி என்பது தருமசிராயா இராச்சியத்துடன் தொடர்புடையது என அறியப்படுகிறது. 1347 அமோகபாசா கல்வெட்டில் (Amoghapasa Inscription) மலையபுரம் (Malayapura) எனும் மலாயா இராச்சியம் ஆதித்யவர்மனால் அறிவிக்கப்பட்டது என பதிவாகி உள்ளது. மீண்டும் இந்தப் பதிவு தருமசிராயா இராச்சியத்தைக் குறிக்கின்றது.[27][28][4]:243
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Muljana, Slamet , (2006), Sriwijaya, Yogyakarta: LKIS, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 979-8451-62-7.
- ↑ I-Tsing (2000). A Record of the Buddhist Religion As Practised in India and the Malay Archipelago (A.D. 671–695). Translated by Takakusu, Junjiro. Asian Educational Services. pp. xl–xlvi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-206-1622-6.
- ↑ Reid, Anthony (2001). "Understanding Melayu (Malay) as a Source of Diverse Modern Identities". Journal of Southeast Asian Studies 32 (3): 295–313. doi:10.1017/S0022463401000157. பப்மெட்:19192500.
- ↑ 4.0 4.1 Coedès, George (1968). Walter F. Vella (ed.). The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. pp. 79–80, 83, 142, 179, 184. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8248-0368-1.
- ↑ Munoz, Paul Michel (2006). Early Kingdoms of the Indonesian Archipelago and the Malay Peninsula.
- ↑ Abdul Rashid, Melebek; Amat Juhari, Moain (2006), Sejarah Bahasa Melayu ("History of the Malay Language"), Utusan Publications & Distributors, pp. 9–10, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 967-61-1809-5
- ↑ Milner, Anthony (2010), The Malays (The Peoples of South-East Asia and the Pacific), Wiley-Blackwell, pp. 18–19, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4443-3903-1
- ↑ Weightman, Barbara A. (2011). Dragons and Tigers: A Geography of South, East, and Southeast Asia. John Wiley and Sons. p. 449. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781118139981.
- ↑ Tiwary, Shanker Shiv (2009). Encyclopaedia Of Southeast Asia And Its Tribes (Set Of 3 Vols.). Anmol Publications Pvt. Ltd. p. 37. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788126138371.
- ↑ Kumar Suresh Singh (2003). People of India. Vol. 26. Anthropological Survey of India. p. 981. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-85938-98-1.
- ↑ Deka, Phani (2007), The great Indian corridor in the east, Mittal Publications, p. 57, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8324-179-3
- ↑ Govind Chandra Pande (2005). India's Interaction with Southeast Asia: History of Science, Philosophy and Culture in Indian Civilization, Vol. 1, Part 3. Munshiram Manoharlal. p. 266. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-87586-24-1.
- ↑ Lallanji Gopal (2000). The economic life of northern India: c. A.D. 700–1200. Motilal Banarsidass. p. 139. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0302-2.
- ↑ D.C. Ahir (1995). A Panorama of Indian Buddhism: Selections from the Maha Bodhi journal, 1892–1992. Sri Satguru Publications. p. 612. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7030-462-8.
- ↑ Radhakamal Mukerjee (1984). The culture and art of India. Coronet Books Inc. p. 212. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-215-0114-9.
- ↑ Himansu Bhusan Sarkar (1970). Some contributions of India to the ancient civilisation of Indonesia and Malaysia. Calcutta: Punthi Pustak. p. 8.
- ↑ E.B. Yeap (1993). Journal of Southeast Asian Earth Sciences, Volume 8, Issues 1–4. Elsevier Ltd. p. 329-348. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/0743-9547(93)90035-N. பன்னாட்டுத் தர தொடர் எண் 0743-9547.
- ↑ Gerolamo Emilio Gerini (1974). Researches on Ptolemy's geography of eastern Asia (further India and Indo-Malay archipelago. Munshiram Manoharlal Publishers. p. 101. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7069-036-6.
- ↑ Benjamin Lewis Rice (1895). Epigraphia Carnatica (Volume X, Part I). Mysore Government Central Press. p. 41.
- ↑ Del, Chandini (2022-08-29). "5 Old Names Of Malaysia They Probably Didn't Teach You In School | TRP". therakyatpost.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-23.
- ↑ Mar, Ma Tin Cho (2019-08-24). "Bringing Malay Minorities Into the Fold: Adaptation and Survival". Voyaging Wananga. https://voyagingwananga.nz/dr-madam-tin-cho-ma/.
- ↑ "Chronicle of Mongol Yuan". பார்க்கப்பட்ட நாள் 7 February 2012.
- ↑ D.G.E. Hall (1981). History of South East Asia. Macmillan. p. 190. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-333-24163-9.
- ↑ Cordier Henri (2009). Ser Marco Polo; notes and addenda to Sir Henry Yule's edition, containing the results of recent research and discovery. Bibliolife. p. 105. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-110-77685-6.
- ↑ Marco Polo, Thomas Wright (1854). The travels of Marco Polo, the Venetian: the translation of Marsden revised, with a selection of his notes. H. Bohn. pp. 364–365.
- ↑ Muljana, Slamet, 1981, Kuntala, Sriwijaya Dan Suwarnabhumi, Jakarta: Yayasan Idayu, hlm. 223.
- ↑ Kern, J.H.C., (1907), De wij-inscriptie op het Amoghapāça-beeld van Padang Candi(Batang Hari-districten); 1269 Çaka, Tijdschrift voor Indische Taal-, Land-, en Volkenkunde.
- ↑ de Casparis, J. G., (1990), An Ancient Garden in West Sumatra, Saraswati Esai-Esai Arkeologi Kalpataru Majalah Arkeologi 9: 40–50.