மினாங்கபாவு மொழி

இந்தோனேசியாவில் பயன்பாட்டில் உள்ள மொழி

மினாங்கபாவு மொழி (ஆங்கிலம்: Minangkabau; மலாய்: Bahasa Melayu Negeri Sembilan; ஜாவி: بَاسُوْ مِيْنڠكَابَاوْ; இந்தோனேசிய மொழி: Bahasa Minangkabau; மினாங்கபாவு மொழி: Baso Minangkabau என்பது ஆஸ்திரனேசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும்.

மினாங்கபாவு மொழி
Minangkabau
Baso Nogoghi
Baso Minangkabau
بَاسُوْ مِيْنڠكَابَاوْ
بَهَاسَ مِيْنَاڠكَابَاوْ
நாடு(கள்)இந்தோனேசியா (மேற்கு சுமத்திரா)
பிராந்தியம்மேற்கு சுமத்திரா, ரியாவு, ஜம்பி, பெங்குலு, வடக்கு சுமத்திரா, அச்சே (இந்தோனேசியா)
இனம்மினாங்கபாவ், அனியூக் சமீ மக்கள்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
5.5 மில்லியன்  (2007)[1]
ஆஸ்திரோனீசிய மொழிகள்
பேச்சு வழக்கு
மேற்கு சுமத்திரா மினாங்கபாவு, அன்யூக் சமீ மக்கள், பாசிசி, முகோமுகோ, ரோகன், கம்பார், குவாந்தான்
இலத்தீன் எழுத்துகள்
மினாங்கபாவு எழுத்துகள்
அலுவலக நிலை
அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை
மொழி
மொழிக் குறியீடுகள்
ISO 639-2min
ISO 639-3min
மொழிக் குறிப்புmina1268[2]
{{{mapalt}}}
சுமத்திராவில் மினாங்கபாவ் மொழி பயன்படுத்தப்படும் இடங்களின் வரைபடம்
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்திரா ரியாவு, ஜம்பியின் வடக்குப் பகுதி, பெங்குலு, வடக்கு சுமத்திரா, தெற்கு அச்சே ஆகிய இடங்களில் வாழும் மினாங்கபாவு மக்களால் இந்த மொழி பேசப்படுகிறது. தவிர இந்தோனேசியா முழுவதும் பல நகரங்களுக்கு குடிபெயர்ந்த மினாங்கபாவு மக்களாலும் பேசப்படுகிறது.[3]

வடக்கு சுமத்திரா மாநிலத்தின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் அச்சே பகுதிகளிலும் கூட இந்த மொழி பயன்படுத்தப்படுகிறது. அங்கு இந்த மொழி "அன்யூக் சமீ" என்று அழைக்கப்படுகிறது.

பொது

தொகு

மினாங்கபாவு மொழி மலேசியாவின் மலாய் மொழி போன்றது. இருப்பினும் மொழிகளுக்கு இடையிலான தொடர்புகள் வெவ்வேறு வழிகளில் வகைப்படுத்தப்படுகின்றன. சிலர் மினாங்கபாவு மொழியை மலாய் மொழியின் தொடக்க மொழியாகப் பார்க்கிறார்கள்; வேறு சிலர் மினாங்கபாவு மொழியை ஒரு தனித்துவமான மலாய் மொழியாகவும் கருதுகின்றனர்.[4]

பொதுவாக இலக்கண வினை வடிவங்கள் மற்றும் இலக்கண பொருள் வேறுபாடுகள் இல்லாத சில மொழிகளில் மினாங்கபாவு மொழியும் ஒன்றாக இருக்கலாம் என்றும் அறியப்படுகிறது. மினாங்கபாவு மக்களிடையே மினாங்கபாவு மொழி இன்னும் பொதுவாகப் பேசப்பட்டாலும், மேற்கு சுமத்திராவில் குறைவான முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. மினாங்கபாவு மொழி
    Minangkabau
    at Ethnologue (18th ed., 2015)
  2. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "மினாங்கபாவு". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  3. Kajian Serba Linguistik : Untuk Anton Moeliono Pereksa Bahasa (2000)
  4. Khaidir Anwar (1976), "Minangkabau, Background of the main pioneers of modern standard Malay in Indonesia", Archipel (in ஆங்கிலம்), 12 (1): 77–93, எண்ணிம ஆவணச் சுட்டி:10.3406/arch.1976.1296
  5. Sophie Elizabeth Crouch (2009), Voice and verb morphology in Minangkabau, a language of West Sumatra, Indonesia. Master's thesis (in ஆங்கிலம்)

மேலும் படிக்க

தொகு

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் மினாங்கபாவு மொழிப் பதிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மினாங்கபாவு_மொழி&oldid=3880396" இலிருந்து மீள்விக்கப்பட்டது