அமோனியம் அறுபுளோரோ ஆண்டிமோனேட்டு
வேதிச் சேர்மம்
அமோனியம் அறுபுளோரோ ஆண்டிமோனேட்டு (Ammonium hexafluoroantimonate) என்பது NH4SbF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அம்மோனியம் எக்சாபுளோரோ ஆண்டிமோனேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.[1][2]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
அசேனியம்;அறுபுளோரோ ஆண்டிமனி(1-)
| |
வேறு பெயர்கள்
அமோனியம் ஆண்டிமனி புளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
52503-06-7 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 16702435 |
| |
பண்புகள் | |
F6H4NSb | |
வாய்ப்பாட்டு எடை | 253.79 g·mol−1 |
தோற்றம் | வெண் படிகத் தூள் |
அடர்த்தி | கி/செ.மீ3 |
கரையும் | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஆண்டிமனி பெண்டாபுளோரைடுடன் அம்மோனியம் அறுபுளோரோமாங்கனேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் அமோனியம் அறுபுளோரோ ஆண்டிமோனேட்டு உருவாகிறது.
- 4SbF5 + 2(NH4)2MnF6 → NF4SbF6 + 2MnF3 + F2
இயற்பியல் பண்புகள்
தொகுஅமோனியம் அறுபுளோரோ ஆண்டிமோனேட்டு தண்ணீரில் கரையும். ஊசி வடிவ அல்லது நெடுவரிசை படிகங்களாக உருவாகும்.
பயன்கள்
தொகுஇச்சேர்மம் நுண் வேதியியல் மற்றும் கரிமத் தொகுப்பு வினைகளில் பயன்படுத்தப்படுகிறது, உதாரணமாக ஒரு வினையூக்கியாக இது பயன்படுகிறது. வினைகளில் கரிமப் புளோரைடுகளை இது இடப்பெயர்ச்சி செய்கிறது. [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "CAS 52503-06-7 Ammonium hexafluoroantimonate - Alfa Chemistry". alfa-chemistry.com. பார்க்கப்பட்ட நாள் 31 August 2024.
- ↑ Ma, Hailing; Zhang, Xin; Ju, Feifei; Tsai, Sang-Bing (14 February 2018). "A Study on Curing Kinetics of Nano-Phase Modified Epoxy Resin" (in en). Scientific Reports 8 (1): 3045. doi:10.1038/s41598-018-21208-0. பன்னாட்டுத் தர தொடர் எண்:2045-2322. பப்மெட்:29445228. Bibcode: 2018NatSR...8.3045M.
- ↑ Organometallic Compounds (in ஆங்கிலம்). R. H. Chandler. 1976. p. 180. பார்க்கப்பட்ட நாள் 31 August 2024.