அமோனியம் இரும்பு(III) சல்பேட்டு
அமோனியம் இரும்பு(III) சல்பேட்டு (Ammonium iron(III) sulfate) என்பது NH4Fe(SO4)2·12 H2O, அல்லது NH4[Fe(H2O)6](SO4)2·6 H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். பெர்ரிக் அமோனியம் சல்பேட்டு, இரும்பு படிகாரம் என்ற பெயர்களாலும் அழைக்கப்படும் இச்சேர்மம் படிகாரம் என்ற வகைப்பாட்டில் இரட்டை உப்பு என்று வகைப்படுத்தப்படுகிறது. AB(SO4)2 · 12 H2O என்ற பொது வாய்ப்பாடு கொண்ட சேர்மங்களால் இது ஆக்கப்பட்டுள்ளது. [2] அமோனியம் இரும்பு(III) சல்பேட்டு பலவீனமான ஊதா நிறத்தில் , எண்கோணப் படிகங்களின் தோற்றத்தைக் கொண்டுள்ளது. படிகங்களின் நிறத்தின் தோற்றம் குறித்து சில விவாதங்கள் நடந்துள்ளன. சிலர் சேர்மத்தில் உள்ள அசுத்தங்கள் காரணம் என்று கூறுகின்றனர்.,[3] மற்றவர்கள் அதை படிகத்தின் சொத்து என்று கூறுகின்றனர்.[4]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
அமோனியம் இரும்பு(III) சல்பேட்டு
| |
வேறு பெயர்கள்
பெர்ரிக் அமோனியம் சல்பேட்டு
பெர்ரிக் படிகாரம் | |
இனங்காட்டிகள் | |
10138-04-2 7783-83-7 | |
ChemSpider | 55405 |
EC number | 233-382-4 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 61485 |
| |
UNII | LUX2X1H1IC 65390568Z5 |
பண்புகள் | |
FeNH4(SO4)2•12H2O | |
வாய்ப்பாட்டு எடை | 482.25 கி/மோல் (பன்னிரு நீரேற்று) |
தோற்றம் | வெளிர் ஊதா எண்முகப் படிகங்கள் |
மணம் | பலவீனமான அம்மோனியா போன்ற நெடி |
அடர்த்தி | 1.71 கி/செ.மீ3 |
உருகுநிலை | 39 முதல் 41 °C (102 முதல் 106 °F; 312 முதல் 314 K) |
1240 கி/லிட்டர் | |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | எரிச்சலூட்டும் |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | அமோனியம் பெரிக் சிட்ரேட்டு அமோனியம் குளோரைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | அம்மோனியம் அலுமினியம் சல்பேட்டு பொட்டாசியம் அலுமினியம் சல்பேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அமோனியம் இரும்பு(III) சல்பேட்டு ஒரு பாரா காந்தமாகும்.[5] அமிலத்தன்மை கொண்ட இச்சேர்மம் நுண்ணுயிரிகளைக் கொல்லும் அளவுக்கு நச்சுத்தன்மை கொண்டுள்ளது.[6] ஒரு பலவீனமான ஆக்சிசனேற்ற முகவராக அறியப்படுகிறது. குறைத்தல் வினைக்கு உட்படுத்தினல் மோர் உப்பு எனப்படும் அமோனியம் இரும்பு(II) சல்பேட்டுபாக மாறும் திறன் பெற்றுள்ளது.
தயாரிப்பு
தொகுபெர்ரிக் சல்பேட்டு மற்றும் அம்மோனியம் சல்பேட் ஆகியவற்றின் கரைசலில் இருந்து படிகமயமாக்கல் மூலம் அமோனியம் இரும்பு(III) சல்பேட்டைத் தயாரிக்கலாம். இரும்பு சல்பேட்டில் உள்ள இரும்பு(II) உடன் கந்தக அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலத்தைச் சேர்ப்பதன் மூலம் ஆக்சிசனேற்ற வினை நிகழ்ந்து பெர்ரிக் சல்பேட்டு உருவாகிறது. இக்கரைசலில் அம்மோனியம் சல்பேட்டைச் சேர்த்து ஒடுக்க வினையை நிஅழ்த்தினால் பெர்ரிக் அம்மோனியம் சல்பேட்டு படிகங்கள் படிகின்றன. இந்த மாற்றங்களுக்கான சமன்பாடுகள் பொருளின் நீரேற்றத்தின் அளவைப் புறக்கணிக்கின்றன.
- ஆக்சிசனேற்றம்: 6 FeSO4 + 2 HNO3 + 3 H2SO4 -> 3 Fe2(SO4)3 + 2 NO + 4 H2O
- தொகுப்பு வினை: Fe2(SO4)3 + (NH4)2SO4 -> 2 NH4Fe(SO4)2
பயன்கள்
தொகுகழிவு நீர் சுத்திகரிப்பு, தோல் பதனிடுதல், சாயப் பொருட்களின் உற்பத்தி மற்றும் மின்னணுக் கூறுகளின் உற்பத்தியில் உலோக வேலைப்பாட்டுக்குப் பயன்படும் முகவராக அமோனியம் இரும்பு(III) சல்பேட்டு பயன்படுத்தப்படுகிறது.[7] மேலும் குளிர்பதன உபகரணங்கள்[8], உயிர்வேதியியல் பகுப்பாய்வு,[9] மற்றும் கரிமத் தொகுப்பு வினைகள் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது.[10]
படக் காட்சியகம்
தொகு-
பெர்ரிக் அமோனியம் சல்பேட்டு படிகங்கள்
-
16 நாள் காற்றில் உள்ள அமோனியம் இரும்பு(III) சல்பேட்டு படிகங்கள்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Material Safety Data Sheet. Iron (III) Ammonium Sulfate Dodecahydrate". fscimage.fishersci.com. பார்க்கப்பட்ட நாள் 8 June 2023.
- ↑ Considine, Douglas M: Chemical and process technology encyclopedia, McGraw-Hill, New York, 1974, p. 993
- ↑ Christensen, Odin T. "On the Cause of the Amethyst Color of Ferric Alum and of Mixed Crystals of Ferric and Manganic Alum". Chem. Lab. Roy. Vet. Agr. Hochschule, KGL. Danske Vidsk. Selsk. Forh. 1906: 173–95.
- ↑ Bonnell, Jane; Philip Perman, Edgar (1921). "CCXXIX.—The colour of iron alum". J. Chem. Soc., Trans. 119: 1994–1997. doi:10.1039/CT9211901994. https://zenodo.org/record/1609699.
- ↑ Cooke, Meyer; Wolf (1956). "The Specific Heats of Three Paramagnetic salts at Very Low Temperatures". Proceedings of the Royal Society of London. Series A, Mathematical and Physical Sciences 237 (1210): 395–403. doi:10.1098/rspa.1956.0185. Bibcode: 1956RSPSA.237..395C.
- ↑ Wang, Fei (2008). "Microcalorimetric investigation of the toxic action of ammonium ferric(III)sulfate on the metabolic activity of pure microbes". Environmental Toxicology and Pharmacology 25 (3): 351–357. doi:10.1016/j.etap.2007.11.004. பப்மெட்:21783873. Bibcode: 2008EnvTP..25..351W.
- ↑ Chen et al.: United States Patent 5518131 – "Etching molydbenum with ferric sulfate and ferric ammonium sulfate"
- ↑ Grant W. Wilson, Peter T. Timbie: "Construction techniques for adiabatic demagnetization refrigerators using ferric ammonium alum". Cryogenics, Volume 39, Number 4, (1999), pp. 319–322
- ↑ J. C. Whitehorn: "A system of blood analysis. Supplement II. Simplified method for the determination of chlorides in blood or plasma". Journal of Biological Chemistry (1921), 45 p. 449–60.
- ↑ Yu, Shanxin (2005). "Application of ammonium ferric sulfate dodecahydrate in organic synthesis". General Review 17 (1): 27–30.