அமோனியம் ஓசோனைடு
அமோனியம் ஓசோனைடு (Ammonium ozonide) என்பது H4NO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அமோனியம் நேர்மின் அயனியும் (NH4+) O3−) எதிர்மின் அயனியும் சேர்ந்து மிகையளவு ஆக்சிசனுடன் இச்சேர்மம் உருவாகிறது. கார ஓசோனைடுகள் போல அமோனியம் ஓசோனைடும் சிவப்பு நிறத்தில் ஒரு திண்மமாகக் காணப்படுகிறது.[1][2] அமோனியம் ஓசோனைடு குறைந்த வெப்பநிலையில் நிலைப்புத் தன்மையுடன் இருக்கும். ஆனால் அது -70 ° செல்சியசுக்கு அதிகமான வெப்பநிலையில் அமோனியம் நைட்ரேட்டாக சிதைகிறது.[2]
இனங்காட்டிகள் | |
---|---|
12161-20-5 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
H4NO3 | |
வாய்ப்பாட்டு எடை | 66.04 g·mol−1 |
தோற்றம் | ஆழ்ந்த சிகப்பு நிற திண்மம் |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | அமோனியம் நைட்ரேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | பொட்டாசியம் ஓசோனைடு, சீசியம் ஓசோனைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுநீர்ம அமோனியாவில் வாயுநிலை ஓசோனை -110 ° செல்சியசு வெப்பநிலையில் குமிழிப்பதன் அமோனியம் ஓசோனைடு தயாரிக்கப்படுகிறது.[1][2] இந்த முறையில் குறைந்த அளவு விளைபொருளே கிடைக்கிறது.[1]
- 12 NH3 + 11 O3 → 9 NH4O3 + 3 NO2
அம்மோனியம் ஓசோனைடானது அமோனியம் நைட்ரேட்டு, ஆக்சிசன் வாயு மற்றும் தண்ணீராக சிதைகிறது. மேலே உள்ள வினையானது அதிக வெப்பநிலையில் மேற்கொள்ளப்பட்டால் இந்த சிதைவுப் பொருட்கள் உடனடியாக விளைகின்றன. ஓசோனைடு உருவாகாமல் போகும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.[1]
- 4 NH4O3 → 2 NH4NO3 + O2 + 4 H2O
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Solomon, Irvine J.; Hattori, Kiyo.; Kacmarek, Andrew J.; Platz, Gerald M.; Klein, Morton J. (January 1962). "Ammonium Ozonide" (in en). Journal of the American Chemical Society 84 (1): 34–36. doi:10.1021/ja00860a008. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. https://pubs.acs.org/doi/abs/10.1021/ja00860a008.
- ↑ 2.0 2.1 2.2 McGee, Henry (July 1966). Chemical Reactivity of Hydrogen, Nitrogen, and Oxygen Atoms at Temperatures below 100° K. பக். 1–98. https://ntrs.nasa.gov/api/citations/19660027917/downloads/19660027917.pdf.