சீசியம் ஓசோனைடு
சீசியம் ஓசோனைடு (Caesium ozonide) என்பது சீசியத்தின் ஆக்சிசன் மிகுதி சேர்மமாகும்.CsO 3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் இது விவரிக்கப்படுகிறது. ஓசோனைடு என வகைப்படுத்தப்படும் இச்சேர்மத்தில் ஓசோனைடு எதிர்மின் அயனியும் (O 3 - ) சீசியம் நேர்மின் அயனியும் உள்ளன. சீசியம் சூப்பர் ஆக்சைடுடன் ஓசோனை வினைபுரியச் செய்வதன் மூலம் இதை உருவாக்கலாம்:
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சீசியம் ஓசோனைடு
| |
இனங்காட்டிகள் | |
12053-67-7 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
CsO3 | |
தோற்றம் | அடர் சிவப்பு தூள்[1] |
அடர்த்தி | 3.19 கி/செ.மீ3[1] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | சீசியம் புளோரைடு சீசியம் குளோரைடு சீசியம் புரோமைடு சீசியம் அயோடைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | சோடியம் ஓசோனைடு பொட்டாசியம் ஓசோனைடு ருபீடியம் ஓசோனைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இந்த சேர்மமானது காற்றில் உள்ள எந்த தண்ணீருடனும் வினை புரிந்து சீசியம் ஐதராக்சைடை உருவாக்குகிறது.[2]
70 முதல் 100 பாகை செல்சியசு வெப்பநிலை வரை சூடுபடுத்தினால் சீசியம் ஓசோனைடு சீசியம் சூப்பர் ஆக்சைடாக (CsO 2 ) விரைவில் சிதைவடையும்.[2] உண்மையில் இச்சேர்மம் சீசியம் சூப்பர் ஆக்சைடாக சிதைந்து மேலும் அறை வெப்பநிலையில் மெதுவாக சிதைகிறது. ஆனால் -20 பாகை செல்சியசு வெப்பநிலையில் சேமிக்கப்பட்டால் பல மாதங்கள் அப்படியே இருக்கும்.[3]
சுமார் 8 பாகை செல்சியசு வெப்பநிலையில் சீசியம் குளோரைடு படிக அமைப்பு வகையைச் சேர்ந்தது. குளோரைடு அயனிக்கு பதிலாக இங்கு ஓசோனைடு அயனி உள்ளது. குறைந்த வெப்பநிலையில், இப் படிக அமைப்பு P2<sub>1</sub>/c இடக்குழுவைக் கொண்ட ருபிடியம் ஓசோனைடு (RbO 3 ) கட்டமைப்பு போன்ற ஒரு கட்டமைப்பிற்கு மாறுகிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Sokol, V. I.; Matvee, V. V.; Vol'nov, I. I. (1966). "Determination of the density and refractive index of cesium ozonide". Bulletin of the Academy of Sciences, USSR Division of Chemical Science (Springer Science and Business Media LLC) 15 (12): 2169–2171. doi:10.1007/bf00867730. பன்னாட்டுத் தர தொடர் எண்:0568-5230.
- ↑ 2.0 2.1 Vol'nov, I. I.; Matveev, V. V. (1963). "Synthesis of cesium ozonide through cesium superoxide". Bulletin of the Academy of Sciences, USSR Division of Chemical Science (Springer Science and Business Media LLC) 12 (6): 1040–1043. doi:10.1007/bf00845494. பன்னாட்டுத் தர தொடர் எண்:0568-5230.Vol'nov, I. I.; Matveev, V. V. (1963).
- ↑ HESSE, W; JANSEN, M; SCHNICK, W (1989). "Recent results in solid state chemistry of ionic ozonides, hyperoxides, and peroxides". Progress in Solid State Chemistry (Elsevier BV) 19 (1): 47–110. doi:10.1016/0079-6786(89)90006-x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0079-6786. http://nbn-resolving.de/urn:nbn:de:bvb:19-epub-4017-6.
- ↑ Jansen, M.; Hesse, W. (1988). "Darstellung, Kristallstruktur und Eigenschaften von Cäsiumozonid" (in de). Zeitschrift für anorganische und allgemeine Chemie (Wiley) 560 (1): 47–54. doi:10.1002/zaac.19885600106. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2313.Jansen, M.; Hesse, W. (1988).