சீசியம் ஐதராக்சைடு

சீசியம் ஐதராக்சைடு (Cesium hydroxide) என்பது CsOH என்ற என்ற வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சீசியம் அயனியும் ஐதராக்சைடு அயனியும் சேர்ந்து சீசியம் ஐதராக்சைடு காரம் உருவாகிறது. சோடியம் ஐதராக்சைடு, பொட்டாசியம் ஐதராக்சைடு போன்ற பிற கார உலோக ஐதராக்சைடுகள் போலவே சீசியம் ஐதராக்சைடும் ஒரு வலிமையான காரமாகும். உண்மையில், விரைவாக கண்ணாடியை அரித்து அழிக்கும் அளவிற்கு இச்சேர்மம் வலிமை கொண்டுள்ளது.

சீசியம் ஐதராக்சைடு
Cesium hydroxide
பெயர்கள்
வேறு பெயர்கள்
சீசியம் ஐதரேட்டு
இனங்காட்டிகள்
21351-79-1 Y
ChEBI CHEBI:33988 Y
ChemSpider 56494 Y
EC number 244-344-1
InChI
  • InChI=1S/Cs.H2O/h;1H2/q+1;/p-1 Y
    Key: HUCVOHYBFXVBRW-UHFFFAOYSA-M Y
  • InChI=1/Cs.H2O/h;1H2/q+1;/p-1
    Key: HUCVOHYBFXVBRW-REWHXWOFAG
யேமல் -3D படிமங்கள் Image
வே.ந.வி.ப எண் FK9800000
  • [OH-].[Cs+]
UN number 2682
பண்புகள்
CsOH
வாய்ப்பாட்டு எடை 149.912 கி/மோல்
தோற்றம் வெண்மை கலந்த மஞ்சளாக நீர் ஈர்க்கும் படிகங்கள்
அடர்த்தி 3.675 கி/செ.மீ3
உருகுநிலை 272 °C (522 °F; 545 K)[3]
300 கி/100 மி.லி 30 °செல்சியசில்
கரைதிறன் எத்தனாலில் கரையும் [1]
காரத்தன்மை எண் (pKb) -1.76[2]
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−416.2 kJ·mol−1
நியம மோலார்
எந்திரோப்பி So298
104.2 J·K−1·mol−1
வெப்பக் கொண்மை, C 69.9 J·mol−1·K−1[4]
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் ICSC 1592
தீப்பற்றும் வெப்பநிலை Not flammable
Lethal dose or concentration (LD, LC):
570 மி.கி/கி.கி (வாய்வழி, எலி)[6]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
none[5]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 2 mg/m3[5]
உடனடி அபாயம்
N.D.[5]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் சீசியம் ஆக்சைடு
சீசியம் புளோரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் இலித்தியம் ஐதராக்சைடு
சோடியம் ஐதராக்சைடு
பொட்டாசியம் ஐதராக்சைடு
ருபீடியம் ஐதராக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தீவிரமான வினைதிறன் கொண்டிருப்பதால் சீசியம் ஐதராக்சைடு ஒரு நீருறிஞ்சியாக செயல்படுகிறது. ஆய்வகத்தில் பயன்படுத்தும் சீசியம் ஐதராக்சைடுகள் பெரும்பாலும் நீரேற்றுகளாக உள்ளன.

சீசியம் ஐதராக்சைடானது எண்முகத் தளங்களை வெளிப்படுத்துகின்ற வகையில், பண்புச்சீரில்லாதவாறு அரிக்கப்பட்ட சிலிக்கன் போன்றதாகும். இத்தகைய அரித்தல் பண்பால் பிரமீடுகள் உருவாக முடியும் மற்றும் நுண்மின்னணு இயந்திரவியல் திட்டம் போன்ற பிரிவுகளில் வழக்கமாக அரிக்கப்பட்ட இத்தகைய குழிகள் பயன்படும்.

குறைகடத்திகளில் பி-வகை சிலிக்கனை பதியவைப்பதற்கு பொதுவாக பயன்படுத்தப்படும் பொட்டாசியம் ஐதராக்சைடு காரத்தை விட சீசியம் ஐதராக்சைடு தெரிவுத்திறன் மிகுந்ததாக உள்ளது என அறியப்படுகிறது. ருபீடியம் ஐதராக்சைடு மற்றும் பொட்டாசியம் ஐதராக்சைடுகளை விட வலிமையாக செயல்பட்டாலும், உயர் விலை மதிப்பு காரணமாக பரிசோதனைகளில் இச்சேர்மம் பயன்படுத்தப்படுவதில்லை.

சீசியம் ஐதராக்சைடை கீழ்கண்ட வேதி வினையில் கண்டுள்ளவாறு தயாரிக்க முடியும்.

2 Cs + 2 H2O → 2 CsOH + H2

பைரெக்சு கண்ணாடி குடுவையை நொறுக்குமளவிற்கு வெடியோசையுடன் இவ்வினை நிகழ்கிறது. – 116 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் உள்ள பனிக்கட்டியுடன் சீசியம் உலோகம் வினைபுரியும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 4–51, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2
  2. http://www.periodensystem-online.de/index.php?show=list&id=acid&prop=pKb-Werte&sel=oz&el=92
  3. http://www.inchem.org/documents/icsc/icsc/eics1592.htm
  4. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 5–14, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2
  5. 5.0 5.1 5.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0111". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  6. http://chem.sis.nlm.nih.gov/chemidplus/rn/21351-79-1

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீசியம்_ஐதராக்சைடு&oldid=3992745" இலிருந்து மீள்விக்கப்பட்டது