அமோனியம் புரோப்பியோனேட்டு
அமோனியம் புரோப்பியோனேட்டு (Ammonium propionate) NH4(C2H5COO). என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அமோனியம் புரோப்பேனோயேட்டு என்ற பெயராலும் இதை அழைக்கலாம். புரோப்பியோனிக் அமிலத்தினுடைய அமோனியம் உப்பே அமோனியம் புரோப்பியோனேட்டு ஆகும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
அமோனியம் புரோப்பனோயேட்டு
| |
வேறு பெயர்கள்
அமோனியம் புரோப்பியோனேட்டு
புரோப்பனாயிக் அமிலம், அமோனியம் உப்பு(1:1) | |
இனங்காட்டிகள் | |
17496-08-1 | |
ChemSpider | 78604 |
EC number | 241-503-7 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 87139 |
| |
UNII | V18VR2SK15 |
பண்புகள் | |
C3H9NO2 | |
வாய்ப்பாட்டு எடை | 91.11 g·mol−1 |
உருகுநிலை | 45 °C (113 °F; 318 K) |
கொதிநிலை | 141.7 °C (287.1 °F; 414.8 K) |
1 கி/மி.லி | |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | எரிச்சலூட்டும் |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H335 | |
P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313, P362, P403+233, P405 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுபுரோபியோனிக் அமிலமும் அம்மோனியாவும் சேர்ந்து வினைபுரிவதால் அமோனியம் புரோப்பியோனேட்டு உருவாகிறது.
பயன்கள்
தொகுஉரங்கள், நீர் சுத்திகரிப்பு இரசாயனங்கள், தாவர பாதுகாப்பு பொருட்கள் போன்ற பல வேதிப் பொருள்கள் தயாரிப்புகளில் இது பயன்படுத்தப்படுகிறது. வனவியல், விவசாயம் மற்றும் மீன்பிடித்தல் போன்ற பல்வேறு துறைகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது.[1]
ஒரு கிருமி நாசினியாகவும், பூஞ்சை எதிர்ப்பு முகவராகவும், நோயெதிர்ப்பு முகவராகவும், தீவனத் தொழில் அல்லது உணவுத் தொழிலில் பாதுகாக்கும் பொருளாகவும் அமோனியம் புரோப்பியோனேட்டு செயல்படுகிறது.[2]
அமோனியம் புரோப்பியோனேட்டு பாக்டீரியா வளர்ச்சியைத் தடுப்பதன் மூலம் அழகுசாதனப் பொருட்கள் கெட்டுப்போவதையும் தடுக்கிறது.[3]
இவற்றையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Ammonium propionate - Substance Information - ECHA". echa.europa.eu (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-22.
- ↑ "Ammonium Propionate Properties, Molecular Formula, Applications - WorldOfChemicals". www.worldofchemicals.com. Archived from the original on 2022-02-17. பார்க்கப்பட்ட நாள் 2021-02-22.
- ↑ "Ammonium Propionate | Cosmetics Info". cosmeticsinfo.org. Archived from the original on 2021-06-16. பார்க்கப்பட்ட நாள் 2021-02-22.