அம்பகை
அம்பகை கான் என்பவர் கமக் மங்கோலியக் கூட்டமைப்பின் கானாக கி.பி. 1149-1156 காலகட்டத்தில் இருந்தவர் ஆவார். இவர் கயிடுவின் கொள்ளுப்பேரன், ஹோடுலா கானின் உறவினர் ஆவார். இவரது ஆட்சியின்போது மங்கோலியர்கள் பலமிக்கவர்களாக இருந்தனர். இவர் ஒரு திருமணத்தை நிச்சயிக்க தாதர்களிடம் சென்றபோது அவர்கள் தலைவர் தெமுசின் உகே இவரை சிறைபிடித்தார். இது சீன சுரசன்களின் (ஒரு துங்குசிக் இனம்) (சின் வம்சத்தவர்) உத்தரவின்பேரில் மங்கோலியர்களின் பலத்தைக் குறைப்பதற்காக நடந்தது. அவர்கள் இவரது கை கால்களில் ஆணி அடித்துக் கொன்றனர். தாதர்களின் தலைவர் தெமுசின் உகே செங்கிஸ் கானின் தந்தை எசுகெயால் கி.பி. 1162ல் அம்பகை கானை ஏமாற்றியதற்காகக் கொல்லப்பட்டார். மேலும் எசுகெய் தன் மகனுக்கு தெமுசின் என்று பெயரிட்டார்.[1][2][3]
அம்பகை | |
---|---|
கமக் மங்கோலின் கான் | |
ஆட்சிக்காலம் | 1146 அல்லது 1148-1156 |
முன்னையவர் | காபூல் கான் |
பின்னையவர் | ஹோடுலா கான் |
தாய்சியுடு தலைவர் | |
முன்னையவர் | சரகை லிங்கும் |
பின்னையவர் | கதான் தைசி |
இறப்பு | அண். 1156 குயினிங் மாகாணம், சின் அரசமரபு |
மரபு | போர்சிசின் |
கி.பி. 1211ல் செங்கிஸ் கான் சின் வம்சத்தின் வீழ்ச்சிக்குக் காரணமான மங்கோலியர்-சின் போரைத் தொடங்கினார். இப்போர் அம்பகையின் கடத்தல் மற்றும் இறப்பிற்குப் பழிவாங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டது. கி.பி. 1234ல் சின் வம்சம் வீழ்ந்தது.
அம்பகை எசுகெய் மற்றும் செங்கிஸ் கானின் உறவினர் ஆவார்.
உசாத்துணை
தொகு
மேற்கோள்கள்
தொகு- ↑ Cheng, Chih-Shu E. (1996). Studies in the career of Chinggis Qan (phd thesis) (in ஆங்கிலம்). SOAS University of London.
- ↑ Rashīd al-Dīn Ṭabīb; Thackston, W. M (1998). Rashiduddin Fazlullah's Jamiʻuʼt-tawarikh = Compendium of chronicles (in ஆங்கிலம்). Cambridge, Mass.: Harvard University, Dept. of Near Eastern Languages and Civilizations. pp. 121–123. இணையக் கணினி நூலக மைய எண் 41120851.
- ↑ Kubilay Atik, DYNASTIC RELATIONS IN EAST ASIA DURING THE 10TH-14TH CENTURIES, p. 177