காபூல் கான்

கமக் மங்கோலின் கான்

காபூல் கான் கமக் மங்கோல் கூட்டமைப்பின் முதன்முதலில் அறியப்பட்ட கான் ஆவார். இவர் செங்கிஸ் கானின் கொள்ளுப்பாட்டனார் ஆவார்.[1]  

காபூல் கான்
கமக் மங்கோலின் கான்
மங்கோலியக் கோட்டையில் காபூல் கானின் சிலை
ஆட்சிக்காலம்கி.பி. 1130–1146?
முடிசூட்டுதல்1130ல் நடந்த குறுல்த்தாய்
பின்னையவர்அம்பகை கான்
குழந்தைகளின்
பெயர்கள்
ஒகின்பர்கக்
பர்டன் பகதூர்
குதுக்து மோன்கோர்
ஹோடுலா கான்
குலான்
கடான் பகதூர்
டோடோயி
தந்தைதும்பினை செட்சென்

இவரது தந்தையார் பெயர் தும்பினை செட்சென். இவர் கயிடுவின் கொள்ளுப்பேரன் ஆவார்.

காரா கிதை அரசைத் தோற்றுவித்த எலு தசியைக் கொல்ல சின் இராணுவம் மங்கோலியாவிற்குள் நுழைந்தபோது காபூல் கான் அதை எதிர்த்துத் தாக்கி விரட்டினார். கி.பி. 1135ல் சின் பேரரசர் தைசோங் காபூல் கானை தன் சபைக்கு அழைத்தார். அங்கு சென்ற காபூல் கான் தைசோங்கின் தாடியைப் பிடித்து இழுத்தார். இதனால் சின் இராணுவம் காபூல் கானை தெற்கு மங்கோலியாவிற்குத் துரத்திச் சென்றது. காபூல் தப்பித்தார். பின் ஒரு பெரிய இராணுவத்துடன் திரும்பிய காபூல் சின் அரசைக் கொள்ளையடித்தார். காபூல் கானுக்கு 7 மகன்கள் இருந்தபோதிலும் தாய்சியுடு இனத்தைச் சேர்ந்த செங்குன் பில்கேயின் மகனான அம்பகையைத் தன் வாரிசாக நியமித்தார்.[2]

உசாத்துணை

தொகு
  1. Mongolia :: The rise of Genghis Khan - Britannica Online Encyclopedia
  2. Erich Haenisch, Die Geheime Geschichte der Mongolen, Leipzig 1948, p.7 (=section 52)
காபூல் கான்
அரச பட்டங்கள்
முன்னர்
புதிதாக உருவாக்கப்பட்டது
கமக் மங்கோலின் கான்
1120கள்–1148/1150
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=காபூல்_கான்&oldid=3517459" இலிருந்து மீள்விக்கப்பட்டது