அம்பை - 10 (நெல்)
அம்பை - 10 (ASD 10) பிரபலமாக கோலவளி (Kolavali) எனப்படும் இந்த நெல் வகை, நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]
அம்பை - 10 ASD 10 |
---|
வேளாண் பெயர் |
கோலவளி |
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
கலப்பினம் |
நல் விதைத் தேர்வு முறை |
வகை |
புதிய நெல் வகை |
காலம் |
170 - 175 நாட்கள் |
மகசூல் |
2500 கிலோஎக்டேர் |
வெளியீடு |
1952 |
வெளியீட்டு நிறுவனம் |
TNAU, அம்பாசமுத்திரம் |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
இந்தியா |
வெளியீடு
தொகுதமிழக நெல்லை மாவட்டத்தின், அம்பையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (Rice Research Station, Ambasamudram),[2] 1952 ஆம் ஆண்டு, இவ்வகை நெல்லை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[1]
காலம்
தொகுநீண்டகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 170 -175 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது.[1] இதுபோன்ற நெடுங்கால நெற்பயிர்கள், முன் சம்பா, சம்பா, பின்சம்பா, தாளடி/ பிசாணம், மற்றும் பின் பிசாணம் போன்ற பட்டங்கள் (பருவங்கள்) ஏற்றதாக கூறப்படுகிறது.[3]
சாகுபடி
தொகுநீர்ப்பாசன வசதியுள்ள, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய உகந்தப் பகுதியாக கூறப்படும் அம்பை - 10 நெல் வகை, புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.[2]
சிறப்புப் பண்புகள்
தொகு- இந்த நெல் இரகம் ஒரு ஏக்கருக்கு 2500 கிலோவரை ( 2.5 t/ha) மகசூல் தரக்கூடியது.
- இதன் நெற்பயிர் சாகுபடி செய்ய பிசாணப் பருவம் மிகவும் உகந்தது.
- இந்நேல்லின் அரிசி, வெள்ளை நிறத்தில் குட்டையான தடித்த வடிவில் காணப்படுகிறது.[1]
இவற்றையும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-05.
- ↑ 2.0 2.1 "Rice Knowledge Management Portal ASD 10". www.rkmp.co.in (ஆங்கிலம்). 2011. Archived from the original on 2020-08-11. பார்க்கப்பட்ட நாள் 2017-08-05.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "Paddy Varieties of Tamil Nadu". www.agritech.tnau.ac.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-05.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|1=
(help)