அம்பை - 5 (நெல்)

அம்பை - 5 (ASD 5) பிரபலமாக கார்த்திகை சம்பா (Karthigai samba) எனப்படும் இந்த நெல் வகை, நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]

அம்பை - 5
ASD 5
வேளாண் பெயர்
கார்த்திகை சம்பா
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
நல் விதைத் தேர்வு முறை
வகை
புதிய நெல் வகை
காலம்
150 - 155 நாட்கள்
மகசூல்
4000 கிலோஎக்டேர்
வெளியீடு
1945
வெளியீட்டு நிறுவனம்
TNAU, அம்பாசமுத்திரம்
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

வெளியீடு

தொகு

தமிழக நெல்லை மாவட்டத்தின், அம்பையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (Rice Research Station, Ambasamudram),[2] 1945 ஆம் ஆண்டு, இவ்வகை நெல்லை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[1]

காலம்

தொகு

நீண்டகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 150 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது.[1] இதுபோன்ற நெடுங்கால நெற்பயிர்கள், முன் சம்பா, சம்பா, பின்சம்பா, தாளடி பிசாணம், மற்றும் பின் பிசாணம் போன்ற பட்டங்கள் (பருவங்கள்) ஏற்றதாக கூறப்படுகிறது.[3]

சாகுபடி

தொகு

நீர்ப்பாசன வசதியுள்ள, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய உகந்தப் பகுதியாக கூறப்படும் அம்பை - 5 நெல் வகை, புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.[2]

சிறப்புப் பண்புகள்

தொகு
  • இந்த நெல் இரகம், ஒரு ஏக்கருக்கு 4000 கிலோவரை (4.0 t/ha) மகசூல் தரக்கூடியது.
  • இதன் நெற்பயிர், ஏரி மற்றும் குளத்துப் பாசனத்திற்கும், மற்றும் மானாவாரி நிலப் பகுதிகளில் சாகுபடி செய்ய உகந்தது.[2]
  • இவ்வகை நெற்பயிர், காலங்கடந்த தாமத நடவு முறைக்கும் தாங்கி வளரும் இயல்புடையது.
  • இந்நேல்லின் அரிசி, சிவப்பு நிறத்தில் மிதமான வடிவில் காணப்படுகிறது.[1]

இவற்றையும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-05.
  2. 2.0 2.1 2.2 "Rice Knowledge Management Portal ASD 5". www.rkmp.co.in (ஆங்கிலம்). © 2011. பார்க்கப்பட்ட நாள் 2017-08-07. {{cite web}}: Check date values in: |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Paddy Varieties of Tamil Nadu". www.agritech.tnau.ac.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-07. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பை_-_5_(நெல்)&oldid=3927174" இலிருந்து மீள்விக்கப்பட்டது