அம்பை - 7 (நெல்)

அம்பை - 7 (ASD 7) பிரபலமாக முன் கார் சம்பா (சிவப்பு) (Kar samba (red) early) எனப்படும் இந்த நெல் வகை, நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]

அம்பை - 7
ASD 7
வேளாண் பெயர்
முன் கார் சம்பா (சிவப்பு)
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
நல் விதைத் தேர்வு முறை
வகை
புதிய நெல் வகை
காலம்
160 - 165 நாட்கள்
மகசூல்
3000 கிலோஎக்டேர்
வெளியீடு
1945
வெளியீட்டு நிறுவனம்
TNAU, அம்பாசமுத்திரம்
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

வெளியீடு

தொகு

தமிழக நெல்லை மாவட்டத்தின், அம்பையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (Rice Research Station, Ambasamudram), 1945 ஆம் ஆண்டு, இவ்வகை நெல்லை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[1]

காலம்

தொகு

நீண்டகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 160 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது.[1] இதுபோன்ற நெடுங்கால நெற்பயிர்கள், முன் சம்பா, சம்பா, பின்சம்பா, தாளடி/ பிசாணம், மற்றும் பின் பிசாணம் போன்ற பட்டங்கள் (பருவங்கள்) ஏற்றதாக கூறப்படுகிறது.[2]

சாகுபடி

தொகு

நீர்ப்பாசன வசதியுள்ள, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய உகந்தப் பகுதியாக கூறப்படும் அம்பை - 7 நெல் வகை, புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.[3]

சிறப்புப் பண்புகள்

தொகு
  • இந்த நெல் இரகம், ஒரு ஏக்கருக்கு 3000 கிலோவரை (3.0 t/ha) மகசூல் தரக்கூடியது.
  • இதன் நெற்பயிர், அதிக மகசூல் தருவதாக உள்ளது.
  • இந்நேல்லின் அரிசி, சிவப்பு நிறத்தில் குட்டையாகவும், தடித்தும் காணப்படுகிறது.[1]

இவற்றையும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்). © CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-05. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "Paddy Varieties of Tamil Nadu". www.agritech.tnau.ac.in (ஆங்கிலம்). © TNAU 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-05. {{cite web}}: Check date values in: |date= (help); Text "Long duration varieties" ignored (help)
  3. [1][தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பை_-_7_(நெல்)&oldid=3927175" இலிருந்து மீள்விக்கப்பட்டது