அம்மோனியம் அறுகுளோரோ ஓசுமேட்டு(IV)

வேதிச் சேர்மம்

அம்மோனியம் அறுகுளோரோ ஓசுமேட்டு(IV) ( Ammonium hexachloroosmate(IV)) என்பது (NH4)2OsCl6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[2][3]

அம்மோனியம் அறுகுளோரோ ஓசுமேட்டு(IV)
Ammonium hexachloroosmate(IV)
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அம்மோனியம் அறுகுளோரோ ஓசுமேட்டு(IV)
இனங்காட்டிகள்
12125-08-5
ChemSpider 145801
EC number 235-188-5
InChI
  • InChI=1S/6ClH.2H3N.Os/h6*1H;2*1H3;/q;;;;;;;;+4/p-4
    Key: SRBXXQDKBKTWOC-UHFFFAOYSA-J
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11729867
  • [NH4+].[NH4+].Cl[Os-2](Cl)(Cl)(Cl)(Cl)Cl
பண்புகள்
Cl6H8N2Os
வாய்ப்பாட்டு எடை 439.01 g·mol−1
தோற்றம் சிவப்பு படிகங்கள்
அடர்த்தி 2.93 கி/செ.மீ3
உருகுநிலை 170
மிகக் குறைவாக கரையும்
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)[1]
GHS signal word எச்சரிக்கை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

அமோனியா அயனிகள் முன்னிலையில் ஓசுமியம்(VIII) ஆக்சைடுடன் அமில ஊடகத்திலுள்ள இரும்பு(II) குளோடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் ஒடுக்க வினை நிகழ்ந்து அம்மோனியம் அறுகுளோரோ ஓசுமேட்டு(IV) உருவாகும்:[4][5]

OsO4 + 4FeCl2 + 8HCl + 2NH4Cl -> (NH4)2[OsCl6] + 3FeCl3 + 4H2O

இயற்பியல் பண்புகள்

தொகு

அம்மோனியம் அறுகுளோரோ ஓசுமேட்டு(IV) Fm3m என்ற இடக்குழுவில் a = 0.9729 நானோமீட்டர், Z = 4 என்ற அலகுசெல் அளவுருக்களுடன் கனசதுரப் படிக அமைப்பில் [6] அடர் சிவப்பு நிறப் படிகங்களாகப் படிகமாகிறது.

குளிர்ந்த நீரில் மிகச் சிறிதளவில் கரைகிறது.[7]

வேதிப் பண்புகள்

தொகு

ஐதரசனுடன் சேர்ந்து வினைபுரியும்போது ஒடுக்கமடைந்து உலோக ஓசுமியத்தைக் கொடுக்கிறது:[8][9]

3(NH4)2[OsCl6] -> 3Os + 2N2 + 16HCl + 2NH4Cl
|(NH4)2[OsCl6] + 2H2 -> Os + NH4Cl + 4HCl

பயன்கள்

தொகு

அம்மோனியம் அறுகுளோரோ ஓசுமேட்டு(IV) சேர்மம் மருந்து, கரிம மற்றும் இரசாயன இடைநிலையாகப் பயன்படுத்தப்படுகிறது.[10]

மேற்கோள்கள்

தொகு
  1. "Ammonium hexachloroosmate(IV)". Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 17 October 2024.
  2. "Ammonium Hexachloroosmate" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 17 October 2024.
  3. Brauer, Georg (2 December 2012). Handbook of Preparative Inorganic Chemistry V2 (in ஆங்கிலம்). Elsevier. p. 1603. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-323-16129-9. பார்க்கப்பட்ட நாள் 17 October 2024.
  4. Dwyer, F. P.; Hogarth, J. W.; Rhoda, Richard N. (January 1957). "Ammonium Hexachloroosmate(IV)". Inorganic Syntheses. Inorganic Syntheses. Vol. 5. pp. 206–207. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470132364.ch60. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-13164-0. பார்க்கப்பட்ட நாள் 17 October 2024.
  5. Inorganic Syntheses, Volume 5 (in ஆங்கிலம்). John Wiley & Sons. 22 September 2009. p. 206. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-13268-5. பார்க்கப்பட்ட நாள் 17 October 2024.
  6. Armarego, W. L. F. (27 August 2022). Purification of Laboratory Chemicals: Part 2 Inorganic Chemicals, Catalysts, Biochemicals, Physiologically Active Chemicals, Nanomaterials (in ஆங்கிலம்). Butterworth-Heinemann. p. 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-323-95828-8. பார்க்கப்பட்ட நாள் 17 October 2024.
  7. Haynes, William M. (19 April 2016). CRC Handbook of Chemistry and Physics, 94th Edition (in ஆங்கிலம்). CRC Press. p. 4-46. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4665-7115-0. பார்க்கப்பட்ட நாள் 17 October 2024.
  8. Lay, Peter A.; Magnuson, Roy H.; Taube, Henry; Vassilian, Asbed (January 1986). "Pentaammineosmium(III) and Hexaammineosmium(III) Complexes". Inorganic Syntheses. Vol. 24. pp. 269–277. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470132555.ch73. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-83441-0. பார்க்கப்பட்ட நாள் 17 October 2024.
  9. Meyer, Gerd; Möller, Angela (30 June 1991). "Thermolysis of ternary ammonium chlorides of rhenium and the noble metals". Journal of the Less Common Metals 170 (2): 327–331. doi:10.1016/0022-5088(91)90336-3. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-5088. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0022508891903363. பார்த்த நாள்: 17 October 2024. 
  10. "Ammonium hexachloroosmate(IV), 99.9% (metals basis), Os 42.5% min, Thermo Scientific Chemicals". Fisher Scientific. பார்க்கப்பட்ட நாள் 17 October 2024.