அம்ரோகா (Amroha), வட இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் மேற்குப் பகுதியில் அமைந்த அம்ரோகா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இந்நகரம் மொராதாபாத் நகரத்திற்கு வடமேற்கே 130 கிலோ மீட்டர் தொலைவில் கங்கை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

அம்ரோகா
நகரம்
அம்ரோகா இரயில் நிலையம்
அம்ரோகா இரயில் நிலையம்
அம்ரோகா is located in உத்தரப் பிரதேசம்
அம்ரோகா
அம்ரோகா
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அம்ரோகா நகரத்தின் அமைவிடம்
அம்ரோகா is located in இந்தியா
அம்ரோகா
அம்ரோகா
அம்ரோகா (இந்தியா)
ஆள்கூறுகள்: 28°54′15.95″N 78°28′3.10″E / 28.9044306°N 78.4675278°E / 28.9044306; 78.4675278
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்அம்ரோகா
ஏற்றம்[1]210 m (690 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,98,471
மொழிகள்
 • அலுவல் மொழிகள்இந்தி மொழி[2]
 • கூடுதல் அலுவல் மொழிஉருது
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்244221[3]
தொலைபேசி குறியீடு எண்05922
வாகனப் பதிவுUP-23
இணையதளம்www.jpnagar.in

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 35 வார்டுகளும், 33,903 வீடுகளும் கொண்ட அம்ரோகா நகரத்தின் மக்கள் தொகை 1,98,471 ஆகும். அதில் ஆண்கள் 1,03,097 மற்றும் பெண்கள் 95,374 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 925 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 28,323 (14%) ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 62.4% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 12,039 மற்றும் 14 ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 25.48%, இசுலாமியர் 73.8%, சீக்கியர்கள் 0.27% மற்றும் பிறர் 0.19% ஆகவுள்ளனர்.[4]

பொருளாதாரம் தொகு

மாம்பழம் உற்பத்தி மற்றும் சந்தைக்குப் பெயர் பெற்றது அம்ரோகா நகரம். [5] இந்நகரத்தில் பருத்தி, கைத்தறி நெசவுத் தொழில்கள், மட்பாண்டத் தொழில், சர்க்கரை உற்பத்தி தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது.

போக்குவரத்து தொகு

 
மாநில நெடுஞ்சாலை எண் 77

தில்லி-மொராதாபாத் இருப்புப் பாதையில் அம்ரோகா இரயில் நிலையம் உள்ளது.[6] அம்ரோகா நகரத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில், தில்லி-லக்னோவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 24 செல்கிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "Uttar Pradesh (India): State, Major Agglomerations & Cities – Population Statistics, Maps, Charts, Weather and Web Information". citypopulation.de. பார்க்கப்பட்ட நாள் 1 January 2021.
  2. "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 20 December 2018.
  3. "Amroha Pin code". citypincode.in. பார்க்கப்பட்ட நாள் 21 March 2014.
  4. Amroha Population, Religion, Caste Census 2011
  5. "अमरोही आम की नायाब क़लमी क़िस्में". BBC. 7 August 2004. https://www.bbc.com/hindi/regionalnews/story/2004/08/040807_mango_amroha. 
  6. Amroha railway station

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்ரோகா&oldid=3527933" இலிருந்து மீள்விக்கப்பட்டது