அயோடால்

வேதிச் சேர்மம்

அயோடால் (Iodal) என்பது C2HI3O என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அயோடினேற்றம் பெற்ற ஆல்டிகைடு சேர்மம் அயோடால் எனப்படுகிறது. மூவயோடோ அசிட்டால்டிகைடை இதற்கு உதாரணமாகக் கூறலாம். குளோரால், புரோமால் சேர்மங்களை ஒத்த சேர்மமாக அயோடால் கருதப்படுகிறது. காரநெடி கொண்ட வெளிர் மஞ்சள் நீர்மமாக அயோடால் காணப்படும். அயோடாலை பொட்டாசுடன் சேர்த்து வினைபுரியச் செய்தால் அயோடோபார்மாக சிதைவடைகிறது.[1] இலியோபோல்ட் கிமெலின் 1837 ஆம் ஆண்டு இதைக் கண்டறிந்து பெயரிட்டார்.[2]

அயோடால்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மூவயோடோயெத்தனால்
வேறு பெயர்கள்
மூவயோடோ அசிட்டால்டிகைடு
இனங்காட்டிகள்
5703-34-4 Y
ChemSpider 72077
EC number 227-192-0
InChI
  • InChI=1S/C2HI3O/c3-2(4,5)1-6/h1H
    Key: SNWLPURUNKWTPY-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 79783
  • C(=O)C(I)(I)I
பண்புகள்
C2HI3O
வாய்ப்பாட்டு எடை 421.74 g·mol−1
தோற்றம் வெளிர் மஞ்சள் நீர்மம் அல்லது திண்மம்
தண்ணிருடன் வினைபுரிந்து நீரேற்று உருவாகும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

எத்தனால் மற்றும் அயோடினுடன் செறிவூட்டப்பட்ட நைட்ரிக் அமிலத்தை வினையூக்கியாகச் சேர்த்து வினைபுரியச் செய்தால் அயோடால் உருவாகும்.[1] இதன்நீரேற்று நீரில் கரையக்கூடிய, வெண்மையான பட்டுப் போன்ற படிகங்களாக விவரிக்கப்பட்டது.[3] பெரும்பாலான அயோடின் சேர்மங்களைப் போலவே, அயோடாலும் சூரிய ஒளியின் கீழ் நிலைப்புத்தன்மையற்று உள்ளது. காலப்போக்கில் அயோடினை வெளியிடுகிறது.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Iodal, Gmelin, L. (1855). Hand-book of Chemistry: Organic chemistry. UK: Cavendish Society. pages 186-187
  2. "Iodal" in Intelligence and Miscellaneous Articles, London and Edinburgh Philosophical Magazine and Journal of Science (1837)
  3. Iodal in Chemical Notices from Foreign Sources, The Chemical News: With which is Incorporated the Chemical Gazette: a Journal of Practical Chemistry in All Its Applications to Pharmacy, Arts, and Manufactures. (1862). UK: C. Mitchell and Company.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயோடால்&oldid=3923022" இலிருந்து மீள்விக்கப்பட்டது