குளோரால்

வேதிச் சேர்மம்

குளோரால் (Chloral) என்பது Cl3CCHO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். டிரைகுளோரோ அசிட்டால்டிகைடு, டிரைகுளோரோயெத்தனால் என்ற பெயர்களாலும் இச்சேர்மத்தை அழைக்கிறார்கள். நிறமற்றதாகவும், எண்ணெய்த் தன்மை கொண்டதாகவும் பரவலான கரைப்பான்கள் பலவற்றில் கரையக்கூடியதாவும் இந்த ஆல்டிகைடு காணப்படுகிறது. தண்ணீருடன் குளோரால் வினைபுரிவதால் குளோரால் ஐதரேட்டு என்ற சேர்மம் உருவாகிறது. ஒரு காலத்தில் மயக்க மருந்தாகவும் தூக்க மருந்தாகவும் இதைப் பயன்படுத்தினார்கள்.

குளோரால்
குளோரால்
குளோரால்
குளோரால்
குளோரால்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
டிரைகுளோரோ அசிட்டால்டிகைடு
வேறு பெயர்கள்
டிரைகுளோரோயெத்தனால்
இனங்காட்டிகள்
75-87-6 Y
ChemSpider 6167 Y
EC number 200-911-5
InChI
  • InChI=1S/C2HCl3O/c3-2(4,5)1-6/h1H
    Key: HFFLGKNGCAIQMO-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C14866 Y
பப்கெம் 6407
  • ClC(Cl)(Cl)C=O
UNII FLI06WS32H Y
பண்புகள்
C2HCl3O
வாய்ப்பாட்டு எடை 147.38 g·mol−1
தோற்றம் நிறமற்றது, எண்ணெய் தன்மை கொண்டது
மணம் காரச்சுவை மற்றும் எரிச்சலூட்டும்
அடர்த்தி 1.404 கி/செ.மீ3
உருகுநிலை −57.5 °C (−71.5 °F; 215.7 K)
கொதிநிலை 97.8 °C (208.0 °F; 370.9 K)
கரையக்கூடிய குளோரால் ஐதரேட்டாக உருவாகும்.
எத்தனால்-இல் கரைதிறன் கலக்கும்
டை எத்தில் ஈதர்-இல் கரைதிறன் கலக்கும்
குளோரோபாம்-இல் கரைதிறன் கலக்கும்
காடித்தன்மை எண் (pKa) 9.66
-67.7•10−6 செ.மீ3/மோல்
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.45572
தீங்குகள்
Lethal dose or concentration (LD, LC):
480 mi.மி.கி/கி.கி (எலி, வாய்வழி)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

ஐதரோகுளோரிக் அமிலத்தின் முன்னிலையில் அசிட்டால்டிகைடை குளோரினேற்றம் செய்து குளோரால் ஐதரேட்டை உற்பத்தி செய்வதன் மூலம் குளோரால் வர்த்தக முறையில் தயாரிக்கப்படுகிறது. எத்தனாலையும் மூலப்பொருளாகப் பயன்படுத்தலாம். ஆண்டிமனி டிரைகுளோரைடு இந்த வினைக்கான வினையூக்கியாகச் செயல்படுகிறது.

H3CCHO + 3 Cl2 + H2O → Cl3CCH(OH)2 + 3 HCl

வினைகலவையில் இருந்து குளோரால் ஐதரேட்டு காய்ச்சி வடிக்கப்படுகிறது. வடிநீர்மத்தை அடர் கந்தக அமிலத்துடன் சேர்த்து அதிலுள்ள நீர் நீக்கப்படுகிறது. அதன் பின்னர் கனமான அமில அடுக்கை தனித்துப் பிரிக்கிறார்கள்.

Cl3CCH(OH)2 → Cl3CCHO + H2O

உருவாகும் விளை பொருளை பின்னக் காய்ச்சி வடித்தல் முறையில் தூய்மை செய்கிறார்கள்.[1]. குளோரினேற்றம் அடைந்த தண்ணீரில் இருந்தும் கூட சிறிதளவு குளோரால் தயாரிக்கப்படுகிறது.

முக்கிய வினைகள்

தொகு

குளோரால் தண்ணீருடன் சேர்ந்து குளோரால் ஐதரேட்டு போன்ற கூட்டுசேர் பொருட்களையும் ஆல்ககால்களையும் கொடுக்கிறது. நீரேற்றாக உருவாகும் இப்பண்பு ஒரு புறமிருந்தாலும் டைகுளோரோடைபீனல்டிரைகுளோரோயீத்தேன் எனப்படும் பூச்சிக் கொல்லி தயாரிப்பில் குளோரால் ஒரு கட்டுறுப்புத் தொகுதியாகப் பயன்படுகிறது என்பதும் ஒரு முக்கியமான வினையாகும். இச்செயல்முறைக்காக குளோரால் வினையூக்க அளவு கந்தக அமிலத்தின் முன்னிலையில் குளோரோபென்சீனுடன் சேர்த்து சூடுபடுத்தப்படுகிறது.

Cl3CCHO + 2 C6H5Cl → Cl3CCH(C6H4Cl)2 + H2O

1874 ஆம் ஆண்டு ஆத்மர் செய்ட்லர் இவ்வினையைக் கண்டறிந்தார் [2]. இதனுடன் தொடர்புடைய மெத்தாக்சிகுளோர் என்ற களைக்கொல்லியைத் தயாரிக்கவும் குளோரால் பயன்படுகிறது. சோடியம் ஐதராக்சைடுடன் குளோராலைச் சேர்த்து சூடுபடுத்துவதால் குளோரோபாமும் (Cl3CH) சோடியம் பார்மேட்டும் (HCOONa) உருவாகின்றன.

Cl3CCHO + NaOH → Cl3CH + HCOONa

குளோரால் எளிமையாக டிரைகுளோரோயெத்தனாலாக ஒடுக்கப்படுகிறது. குளோரால் மூலமாகவே இது உடலில் உற்பத்தியாகிறது [1].

பாதுகாப்பு

தொகு

குளோரால் எளிதாக குளோரால் ஐதரேட்டாக உருவாகிறது என்றாலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பண்புகளையே இவை கொண்டுள்ளன. நோயாளிகளுக்கு வழக்கமாக கிராம் அளவுகளில் கொடுக்கப்படும் போது எந்தவிதமான தீங்குகளையில் இது தருவதில்லை. தொடர்ச்சியான வெளிப்பாடு உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் [1].

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Reinhard Jira, Erwin Kopp, Blaine C. McKusick, Gerhard Röderer, Axel Bosch and Gerald Fleischmann "Chloroacetaldehydes" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2007, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a06_527.pub2
  2. Othmar Zeidler (1874). "Verbindungen von Chloral mit Brom- und Chlorbenzol". Berichte der deutschen chemischen Gesellschaft 7 (2): 1180–1181. doi:10.1002/cber.18740070278. http://babel.hathitrust.org/cgi/pt?id=uiug.30112025694776;view=1up;seq=231. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளோரால்&oldid=2543407" இலிருந்து மீள்விக்கப்பட்டது