அரசினர் கலைக் கல்லூரி, உடுமலைப்பேட்டை
(அரசினர் கலைக்கல்லூரி, உடுமலைப்பேட்டை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அரசுக் கலைக் கல்லூரி உடுமலைப்பேட்டை (Government Arts College, Udumalpet) இந்தியாவின் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்தின் உடுமலைப்பேட்டையில் செயற்பட்டுவரும் தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 1971ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[2] தற்போது கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.[3] தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் (NAAC) "ஏ" தர மதிப்பீட்டுடன் மொத்தமாக 37.37 ஏக்கர் பரப்பளவைக் கொண்டு இயங்கிவருகிறது.[4]தற்போது, இருபது இளநிலைப் படிப்புகளும், பத்து முதுகலைப் படிப்புகளும், முப்பது ஆராய்ச்சி படிப்புகளும் வழங்கப்படுகின்றன.[5] கிறிஸ்டியனல் மேரி சுகுணாவதி இக்கல்லூரியின் முதல்வராக உள்ளார்.[6]
வகை | அரசினர் கலைக்கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1971 |
தலைவர் | தமிழ்நாடு அரசு |
முதல்வர் | கிறிஸ்டினல் மேரி சுகுணாவதி |
மாணவர்கள் | 2951 |
அமைவிடம் | , , |
இணையதளம் | http://gacudt.in/ |
வழங்கும் படிப்புகள்
தொகுஇக்கல்லூரியில் இருசுழற்சிகளாக பின்வரும் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
அறிவியல்
தொகு- கணிதம்
- இயற்பியல்
- வேதியியல்
- கணினி அறிவியல்
- தாவரவியல்
- விலங்கியல்
கலை மற்றும் வணிகவியல்
தொகு- சுற்றுலா
- தமிழ்
- ஆங்கிலம்
- பொருளியல்
- வணிகவியல்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Colleges in Tamil Nadu
- ↑ உடுமலைப்பேட்டை கலைக்கல்லூரியின் வரலாறு
- ↑ "பாரதியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-10-25.
- ↑ 37.37 ஏக்கரில் செயற்பட்டுவரும் உடுமலைப்பேட்டை அரசினர் கலைக்கல்லூரி
- ↑ வழங்கப்படும் படிப்புகள்
- ↑ உடுமலைப்பேட்டை கலைக்கல்லூரி முதல்வர்கள்